குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்பான ஆலோசனை வாரியம் மறுசீரமைப்பு
தமிழ்நாட்டில் தடுப்புக் காவல் நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை வாரியம் புதிய உறுப்பினர்களுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.3 ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் 25.08.2026 அன்று G.O.(Ms.) No.53 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம், 1982-ன் பிரிவு 9-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ளஅரசாணையில், சென்னையில் உள்ள Advisory Board உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பின்வரும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு மறுசீரமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆலோசனை வாரியத்தின் தலைவர்: நீதியரசர் திரு. V. பாரதிதாசன் ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்.
உறுப்பினர்கள்: நீதியரசர் திரு. P. கலையரசன் ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம். நீதியரசர் திரு. V. பார்த்திபன் ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம். இதேபோல, மதுரை அறிவுரைக் கழக தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.கல்யாண சுந்தரமும், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் என்.ஆதிநாதன், ஜி.இளங்கோவன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பு காவல் வழக்குகளில் முக்கியத்துவம் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தடுப்புக் காவலில் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் Advisory Board முக்கியப் பங்கு வகிக்கிறது.
குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்பு காவல் நடவடிக்கைகள் தொடர்பாக, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரின் வழக்கு சட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படும் முக்கியமான அமைப்பாக இந்த ஆலோசனை வாரியம் விளங்குகிறது.
இந்த வாரியத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருப்பது, தடுப்பு காவல் தொடர்பான சட்டப்பூர்வ பரிசீலனையில் நீதித்துறை அனுபவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
உடனடியாக பதவியேற்க உத்தரவு புதிய ஆலோசனை வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பதவிகளை உடனடியாக ஏற்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள்