ஒலிம்பஸ் கிரானைட் குவாரி கீழவளவு பகுதியில் செயல்பட்ட கிரானைட் சுரங்கமாகும்.
2012 ஆம் ஆண்டில் மதுரையில் வெளிச்சத்திற்கு வந்த ரூபாய் . 13,000 கோடிக்கும் அதிப்படியான பிரம்மாண்ட கிரானைட் முறைகேடு வழக்குகளில் இந்த நிறுவனமும் முக்கியப் பங்கு வகித்தது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, கீழவளவு கிராமத்தில் சுமார் 1.21 ஹெக்டேர் பரப்பளவில் இந்த குவாரி அமைந்திருந்தது, கடந்த 2008 ஆம் ஆண்டில், அங்கிருந்த நிலங்களில் 20 ஆண்டுகள் குத்தகைக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுக்க இந்த நிறுவனம் அரசிடம் அனுமதி பெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி இந்த ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்தார்.
2011-12 ஆம் ஆண்டு காலகட்டங்களில், இந்த நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கனிம வளங்களைச் சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. 2012 ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உ.சகாயம் ஐ.ஏ.எஸ், கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக வந்த மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா முன்னிலையில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தில் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டு, குவாரிக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) அமலாக்கத்துறை ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் மீது தனியாக வழக்கு பதிவு செய்து, அந்நிறுவனத்தின் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.
இந்தக் குவாரி தொடர்பான முறைகேடு மற்றும் பண மோசடி வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும், சிறப்பு நீதிமன்றங்களிலும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் திமுக தலைவர் மு. கருணாநிதி மகனுமான மு.க.அழகிரி அவரது பேரன் துரை தயாநிதி மீது ரூபாய் .256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மதுரை கிரானைட் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை (ED) மற்றும் சிபிஐ (CBI) இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற கிரானைட் குவாரி முறைகேட்டில், துரை தயாநிதி பங்குதாரராக இருந்த 'ஒலிம்பஸ் கிரானைட்ஸ்' நிறுவனம் அரசுக்கு ரூபாய் .259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இவ்வழக்கில் 2018-ஆம் ஆண்டு மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்
5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மூன்றாவது குற்றவாளி துரை தயாநிதி உடல்நிலையைக் காரணம் காட்டி இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி துரை தயாநிதி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மத்திய அரசின் பாண்டிச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய மதுரை சிபிஐ நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 29, 2026 இன்று நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவின் பின்னணி பண மோசடி வழக்காகும், மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததன் மூலம் ரூபாய் .256.44 கோடி பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை (ED) தொடர்ந்த வழக்கில் துரை தயாநிதி 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மூளை ரத்தக் கசிவு பாதிப்பால், தமக்கு பக்கவாதம் மற்றும் ஞாபகசக்தி மறதி உள்ளதாகவும், இதனால் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் தான் இல்லை என்றும் துரை தயாநிதி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவிற்கான காரணம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் துரை தயாநிதி நேரில் சென்று கிரிக்கெட் போட்டியைப பார்த்த வீடியோவும், அவர் தேர்தலில் வாக்களித்த வீடியோவும் அண்மையில் வெளியானது. இதனைச் சுட்டிக்காட்டிய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பு, அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகவேல், "கிரிக்கெட் போட்டி பார்ப்பதும், வாக்களிப்பதும் சாத்தியப்படும் போது, விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார். இதனடிப்படையில், துரை தயாநிதியின் உடல் மற்றும் மனநிலையைத் துல்லியமாக ஆய்வு செய்ய பான்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு முன்கதை:- காலஞ்சென்ற திமுகவின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் அவரது முதல் மனைவி மகன் மு. க.முத்து, காலஞ்சென்ற முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்! அடுத்து மதுரை மாநகராட்சி கவுன்சிலர் கம்யூனிஸ்ட் கட்சியின் சௌராஷ்ட்ரா பெண்மணி லீலாவதி படுகொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக்கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சைகளாகத் தொடர்ந்தது!
தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் மு. க.அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியை விட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அதிமுக ஆட்சி மாறி மு.கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகு தான் மீண்டும் மு.க.அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!
தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மு. க.அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் மு. க.அழகிரி விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்றம் விடுவித்தாலும் இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!
முன்னாள் முதல்வர், தற்போது திமுக தலைவர் மு. க.ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷுடன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகளில் திமுக சார்பாக கண்டுபிடிக்கவும் இல்லை. அதனால தண்டிக்கப்படவும் இல்லை!
மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு மேல்முறையீடு இன்று வரைக்கும் இருக்கிறது! திமுக சார்பாக மத்திய அமைச்சர் பதவியை மு. க.அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அப்போது டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும், அதைவைத்து ஆங்கில, ஹிந்தி செய்தி ஊடகங்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி ஊடகங்களில் சொல்லப்பட்ட திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி, முதன்முதலாக அப்போது தான் ஏளனம் செய்யப்பட்டார், இந்த நிலைக்கு யார்? காரணம், மேலும் திருப்பத்தூர், மேலூர் இடையில் இருந்த மலைகளை முழுங்கிய மஹாதேவன்கள் யார் யார் என்பதை மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த உ.சகாயம் அறிவார், தற்போது உள்ள கனிமவளத்துறை அமைச்சரும் அறிவார், மக்களும் அறிவார்கள், ஆனால் சட்டம் சில ஊழல் பணக்கார அரசியல் வாதிகளுக்கு ஆதரவாக உள்ளதோ என்ற சந்தேகம் பல மூத்த வழக்கறிஞர்களுக்கே இருக்கும் போது நமக்கு இருப்பதில் தவறில்லை, என்ன தான் சட்டத்தை இவர்கள் தவறாக வளைத்தாலும் ஒருநாள் நீதி கிடைக்கும் அதுவே சாமானியன் நீதி தேவன் மீதான நம்பிக்கை, அது ஆரம்பம் தான் தற்போது வந்த உத்தரவு.




கருத்துகள்