ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிக்க வைப்பதாக ரூபாய் .40 லட்சம் மிரட்டி பறித்த காவல் ஆய்வாளர் புஹாரி கைதும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றமான இரண்டு ஆய்வாளர்களும் பகுஜன் ஜமாஜ் கட்சியின்
(BSP) தமிழ்நாடு தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலி 'என்கவுண்டர்' செய்த காவல் ஆய்வாளர் புகாரி, அதே வழக்கில் வேறு ஒருவரை சிக்க வைப்பதாக மிரட்டி, ஒரு வியாபாரியிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூபாய் .40 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரின் பேரில், 'வேக்கன்சி ரிசர்வ்' எனும் 'காத்திருப்போர் பட்டியலுக்கு' மாற்றப்பட்டார். பழைய வண்ணாரப்பேட்டைச் சேர்ந்த தங்கம் மற்றும் வெளிமாநிலத்தை சேர்த்து சென்னையில் வசிக்கும் பங்குச் சந்தை வியாபாரி அகில் குமார் உக்கம்ராஜ் (வயது 35) பூக்கடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ. அமல்ராஜ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி, பகுஜன் ஜமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான கே.ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 27 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர் திருவேங்கடம் என்பவர் காவல்துறை போலி 'என்கவுண்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்ரீ சைதன்யா காவல் நிலைய ஆய்வாளர் புகாரி, தற்போது புனித தோமையார் மலை காவல் நிலையத்தில் பணியாற்றினார்.
அகில் குமார் உக்கம்ராஜ், புகாரில், "2018-ஆம் ஆண்டு ஒரு வழக்கறிஞர் மூலம் எனது தொலைபேசி எண் பகிரப்பட்டதால், அந்த எண் ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் கூறி, காவல் ஆய்வாளர் புகாரி என்னை மிரட்டினார். வழக்கில் என்னை சிக்க வைப்பதாகக் கூறி, ஆரம்பத்தில் ரூபாய் .20 லட்சம் கேட்டார். பின்னர் பல்வேறு சமயங்களில் கூடுதல் தொகையும் வாங்கியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை காலை, ஆய்வாளர் புகாரி மூன்று காவலர்களுடன் அகில் குமாரின் இல்லத்திற்கு வந்து, மீண்டும் ரூபாய் .5 லட்சம் கேட்டதாகவும், பணத்தை வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் அருகில் உள்ள ஒரு தலைமைக் காவலரிடம் ஒப்படைத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில், பூக்கடை காவல் துணை ஆணையர் கோபி நடத்திய விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னை மாநகர் காவல்துறை ஆணையர் புகாரியை 'காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டார். எழும்பூர் காவல் கட்டுப்பாட்டு சி2 யானைக் கவுனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆய்வாளர் முகமது புகாரி மற்றும் சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போலி 'என்கவுண்டர்' ஹீரோவாக அறியப்பட்ட ஒரு காவல் அலுவலர் அதே வழக்கின் பெயரைப் பயன்படுத்தி, இரண்டு ஆண்டுகளாக சென்னை வசிக்கும் ஒரு வெளி மாநில பொது நபரிடம் ரூபாய் .40 லட்சம் பணம் பறித்துள்ளார். இது, சட்டத்தின் பெயரால் நடக்கும் சீட்டிங் லஞ்சம் ஊழல் மிகப்பெரிய மோசடி கொடுமையாகும். 'தொலைபேசி எண்' விவகாரம் ஒரு சாக்குப்போக்கு மட்டுமே; இதில் சிபிஐ விசாரணை வளையம் வந்து விட்டது இருந்த போதிலும் உண்மையில் இது ஒரு முறையான பணப் பறிப்பு சம்பவம். ஆய்வாளர் புகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம். ஆனால், இவர் மட்டுமல்ல, இந்தப் பண மிரட்டலில் அவருக்கு உதவிய மற்ற காவலர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும், ஆய்வாளர் புகாரி மீது ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நடத்தப்பட்ட போலி 'என்கவுண்டர்' விசாரணை குறித்தும் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியமுள்ளது. இல்லையெனில், இது போன்ற சம்பவங்கள் காவல் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை முற்றிலுமாகச் சிதைத்துவிடும்.
ஆய்வாளர் புகாரி மீதான விசாரணை தொடரும். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட இந்த சம்பவம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கின் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், இதே போன்ற புகார்கள் வேறு யாரிடமும் உள்ளனவா என்பது குறித்து காவல் துறை ஆய்வு நடத்தும். சந்தேக வளையத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு விசாரணை அலுவலர்கள்' முதலில்
'ரூபாய்.40 லட்சம் மிரட்டல்' வழக்கில் கைதான ஆய்வாளர் புகாரி பணியிடை நீக்கம்; மற்றொரு ஆய்வாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்; ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சந்தேக நபர் திருவேங்கடத்தை போலி 'என்கவுண்டர்' செய்த ஆய்வாளர் முகமது புகாரி, சென்னையில் வசிக்கும் ஒரு வட இந்திய நபரிடம் ரூபாய் .40 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. அமல்ராஜ் இன்று ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இன்று அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதே வழக்கில், மற்றொரு காவல் ஆய்வாளர் டி. சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை விசாரித்த சிறப்புக் காவல் குழுவில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக மூத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஆய்வாளர் முகமது புகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி
கைது செய்யப்பட்ட பின்னர், இன்று ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மாகர் காவல்துறை ஆணையர் புகாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதே வழக்கில், மற்றொரு ஆய்வாளர் டி. சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு (vacancy reserve) மாற்றப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் வேளச்சேரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மாற்றப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த சிறப்பு குழுவில் இருந்த உதவி காவல் ஆணையர் (Assistant Commissioner) முதல் கான்ஸ்டபிள் வரை அனைத்து உறுப்பினர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இதன் மூலம், எந்தக் காவல் அலுவலர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் அல்லது இதே போன்ற பண மிரட்டலில் ஈடுபட்டார் என்பது கண்டறியப்படும். இந்த விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மீது மேலதிக துறை ரீதியான மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஒரு சிறப்பு விசாரணைக் குழுவிலேயே இத்தகைய முறைகேடுகள் நடந்திருப்பது, அந்தக் குழுவின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது. இப்போது அந்த குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது சரியான நடவடிக்கை. ஆனால், இந்த விசாரணை எந்த அளவிற்கு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதே போன்ற புகார்கள் மற்ற அதிகாரிகள் மீதும் உள்ளனவா? இந்த விசாரணை, அனைத்து முறைகேடுகளையும் வெளிக்கொணரும் ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும். இல்லையெனில், இது ஒரு தனிநபர் மீதான நடவடிக்கையாக மட்டும் மாறி, அமைப்பு சார்ந்த ஊழல் மறைக்கப்படும் அபாயம் உள்ளது.
ஆய்வாளர் முகமது புகாரி மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடரும். மேலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு விசாரணை குழுவின் உறுப்பினர்கள் மீதான விசாரணை தொடங்கும். இந்த விசாரணையில் இருந்து புதிய தகவல்கள் வெளிவந்தால், மேலும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஏற்கனவே CBI விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த பண மிரட்டல் சம்பவம் அந்த வழக்கின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும்.




கருத்துகள்