உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மாற்றியமைக்கப்பட்டது சென்னை உயர்நீதிமன்றம் புதிய நீதிபதிகளுக்கான அமர்வு அறிவிப்பில்
சென்னை முதன்மை அமர்வில் 10.08.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் Sitting Arrangement-ல் பகுதி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு பின்வரும் வழக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன:
1.நீதிபதி கே. கோவிந்தராஜனுக்கு பழைய முதல் முறையீடுகள்
2.நீதிபதி என். ரமேஷுக்கு பழைய குற்றவியல் திருத்தங்கள்
3.நீதிபதி ஜி.கே. முத்துக்குமாருக்கு சேவை தொடர்பான பழைய ரிட் மனுக்கள்
4.நீதிபதி ஆர். ராஜேஷ் விவேகானந்தனுக்கு பழைய இரண்டாவது முறையீடுகள்
5.நீதிபதி எஸ். ரவீக்குமாருக்கு வரி தொடர்பான பழைய ரிட் மனுக்கள்
6.நீதிபதி இ.மனோகரனுக்கு– பழைய சிவில் சீராய்வு மனுக்கள்
7.நீதிபதி எஸ். அல்லிக்கு பழைய குற்றவியல் மேல்முறையீடுகள்
இந்த நீதிபதிகள் ஒவ்வொருவரும் தனி நீதிபதி ஆக அமர்ந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பார்கள்.
இந்த மாற்றம் 10 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புதிய நீதிபதிகளுக்கான அமர்வு மற்றும் வழக்கு ஒதுக்கீடு:
1 நீதிபதி Rajnish Pathiyil க்கு பழைய பொது இதர தொடர்பான ரிட் மனுக்கள்
2.நீதிபதி என். திலீப் குமாருக்கு – பழைய சேவை தொடர்பான ரிட் மனுக்கள்
3.நீதிபதி டாக்டர். பி. முருகனுக்கு பழைய குற்றவியல் திருத்தங்கள்
4.நீதிபதி எம்.டி. சுமதிக்கு பழைய குற்றவியல் மேல்முறையீடுகள்
5.நீதிபதி சி. திருமகளுக்கு பழைய இரண்டாவது முறையீடுகள்
6 நீதிபதி எஸ். கார்த்திகேயனுக்கு பழைய குற்றவியல் மேல்முறையீடுகள்
7.நீதிபதி பி. முருகேசனுக்கு பழைய இரண்டாவது முறையீடுகள்
8.நீதிபதி N. குணசேகரனுக்கு பழைய இரண்டாவது முறையீடுகள்
குறிப்பிட்ட அனைத்து நீதிபதிகளும் தனி நீதிபதி ஆக அமர்ந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பழைய வழக்குகளை விசாரிப்பார்கள்.
அமர்வு மாற்றம்: 10 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது




கருத்துகள்