முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போலி வைத்தியர் சிகிச்சைக்கு போலீஸ் மாமூல் ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம்.

போலி வைத்தியர் சிகிச்சைக்கு போலீஸ் மாமூல் ஆய்வாளர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம். 


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் காவலர் ஜெயராஜ் ஆகியோர் லஞ்சம் வாங்கிய புகார் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

புத்தூர் கட்டு பாண்டி என மாற்றுப் பெயரில் மருத்துவம் படிக்காமல்  நுட வைத்தியம் பார்க்கும்  நாட்டு மருத்துவர் நெடுஞ்செழியன் என்பவர்  சமீபத்தில் போலி மருத்துவர் என கைது ஆனார் பின் ஜாமீனில் வெளிவந்தார் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டதில், தன்னிடம் மக்கள் மருத்துவம் பார்க்க அனுமதிப்பதற்கு 


 காவல் ஆய்வாளர் சீனிபாபு ஒவ்வொரு மாதமும் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், தராவிட்டால் பொய் வழக்குப் போடுவதாக மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் நான்கு மாதங்களுக்கு முன்பு காவலர் ஜெயராஜ் தன்னிடம் லஞ்சம் வாங்கியதற்கான CCTV பதிவு காட்சிகளையும் அவர் ஆதாரமாக வெளியிட்டார்.       இந்த வீடியோ  சமூக வலைத்தளங்களில்  வைரலானதைத் தொடர்ந்து மாவட்டக் காவல் துறையின் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து காவல்துறை ஆய்வாளர் சீனிபாபு மற்றும் தற்போது கல்லல் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஜெயராஜ் ஆகிய இருவரையும் தற்போது பணியிடை நீக்கம்  செய்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைகளின் பின்னணி விபரம் மற்றும் உண்மை நிலவரம் :- அதிமுகவைச் சேர்ந்த ஆ. தெக்கூர் நாகலிங்கம் மகன்




நெடுஞ்செழியன் இவர் பள்ளிக் கல்வியை சரியான முறையில் தொடராமல் துவரங்குறிச்சியில் உள்ள போலி புத்தூர் நுட வைத்திய மருத்துவமனை என்ற பெயரில் ஒருவர் நடத்திய  நிலையில்  அவரிடம் கம்பவுண்டர் போல பயிற்சி எடுத்து பின் இவரே மருத்துவராக மாறி  உதயகீதம் படத்தில் நடிகர் கவுண்ட மணி  வைத்த உண்டியல் போல பல கிளைகள் திறந்த போதே காவல்துறை வருமான வரித்துறை மற்றும் சுகாதாரத்துறை சுதாரித்து இவர்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற போலி நபர்களைத் தடுத்திருக்க முடியும், ஆனால் இதுவரை எடுக்காமல் இருக்கக் காரணம் விசாரணை முடிவில் இனிமேல் தானே தெரியும். 


முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யாமல் மருத்துவம் பார்ப்பது சட்டப்படி  கடுமையான  ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். இத்தகைய போலி மருத்துவர்கள் மீது தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 (National Medical Commission Act) தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் பிரிவு 34 மற்றும் 54-ன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் படிப்பு படிக்காமல் அலோபதி  மருத்துவம் பார்ப்பது சட்டவிரோதமாகும். சட்டப்பிரிவு: Section 34(2).தண்டனை: 1 ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ரூபாய் 5 லட்சம் வரை அபராதம், அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். மேலும் பாரதிய நியாய சன்ஹிதா  அதற்கு முன் இந்திய தண்டனைச் சட்டம் போலி மருத்துவர்கள் மீது காவல் துறையினர் பொதுவாகப் பதிவு செய்யும் முக்கிய குற்றவியல் பிரிவுகள்:ஆள்மாறாட்டம் செய்தல்  மருத்துவர் இல்லை என்றாலும், தன்னை ஒரு மருத்துவர் போலக் காட்டி ஏமாற்றுவதற்கு 


BNS பிரிவு 319 (பழைய IPC 419)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதற்கான தண்டனை 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை ஆகும்.ஏமாற்றுதல்  நோயாளிகளை ஏமாற்றிப் பணம் பறித்தல் மற்றும் உயிருக்கு ஆபத்தான சிகிச்சை அளிப்பதற்கு BNS பிரிவு 318 (பழைய IPC 420)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதற்கான தண்டனை 7 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகும்.போலி ஆவணங்களை உருவாக்குதல் போலி மருத்துவச் சான்றிதழ்கள் அல்லது பட்டங்களைப் பயன்படுத்தினால் BNS பிரிவு 336 & 340 (பழைய IPC 465, 468, 471) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.3. உயிரிழப்பு அல்லது அலட்சியம் ஏற்பட்டால்தகுதியற்ற நபர் அளித்த தவறான சிகிச்சையால் நோயாளிக்கு ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால், அது சாதாரண மருத்துவ அலட்சியமாக  கருதப்படாது. சட்டப்பிரிவு: BNS பிரிவு 106 (பழைய IPC 304A) - அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்.தண்டனை: போலி மருத்துவராக இருக்கும் பட்சத்தில், அது திட்டமிடாத கொலைக் குற்றமாக (Culpable Homicide) மாற்றப்பட்டு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 ஆம் ஆண்டு முறையான தகுதி மற்றும் உரிமம் இல்லாமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளை அல்லது ஊசிகளைப் பரிந்துரைப்பதும், விற்பனை செய்வதும் இச்சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்கும் தனியாகச் சிறைத் தண்டனையும் அபராதமும் உண்டு. தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019  ன் பிரிவு 34 மற்றும் 54-ன்படி, இதற்கு 1 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் . 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (NMC Act, 2019 - பிரிவு 34 & 54): உரிய தகுதியோ அரசிடம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பதிவோ இல்லாமல் மருத்துவம் பார்ப்பவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூபாய் 5,00,000 வரை அபராதம், அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். இந்த நிலையில் காவல்துறை ஆய்வாளர் லஞ்சம் கேட்டு தொந்தரவு,

ஒரு மாதம் லஞ்சம் கொடுத்ததாகவும், மாதம் மாதம் லஞ்சம் கொடுத்தால் தான் தொழில் செய்ய முடியும் கொடுக்காவிட்டால் பெய் வழக்கு போட்டு தொழில் செய்ய விடாமல் தடுத்து விடுவேன் என ஆய்வாளர் மிரட்டியதாக புத்தூர் கட்டு பாண்டி என்ற அடைமொழி கொண்ட நெடுஞ்செழியன் என்பவர் வீடியோ வெளியிட்டார் 

முன்னாள் காவல்துறை ஆய்வாளர் தயாளனுக்கு பணம் கொடுத்ததாக சிசிடிவி காட்சி வெளியிட்ட நிலையில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காவல் நிலைய ஆய்வாளர் சீனிபாபு, அங்கு தொழில் செய்பவர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய வீடியோவும், மற்றொரு முன்னாள் காவல்துறை ஆய்வாளருக்கு ரூபாய் . 1 லட்சம் லஞ்சம் கொடுத்த சிசிடிவி (CCTV) காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.   இந்த லஞ்ச விவகாரத்தின் வைரல் வீடியோவின் பின்னணி மாதாந்திர மாமூல் மிரட்டல் என்பது  நாட்டு மருத்துவத் தொழில் செய்து வரும் 'புத்தூர் கட்டு' பாண்டி ன்ற நெடுஞ்செழியன் என்ற போலி வைத்தியரிடம் , லஞ்சப் பணம் தர மறுத்தால் பொய் வழக்குப் போட்டு, தொழிலை செய்ய விடாமல் முடக்கி விடுவேன் என ஆய்வாளர் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, அங்கு பணியாற்றிய முன்னாள் ஆய்வாளர் ஒருவருக்கு, வழக்கை முடிக்க ரூபாய் . 1 லட்சம் லஞ்சம் கைமாறியதாக அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சியும் தற்போது அடுத்தடுத்து வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் காட்டியதைத்  தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மற்றும் மாவட்டக் காவல்துறை இணைந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டனர்.காவல்துறையினர் யாராவது லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக கீழே உள்ள எண்களைத் தொடர்பு கொண்டு ரகசியமாகப் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது: புகார் எண் WhatsApp  7598788108  புகார் அளிப்பவர்களின் விபரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும்.  என்பதே . ஆனால் தற்போது நிலைமை வேறு, உண்மையான ஆந்திராவில் சித்தூர் அருகில் உள்ள புத்தூர் ராஜபாளையம் கிராமத்தில் பாரம்பரிய ஜமீன் கே. கேசவ ராஜு என்பவரால் 1881-ஆம் ஆண்டில்  கண்டுபிடிக்கப்பட்ட பாரம்பரிய எலும்பு முறிவு மருத்துவ மூலிகை முறையில் தான் புத்தூர் கட்டு உண்மை உள்ளது, அது அந்தக் குடும்பம் தவிர வேறு யாரும் அறியாத மூலிகை ஆகும். இது ஒரு பாரம்பரிய மருத்துவ முறை என்பதால், இதற்கு எந்த ஒரு தனி நபருக்கும் காப்புரிமை  அல்லது பிரத்யேகப் பெயர் உரிமை கிடையாது. பல குடும்ப வாரிசுகளும் பாரம்பரிய மருத்துவர்களும் இந்த முறையைப் பயன்படுத்தி போலியாக பல ஊர்களில் சிகிச்சை அளிக்கின்றனர். ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டம், புத்தூர் அருகில் உள்ள ராஜப்பாளையம் (ஈசலாபுரம்). மூலிகைகள் மற்றும் பிரத்யேக இலைகளை அரைத்து எலும்பு முறிவு உள்ள இடத்தில் கட்டுவது. பொதுவான பாரம்பரிய முறை என்பதால் பலரும் தங்கள் பெயரில் சம்பந்தா சம்பந்தம் இல்லாத பலநபர்கள் தமிழ்நாட்டு ஐயங்கார் பேக்கரி போல கிளைகளை நடத்தி வருகின்றனர். எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு உடைந்த எலும்புகள் சேர்ந்திருந்தால் அவை தானாகவே ஒட்டிக்கொள்ளும். முறிந்த எலும்புகளை சரியான பொசிஷனில் வைப்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. இதற்காகத்தான் எலும்பு முறிவுக்கு கட்டு போடப்படுகிறது. புத்தூர் கட்டைப் பொறுத்தவரை இந்த ஒழுங்குமுறை இருக்காது. பல்வேறு வைத்திய சாலைகள் முளைத்திருக்கின்றன. இவை அனைத்திலும் பாரம்பர்ய புத்தூர் கட்டின் தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறதா... எலும்புமுறிவின் தன்மைக்கேற்ப சிகிச்சை வழங்கப்படுகிறதா?  என்று பல கேள்விகள் இருக்கின்றன. முறைப்படுத்தப்படாத வைத்திய முறையாக அவை இருக்கின்றன என்பதால் கவனம் தேவை" என எச்சரிக்கிறார்கள் அலொபதி சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள் பலர் இதில் அடங்காத இந்தப் போலிகள் யார் என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...