முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவின் தலைவராக மயிலம ஆதினம் நியமனம்

ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினர் ஆக நியமனம்.

பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவு ; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத், சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ ஆகியோரும் குழுவில் இடம்பெற்றனர்        கோயில் பரம்பரை சாரா அறங்காவலர் தேர்வுக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினர் மயிலம் பொம்மபுர ஆதீனம்  தலைமைமில் குழு தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் அமைந்துள்ள ஒரு பழமையான வீரசைவ சமய மரபைச் சார்ந்த ஆதீனம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சைவ சமயத்தையும், தமிழ் மொழியையும் வளர்ப்பதில் இந்த ஆதீனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.


சிவபெருமானின் கணங்களில் ஒருவரான சங்குகன்னர் என்பவரின் அவதாரமாக கருதப்படும் பாலசித்தர் என்பவரால் இந்த ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது. புகழ்பெற்ற மயிலம் முருகன் கோயில் இந்த ஆதீனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது, தற்போது 19-ஆவது பட்டமாக ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்று ஆன்மிகப் பணிகளை வழிநடத்தி வருகிறார். அவர் தற்போது அறங்காவலர் தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்  கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களையும்,

தமிழ்க் கல்லூரிகளையும் ஆதீனம் நடத்தி வருகிறது.நூல் வெளியீடு: வீரசைவ ஆகமங்கள், சமய இலக்கியங்கள் மற்றும் தமிழ் நூல்களை அச்சிட்டுப் பரப்பும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறது. மேலும் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படட அர்ச்சனா கல்பாத்தி, பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனர் கல்பாத்தி எஸ். அகோரத்தின் மகளாவார். இவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் (CEO),



பல படங்களின் படைப்புத் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.ஏஜிஎஸ் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி நிறுவனம் சார்பாக பிகில்',  மற்றும் விஜயின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) லவ் டுடே', 'டிராகன்' மற்றும் அண்மையில் வெளியான 'பிளாஸ்ட்' உட்பட பல முன்னணி தமிழ்த் திரைப்படங்களை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார், கல்பாத்தி' என்பது கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள கிராமத்தின் பெயராகும். அங்கு புகழ்பெற்ற விஸ்வநாதசுவாமி கோவில் (கல்பாத்தி ரதோர்சவம் திருவிழா புகழ்பெற்றது) அமைந்துள்ளது. எனினும், அந்த கோவிலின் நிர்வாகத்திலோ அல்லது தமிழகத்தின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிலோ இவர் அறங்காவலராக இதுவரை இருந்ததில்லை எனினும் தற்போது தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்,


மேலும் இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் தேர்வுக்குழு அங்கீகாரத்தை வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் மிக்க நன்றி.  " என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"..
பர்மா விற்கு, ஆன்மிகச் சொற்பொழிவாற்ற வந்துள்ள சுமதி ஸ்ரீ தகவல், 

மேலும் நாட்டுப்புறத் திரைப்பாடகர் வேலுமுருகனுக்கும் உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இவர் விருத்தாசலம் அருகில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  தலைவராக மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், துணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கே.இராமநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழுவின் உறுப்பினர் செயலராக அறநிலையத் துறை ஆணையர் திகழ்வார். இந்தக் குழுவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா.சம்பத், திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம், பின்னணி பாடகர் த.வேல்முருகன், ஆன்மிகப் பேச்சாளர் மா.சுமதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு ஆண்டுக்கு ரூபாய் .10 லட்சத்துக்கு மேல் வருவாய் வரும் கோயில்களுக்கு தகுதியான அறங்காவலர்களை தேர்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரை பட்டியலை தயாரித்து வழங்கும் பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...