மதுரை அரசாளும் அன்னை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஷ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம் -வரலாற்றுப் பார்வை
17 ஆண்டுகளுக்குப் பின் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்
2026 செப்டம்பர் 17 ஆம் தேதியன்று நடைபெறுகிறது புதன்கிழமை காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெறும் பாண்டியர் குலப் பேரரசி, கயல்விழி, அங்கையற்கன்னி மதுரை ஆளும் மங்கையர்கரசி அன்னை ஸ்ரீ மீனாட்சி தடாதகை பிராட்டியார் மற்றும் சோமசுந்தரரேஷ்வர் தமிழ் சங்கம் கண்ட எந்தை ஈசன் சொக்கநாதப்பெருமான் ஆலயத் திருக்குடமுழுக்கு விழா வைபவம்
சிறப்பாக நடைபெறுகிறது. "பூமகள் போற்றப் புவிமகள் துதிக்க, நாமகள் நாவில் நயம்பட விளங்க, திசையனைத்தும் வென்ற சீர்த்திப் பிரதாபி, மலையத்துவசன் பெற்ற மாபெரும் செல்வி, பாண்டியர் குலவிளக்கு, பராசக்தி வடிவம், தடாதகைப் பிராட்டியார் தண்பதி ஆள, நவரத்தின மணிமகுடம் நன்முடி சூடி, நவமணிச் செங்கோல் நயம்பட ஏந்தி, அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சி மதுரை மாநகர அரசியாக வீற்றிருந்தாள் வாழ்க"!
"ஸ்வஸ்திஸ்ரீ! சமஸ்த புவனாச்ரய, ஸ்ரீப்ருத்வீ வல்லப, மஹாராஜாதிராஜ, பரமேஸ்வர, பரமபட்டாரக, சகல குணரத்ன ரத்னாகர,பாண்டிய குல திலக, மதுராபுரி நாயகி,ஸ்ரீ மீநாக்ஷி மஹாதேவ்யாருக்கு.." என .ஹெச்சரி எச்சரிக்கையில் பராக்கு
ஆண்டு தோரும் முடி சூடிய சித்திரை பட்டாபிஷேக நாளின் மூலம் மதுரையில் முத்திரை பதித்து அரசாளும் அன்னை மீனாட்சி அம்மனின் பாண்டிய நாட்டு ஆட்சிக் காலம் (சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரை) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் பாண்டிய மன்னர்களின் வழிவழித் தெய்வமாகவும், அவர்களின் கலை மற்றும் பக்தித் திருப்பணிகளின் முதன்மைச் சின்னமாகவும் விளங்குகிறது. சங்க காலம் தொட்டே முற்காலப் பாண்டிய அரசர்கள் இந்த ஆலயத்தை பராமரித்து வந்தாலும், பொது ஆண்டு 12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டிய மன்னர்களின் காலத்தில் தான் கோவிலின் முக்கியமான கோபுரங்களும், கருவறைக் கட்டுமானங்களும், மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்ட,ன
முதலாம் ஜடையவர்மன் குலசேகர பாண்டியன் பொது ஆண்டு 1190 ஆம் ஆண்டு முதல் 1216 ஆம் ஆண்டு வரை மூலக் கோவில் கட்டுமானம் நடந்து திருவிளையாடல் புராணத்தின் அடிப்படையில் ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்குக் கோவிலை முறையாகக் கட்டி எழுப்பிய பெருமை இவரையே சேரும். சுவாமி சுந்தரேசுவரர் சன்னதி நுழைவாயிலில் உள்ள மூன்றடுக்குக் கோபுரத்தின் முக்கியப் பகுதிகளை இவரே அமைத்தார். அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மன் சன்னதியின் மையப் பகுதி மற்றும் கருவறைக் கட்டுமானப் பணிகளை இவர் மேற்கொண்டார்.
அடுத்து மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொது ஆண்டு 1216 ஆம் ஆண்டு முதல் 1238 ஆம் ஆண்டு வரை நடந்த ஆட்சியில் கிழக்குக் கோபுரம் இது இப்போதும் சுந்தரபாண்டியன் கோபுரம் என அழைக்கும் நிலை கோவிலின் பழமையான மற்றும் கலைநயமிக்க ஒன்பது அடுக்கு கிழக்குக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளை இவர் தொடங்கினார், இவர் போர்களில் வென்ற பெரும் செல்வத்தைக் கொண்டு சுவாமி மற்றும் அம்மன் சன்னதி விமானங்களுக்குப் பொன்னால் வேய்ந்து தங்கக் கூரை அமைநனத்து சிறப்புச் செய்தார். அடுத்து ஜடையவர்மன் சுந்தரபாண்டியன்
பொது ஆண்டு 1251ஆம் ஆண்டு முதல் 1268 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காலம் 1250 ஆம் ஆணடில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் சேதமடைந்த சுவாமி கருவறை, நடராசர் சன்னதி மற்றும் கோபுரங்களை இவர் உடனடியாகச் சீரமைத்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்காகப் பிரம்மாண்டமான புதிய தேர் ஒன்று செய்யப்பட்டுத் திருவிழாக்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம், அடுத்து பராக்கிரம பாண்டியன் பொது ஆண்டு 1315 ஆம் ஆண்டு முதல் 1347 ஆம் ஆண்டு வரை முகலாயப் படை எடுப்புக்குப் பின் சுமார் 154 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான மேற்குக் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் இவருடைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.கல்வெட்டுகளும் அம்மனின் திருப்பெயரும் மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் 410 வரலாற்று ஆய்வுக் கல்வெட்டுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலானவை பிற்காலப் பாண்டியர்களின் காலத்தைச் சேர்ந்தவை. பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மன், "திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்", "கயற்கண்ணி", மற்றும் "தடங்கண்ணி" ஆகிய தூய தமிழ்ப் பெயர்களாலேயே குறிக்கப்பட்டுள்ளார் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பொது ஆண்டு 1268 முதல் 1310 ஆம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட பிற்காலப் பாண்டியர்களின் கடைசி மாபெரும் பேரரசர் நீண்ட காலம் திறம்பட ஆட்சி செய்தார்,1279- ஆம் ஆண்டில் சோழப் பேரரசர் மூன்றாம் ராஜேந்திரனையும், ஹோய்சாள மன்னன் ராமநாதனையும் தோற்கடித்துப் பாண்டியப் பேரரசை உலக உச்சத்திற்குக் கொண்டு சென்ற இந்த வெற்றியால் பாரதத்தில் நீண்ட காலம் நடந்த சோழராட்சி முடிவுக்கு வந்தது. தெற்கே இலங்கை வரைக்கும், வடக்கே தேவகிரி ஜாதவ் எனும் யாதவர்களின் தேச எல்லை, துவாரஹசமுத்திரம் ஹொய்சால நாடு மற்றும் வாரங்கல் காக்காத்திய நாடுகள் வரைக்கும் இவருடைய ஆட்சிப் பரப்பளவு பரந்து விரிந்திருந்தது. காயல்பட்டினம், தூத்துக்குடி போன்ற துறைமுகங்கள் மூலம் வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார். முத்துக் குளித்தல் மற்றும் குதிரை வணிகம் செழித்தோங்கியது, மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்கிச் சிறப்புச் செய்தார். ஆனால் இவரது மறைவுக்குப் பிறகு 1310-ஆம் ஆண்டுக்குப் பின் இவரது முதல் மனைவி மகனான சுந்தர பாண்டியனுக்கும் இரண்டாம் மனைவி மகனான வீர பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்ட குழப்பம் உள்நாட்டுப் போர் மற்றும் இஸ்லாமிய படைகளின் வருகை வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் இடையே அரியணைக்காக வாரிசுரிமையில் மூண்ட மோதல் போர்களில் வீரபாண்டியன் வெற்றி பெற்று மதுரையைத் தன்வசப்படுத்தினான். போரில் தோற்றுப்போய் நாட்டை இழந்த சுந்தரபாண்டியன், டெல்லி சுல்தானகத்தின் உதவியை நாடினான். இதைப் பயன்படுத்திக் கொண்டு அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவரான அலி மாலிக் கபூர் பொது ஆண்டு 1311-ஆம் ஆண்டில் மதுரை மீது படையெடுத்து வந்து வீரபாண்டியன் ஆட்சியை வீழ்த்தி மதுரை மீட்டு சுந்தரபாண்டியனை ஆட்சியில் அமர்த்தி பின் பாண்டியநாட்டில் இராமேஸ்வரம் கோயில் வரை சென்று கொள்ளையடித்த உருது முகலாயப் படை பல இடங்களில் அந்தக் காலத்தில் தான் தர்ஹா உறுவான நிலை 96 ஆயிரம் மணங்கு பொன்னும் (ஒருமணங்கு என்பது ஒரு யானை சுமக்கும் சுமை)அந்த அளவு பொன்னும் பொருளும் கொள்ளையடித்துக் கொண்டு சென்ற நிலையில், இந்த உள்நாட்டுப் பூசலும் டெல்லி முகலாய வெளிநாட்டுப் படையெடுப்பும் மதுரை பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலின் இன்றைய பிரம்மாண்டமான வடிவத்திற்கு நாயக்கர் மன்னர்களின் திருப்பணிகளே மிக முக்கியமான காரணமாகும். 14-ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் படையெடுப்பால் சிதிலமான சேதமடைந்த கோவிலை, விஜயநகரப் பேரரசின் உதவியோடு மீட்டெடுத்து, கலைநயமிக்க கோபுரங்களாகவும், மண்டபங்களாகவும் மாற்றி அமைத்த பெருமை மதுரை நாயக்கர் மன்னர்களையே சாரும் விஸ்வநாத நாயக்கர் திருப்பணிகளானது பொது ஆண்டு 1559 -முதல் 1563 ஆம் ஆண்டு வரை நாயக்க்ர் வம்சத்தின் முதல் மன்னரான விஸ்வநாத நாயக்கர், மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலை ஆகம விதிகளின்படி மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தி பந்தடித் தெரு வரை பாண்டியர் கால அரண்மனை இருந்த பகுதி வரை அரண்மைத்தார். அதுவே அகில் தெரு இவரது ஆலோசனையின் பேரில், புகழ்பெற்ற அமைச்சர் தளவாய் பிரதானி அரியநாத முதலியார் கோவிலின் முக்கியப் பிரகாரங்களையும் பல மண்டபங்களையும் கட்டத் தொடங்கினார். ஆயிரங்கால் மண்டபம் இது வீரப்ப நாயக்கர் காலம் பொது ஆண்டு 1569-ல் அரியநாத முதலியாரால் இந்த உலகப் புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
இம்மண்டபத்தின் தூண்களில் உள்ள சிற்பங்களும், நுழைவாயில் மேற்கூரையில் செதுக்கப்பட்டுள்ள தமிழ் வருஷங்கள் 60-ஐக் குறிக்கும் வானியல் சக்கரமும் நாயக்கர் கால சிற்பக் கலைக்குச் சிறந்த சான்றாகும். மன்னர் திருமலை நாயக்கரின் பொற்காலத் திருப்பணிகள் பொது ஆண்டு 1623 -முதல் 1659 வரை சிறப்பு வாய்ந்த நாயக்க மன்னர்களில் திருமலை நாயக்கரின் ஆட்சிக் காலமே இக்கோவிலின் கட்டுமான வரலாற்றில் "பொற்காலம்" ஆகும்
.புதுமண்டபம் எனும் வசந்த மண்டபம்): சித்திரை திருவிழாவின் போது சுவாமி தங்குவதற்காக 124 கலைநயமிக்க தூண்களுடன் கூடிய பிரம்மாண்ட புதுமண்டபத்தை அமைத்தார். தெப்பக்குளம் வெட்டும் போது கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலையை, கோயிலின் உள்பிரகாரத்தில் தனிச் சன்னதி அமைத்து அந்த முக்குறுணி விநாயகர் சிலையை நிறுவினார். மதுரையின் புகழ்பெற்ற அழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவையும், ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணத்தையும் ஒன்றிணைத்து ஒரே பெருவிழா சித்திரைத் திருவிழாவாக மாற்றினார். கோவிலின் கிழக்கு நுழைவாயிலுக்கு எதிரே, பாரதநாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக மாற்றத் திட்டமிட்டு "ராஜகோபுரம்" கட்டுமானத்தைத் தொடங்கினார் (இதுவே தற்போது மொட்டை கோபுரமாக அறியப்படுகிறது). அதில் முனீஸ்வரர் உள்ளதாக ஐதிகம், பிற மண்டபங்களும் குளங்களும் கோயிலின் பிரதான கிழக்கு நுழைவாயிலாக விளங்கும் இம்மண்டபம், அம்பிகையின் எட்டு வடிவங்களைச் சித்தரிக்கும் சிலைகளுடன் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. புனிதமான பொற்றாமரைக்குளத்தின் சுவர்களில் திருவிளையாடல் புராணக் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டி அழகுபடுத்தினர்.
மதுரை நாயக்க மன்னர்களின் கடைசி பேரரசி ராணி மீனாட்சி பொது ஆண்டு 1731 முதல் 1736 வரை ஐந்து ஆண்டு ஆட்சியிலிருந்தார். புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் பேத்தி வழி மருமகளவார். கணவர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்த பிறகு, ராணி மீனாட்சி தன் கணவரின் பெயரால் ஒரு சிறுவனைத் தத்தெடுத்து அரசாதிபதியாக (Regent) நாட்டை ஆளத் தொடங்கினார். தத்தெடுக்கப்பட்ட சிறுவனின் தந்தையான பங்காரு திருமலையோடு அரியணைக்காக உள்நாட்டு மோதல் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி ஆற்காடு நவாப் மற்றும் சந்தா சாகிப் பெரும் படையுடன் மதுரைக்குள் நுழைந்தனர். இறுதியில் ராணி மீனாட்சி அதிகாரம் இழந்து திருச்சிராப்பள்ளி கோட்டையில் சிறை வைக்கப்பட்டுத் துயரமான முறையில் துக்கில் தொங்கிய நிலையில் காலமானார். மதுரைக்கு அரசாளும் அன்னை ஸ்ரீ மீனாட்சி மட்டுமே அரசி அவருக்கு இனையான அரசி வரமுடியாது இவரோடு மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆகவே முடிசூடும் மஹாராணி அன்னை ஸ்ரீ மீனாட்சி தான் என்பது இன்று வரை நிதர்சனம். செட்டிநாட்டுப் பகுதியில் கலாச்சாரம் மற்றும் பழக்கத்தில் பரவலாகக் கேட்கப்படும் வினா? "உங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா? அல்லது தில்லை ஆட்சியா?" என்பதன் பொருள்: "உங்கள் வீட்டில் மனைவியின் அதிகாரமா அல்லது கணவனின் அதிகாரமா ?" என்பதாகும். மதுரையின் முதன்மைத் தெய்வம் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மன். இங்கு அம்மனுக்கே முதல் மரியாதை மற்றும் பட்டாபிஷேகம். மன்னரே இருந்தாலும் அன்னை ஸ்ரீ மீனாட்சிக்கே மணிமகுடம் எனவே, ஒரு வீட்டில் மனைவியின் கை ஓங்கி இருந்தால், அதை "மதுரை ஆட்சி" என்பர். அதேபோல் தில்லை (சிதம்பரம்) நடராஜர் வீற்றிருக்கும் ஸ்தலம். இங்கு ஆடவல்லான் சிவனின் அதிகாரமே முதன்மையானது. எனவே, வீட்டில் கணவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நிர்வாகம் நடந்தால், அதை "தில்லை ஆட்சி" என்பர். இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பின் 1946 முதல் 2026 வரை) மொத்தம் 4 முறை மதுரையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது
கடந்த 100 ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1923, 1963, 1974, 1995 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகங்கள் நடந்துள்ளன. அப்போது பதவியில் இருந்த தமிழ்நாடு முதல்வர்கள் 1923: ஆம் ஆண்டு சென்னை மாகாண Madras Presidency முதல்வராக பனகல் அரசர் பதவி வகித்தார். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி ஆதரவாளர் பனகல் ராஜா சர் பனங்கன்டி ராமராயநிங்கார் 1928 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று கும்பாபிஷேகம் நடந்து இரண்டு ஆண்டில் தனது 62 ஆவது வயதில் காலமானார் அடுத்ததாக கே. காமராஜர் முதலமைச்சராக 1954 ஏப்ரல் 13 முதல் 1963 அக்டோபர் 2 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்தார்; கும்பாபிஷேகம் நடந்து முடிந்த சில மாதங்களில் பதவி இழந்தார்
அதே கட்சியின் எம். பக்தவத்சலம் அக்டோபர் 2, 1963 – மார்ச் 5, 1967 வரை பதவி வகித்தார்
1975 அக்டோபர் 2-ஆம் தேதி கு. காமராஜர் காலமானார். அடுத்ததாக.1974: ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக மு. கருணாநிதி இருந்த காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி கலந்து கொண்டார். அதன்பின் வந்த தேர்தல் மூன்று வருடத்தில் திமுக ட்சி உடைந்து அஇஅதிமுக உறுவாகி முதல்வர் எம்ஜிஆர் வசம் ஆட்சியை இழந்தார் அடுத்ததாக 1995: ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக செல்வி ஜெ. ஜெயலலிதா இருந்த காலத்தில் ஆலய புனரமைப்புடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா கலந்து கொண்டார் அதன் பின்பு 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் .66 கோடி அளவுக்குச் சொத்து சேர்த்த வழக்கில் .ஜெ.ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட தனி நீதிமன்றம் தீர்ப்பைத் தொடர்ந்து ஜெ.ஜெயலலிதா முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் தகுதியையும் இழந்தார். வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றார் அடுத்து 2009: ஆம் ஆண்டு முதல்வராக மு. கருணாநிதி மீண்டும் இருந்த காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. புகழ்பெற்ற மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திமுக ஆட்சியில் இருந்தாலும் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக கும்பாபிஷேகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முதல்வர் கலந்து கொள்ள இயலாத நிலை நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அரசு முறைப்படி அதிகாரப்பூர்வமாக இதில் கலந்து கொண்டு முன்னிலை வகிக்கவில்லை. ஆகம சாஸ்திரங்களின்படி பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். 2009-ஆம் ஆண்டுக்குப் பின் 2021-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். ஆனால், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று கோவிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து காரணமாகப் பணிகள் பாதிக்கப்பட்டு, தற்போது ரூபாய் 32 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 2026 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் மூலம் ஸ்ரீ மீனாட்சியம்மன் கருவறைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிய தங்க திருவாச்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.தமிழ் சங்கம் கணட புலவர் நக்கீர்ர் மற்றும் அனனை ஸ்ரீ மீனாட்சி உதித்தவர் தற்போது
2026 கும்பாபிஷேகம், மீனவ மக்களின் உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் குரல் கொடுத்து வரும் ஒரு தலைவராகவே கடலோர மக்களால் பார்க்கப்படுகிறார்.
தவெக தலைவர் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் தற்போது ஆட்சியில் நடக்கும் கும்பாபிஷேகம் என்பதால் கலந்து கொள்ள வாய்ப்பு, முதல்வர் கலந்து கொள்வரா என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது, கும்பாபிஷேகம் அழைப்பு மூலம் யாகசாலை பூஜைகள் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி தொடங்குகின்றன.
கும்பாபிஷேகம் செப்டம்பர் 17, 2026 வியாழன் அன்று அதி விமர்சையாக நடக்கும்
முன்னேற்பாட்டுப் பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் மற்றும் ஆணையர் இணை ஆணையர், மற்றும் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகரக் காவல்துறை ஆணையாளர் எஸ்.ராஜேந்திரன், மற்றும் மாநகராட்சி ஆணையர் செய்து வருகின்றனர்
கும்பாபிஷேக நிகழ்வுகளைப் பக்தர்கள் தெளிவாகக் கண்டு தரிசிக்க ஏதுவாகப் போதுமான இடங்களில் LED வண்ணத்திரைகள் அமைக்கப்பட உள்ளது, மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 16-ந்தேதி வரை மூலவர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமி சுந்தரேசுவரர் சன்னதி தரிசனம் இரத்து செய்யப்படுவதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவில் குடமுழுக்கு விழா, இதனையொட்டி, ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு வர்ணம் பூசும் பணிகளும், வெளிப்புறப் பணிகளும் முழுமையாக நிறைவுபெற்றுள்ளன. கோவிலில் உள்ள 415-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்களுக்கு 9 வகை மருந்து இடித்து சாற்றுதல் நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது பக்தர்கள் மீனாட்சி மற்றும் சுந்தரேசுவரர் சன்னதிகளை மட்டுமே தரிசித்து வரும் நிலையில், மற்ற அனைத்து தெய்வங்களின் சன்னதிகளிலும் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் திரையிடப்பட்டுள்ளது
விழாவிற்காக வடக்கு ஆடி வீதியில் 182 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலைகள் பந்தல் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 6- ஆம் தேதி தொடங்கி 17- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, 16-ஆம் தேதி பரிவார மூர்த்திகள் குடமுழுக்கும், 17- ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் திருக்க குடமுழுக்கு எனும் கும்பாபிஷேகப் பெருவிழாவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, கோவிலில் 18- ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை மண்டல பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குடமுழுக்கு பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை மூலவர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமி சுந்தரேசுவரரை பக்தர்கள் தரிசிக்க இயலாது. அந்த நாட்களில் மூலவர் சன்னதிகளில் திருப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு சுவாமி மற்றும் அம்மனுக்கு மருந்து சாற்றும் வைபவம் நடைபெறும். எனவே, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்பணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த நாட்களில் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் குடமுழுக்கு தினத்தன்று தான் அம்மன் மற்றும் சுவாமியைத் தரிசனம் செய்ய முடியும்” எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலும் கோயில்களில் அன்னதானம், பிரசாதங்கள் தயாரித்து வழங்குவதற்கான பிரத்யேக 'போக்' சான்றிதழை மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்குகிறது. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயிலுக்கான 'போக்' சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.
யாகசாலை, மற்றும் கும்பாபிஷேகத்தின் போது ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகள், மாரட் வீதிகளில் பக்தர்கள் இலவசமாக அன்னதானம், பிரசாதம், நீர்மோர், இனிப்பு, சர்பத், குளிர்பானம், தண்ணீர் பாட்டில்கள் வழங்குவர். இவர்கள் உணவுப்பாதுகாப்புத்துறையின் கீழ் foscos.fssai.gov.in இணையதளத்தில் ஆன்லைன் முறையில் ரூபாய் .100 கட்டணம் செலுத்தி பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிறார் மதுரை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராமபாண்டியன்.
அவர் கூறியதாவது "பக்தர்களுக்கு வழங்கும் உணவுப்பொருட்களில் செயற்கை சாயங்கள் பயன்படுத்தக்கூடாது. அரசால் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பை, பிளாஸ்டிக் கப்களை தவிர்க்க வேண்டும். உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வாங்கும் போது அவற்றின் தயாரிப்பு, காலாவதி தேதிகளை சரிபார்க்க வேண்டும்.
ஒருமுறை சான்றிதழ் பெற்றால் ஓராண்டு வரை செல்லும். ஏப்ரலில் நடந்த சித்திரைத் திருவிழாவின் போது அழகர்கோவில், மதுரை உள்ளிட்ட இடங்களில் அன்னதானம், பிற உணவுப்பொருட்கள் தானம் வழங்கிய 626 பேர் பதிவுச் சான்றிதழ் பெற்றுள்ளனர். இது ஓராண்டு வரை செல்லும் என்பதால் அந்த சான்றிதழ் உள்ளவர்கள் அன்னதானம் வழங்க நினைத்தால் மீண்டும் சரிபார்க்க வேண்டும். தற்காலிமாக உணவுக்கடை, குளிர்பான கடைகள் அமைப்பவர்களும் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என்றார்.
உணவுக் குறைபாடு தொடர்பான புகார்களுக்கு மொபைல் 94440 42322 வாட்ஸ்ஆப் எண்ணில் பதிவு செய்யலாம். பதிவெண் பெறுவதில் சந்தேகம் இருந்தால் தொலைபேசி 0452 - 264 0036 ல் தொடர்பு கொள்ளலாம். எனத் தெரிவித்துள்ளார், அன்னை ஸ்ரீ மீனாட்சி அரசி பட்டாபிஷேகம் ஆண்டு தோரும் சித்திரை மாதம் நடைபெறும், மலயத்வஜ பாண்டியன் மற்றும் காஞ்சனமாலை மகளாக அவதரித்த தடாதகைப் பிராட்டியார் (ஸ்ரீ மீனாட்சி அம்மன்) மதுரையின் அரசியாக முடிசூட்டப்படும் தெய்வீக வரலாற்று நிகழ்வு சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாள் இரவில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இந்த விழா பிரம்மாண்டமாக நடக்கும்.ராயர் கிரீடம்: விஜயநகர மன்னரின் அமைச்சரால் உபயமாக வழங்கப்பட்ட, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட புகழ்பெற்ற 'ராயர் கிரீடம்' அன்னைக்கு சூட்டப்படும்.செங்கோல் வழங்குதல்: திருமலை நாயக்கரால் வழங்கப்பட்ட, நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அரச செங்கோல் அம்மனிடம் சமர்ப்பிக்கப்படும், அன்னைக்குரிய செங்கோல் முதலில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டு, பிரகாரத்தை வலம் வந்த பின் மீண்டும் அம்மனிடம் முறைப்படி சமர்ப்பிக்கப்படும். பாண்டிய பேரரசியின் பட்டாபிஷேகத்தின் போது பாண்டிய நாட்டின் பாரம்பரிய முத்திரைகளான மகர முத்திரை, விஷ்ணு முத்திரை, பொன் எழுத்தாணி, வேப்பம்பூ மாலை ஆகியவை அன்னைக்கு அணிவிக்கப்படும். மீனாட்சியின் ஆட்சி முறை மதுரையில் இந்த பட்டாபிஷேகத்தின் மூலம் அன்னையின் பொற்கால ஆட்சி தொடங்குகிறது. தமிழ் மாத கணக்குப்படி, சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்களுக்கு மதுரையை மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்கிறார். 9 ஆம் நாள் அன்னை மீனாட்சி திசை எட்டும் வெல்லும் திக்விஜயம் நிகழ்வு. 10 ஆம் நாள்: உலகப் புகழ்பெற்ற மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம். 11 ஆம் நாள்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் மாபெரும் சித்திரை வீதிககளில் வலம் வரும் தேர்த்திருவிழா. சிறப்பு.... "மங்களம் அருள்வாய் மதுரைக்கு அரசி அங்கையற் கண்ணி அருள் மீனாட்சி அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி..... திங்களைச் சூடிய சிவனுக்கு துணைவிசெல்வி மீனாட்சி செந்தமிழ்ப் பாவை திருமணக் கோலம் திகழ்ந்திடும் பூவை........ சங்கத் தமிழ் போல தனித்தவள் சக்திதமிளின் சுவை போல் இனிப்பவள் சக்திகுங்குமம் தருபவள் குலமகள் சக்திகும்பிட்டு நினைப்பதைக் கொடுப்பவள் சக்தி..... தாமரை போன்ற தலைநகர் நடுவேதனித்திருப்பாள் மீனாட்சிகோமகள் வடிவில் கோபுர நகரில்குடிவிருப்பாள் மீனாட்சி"
































.jpg)




























கருத்துகள்