முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போதைப்பொருள் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை

போதைப்பொருள் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை!

கோயம்பத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன்(வயது 19) என்ற மாணவரை 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த அதிர்ச்சியான சம்பவம். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அமுதனின் பெற்றோர் முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை வைத்த நிலையில்




தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. சி. திருமாறன் ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. விஜய் கலந்து கொண்டு “போதை இல்லா தமிழ்நாடு” என்ற உறுதிமொழியை வலியுறுத்துகிறார்.

அதே நேரத்தில் கோவையில் 19 வயது கல்லூரி மாணவர் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

போதைப்பொருள் பயன்பாடு குறித்து கல்லூரி விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று உயிரிழந்த மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 5 பேர் பிடித்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒருபுறம் “போதை இல்லா தமிழ்நாடு” என்று மாநாடுகள் நடத்துகிறோம.

மறுபுறம் போதைப்பொருளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு மாணவனின் உயிரே பறிக்கப்படும் நிலை என்றால் இதை எப்படி ஏற்றுக்கொள்வது?

போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல்கள் யார்?

கல்லூரி வளாகங்களுக்குள் போதைப்பொருள் எப்படி வருகிறது?

தகவல் தெரிவிக்கும் மாணவர்களுக்கே பாதுகாப்பு இல்லையா?

மாநாடுகளும் உறுதிமொழிகளும் மட்டும் போதாது.

போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்விச்சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஒரு மாணவன் போதைக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக உயிரை இழக்க வேண்டிய நிலை தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என 

தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவரான 

கே.சி.திருமாறன் ஜி அறிக்கையில் தெரிவித்துள்ளார், அதேபோல கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு காரணம் என்ன? போதைப்பொருள் புகாரா? 

முன் பகையா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினருமன தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் 

கோவை அருகே கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான அமுதன், கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட காவல்துறை விசாரணையின்படி, மாணவர்களுக்கிடையே ஏற்கெனவே இருந்த மோதல், செல்போன் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளின் தொடர்ச்சியாக, இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்பகைக் காரணமாக அமுதன் தாக்கப்பட்டதாக காவல்துறை தரப்புக் கூறுகிறது.

ஆனால், இந்த வழக்கில் இன்னொரு மிகத் தீவிரமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமுதன் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்திருந்ததாகவும், அந்தத் தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு கசிந்ததன் காரணமாகவே அமுதன் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். 

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, போதைப்பொருள் குறித்து அமுதன் தகவல் அளித்தார் என்பதும், அந்தத் தகவல் கசிந்ததால் அவர் கொல்லப்பட்டார் என்பதும், தற்போது குற்றச்சாட்டுகளாகவே உள்ளன. அவை விசாரணை மூலம் உறுதி செய்யப்பட வேண்டியவை. அதேவேளையில், காவல்துறை போதைப்பொருள் தொடர்பான காரணத்தை மறுத்து, மாணவர்களுக்கிடையேயான மோதலே முதற்கட்ட விசாரணையில் தெரியவரும் காரணம் எனக் கூறுகிறது.

எனவே, இந்த வழக்கில் ஒரு கோணத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு விசாரணையை முடித்துவிடாமல், இரு கோணங்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, அமுதன் காவல்துறைக்கு போதைப்பொருள் தொடர்பாகத் தகவல் அளித்தாரா?

அவ்வாறு தகவல் அளித்திருந்தால், அவரிடம் காவல்துறை எப்போது, எந்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்தியது?

அவர் அளித்ததாகக் கூறப்படும் தகவல் யாருக்கெல்லாம் சென்றது?

காவல்துறையிலிருந்து தகவல் கசிந்ததா? கல்லூரி மற்றும் விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு அல்லது விற்பனைத் தொடர்பான புகார்கள் ஏற்கெனவே இருந்தனவா? அமுதன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, அவரை யாராவது மிரட்டினார்களா?

செல்போன் பறிப்பு மற்றும் முன்பகைத் தொடர்பான காவல்துறை கூறும் சம்பவத்திற்கும் கொலைக்கும் உள்ள தொடர்பு என்ன? தாக்குதலில் பங்கேற்ற அனைவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனரா? என்பவைத் தெளிவாக விசாரிக்கப்பட வேண்டும்.

அமுதன் கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது எந்த அரசியல் அழுத்தத்திற்கும், எந்த முன்முடிவிற்கும் இடமின்றி ஆதாரங்களின் அடிப்படையில் கண்டறியப்பட வேண்டும்.

கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் நடமாட்டம் இருந்திருந்தால், அது ஒரு மாணவரின் உயிரை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இளைஞர் தலைமுறையின் எதிர்காலத்தையே பாதிக்கும் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும். அதேபோல், ஒரு மாணவர் காவல்துறைக்கு இரகசியத் தகவல் அளித்ததற்காகக் குறிவைக்கப்பட்டிருந்தால், தகவல் அளிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறையின் பொறுப்பும் கேள்விக்குள்ளாகிறது.

எனவே, அமுதன் மரணத்தின் பின்னணியில் உள்ள முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், கொலைக்குப் பின்னால் வேறு சதி, தூண்டுதல் அல்லது தகவல் கசிவு இருந்தால் அதற்குக் காரணமான அனைவரும் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அமுதனுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மை முழுமையாக வெளிவர வேண்டும்.

அதோடு, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்.தலைவர் தி.வேல்முருகன், அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் மாணவன் அமுதன் கொலை தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். கஞ்சா விற்பனையைக் காட்டிக் கொடுத்ததால் சக மாணவர்களால் மாணவர் அமுதன் அடித்துக் கொலை என புகார் எழுந்துள்ளது. கோயம்பத்தூர் கல்லூரியில் படித்த கள்ளக்குறிச்சி மாணவன் அமுதன் கொலை தொடர்பாக சக மாணவர்கள் 14 பேர் மீது 6 பேர் மீது செட்டிபாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. மாணவன் அமுதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  அரவிந்த், சிவரோஹித், ஆராவமுதன், மணி பாலா என்பவன் உள்பட  5 குற்றம் செய்த மாணவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. விசாரணை இனி தீவிரமாகலாம்  ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில், போதைப்பொருள் விவகாரத்தில் மாணவர் புகார் அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. சமையலர் தாக்கப்பட்டது தொடர்பாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மாணவர் வெளியில் தங்கியிருந்தது தங்களுக்குத் தெரியாது எனவும் கல்லூரி தரப்பு விளக்கம் அளித்துள்ளது


ஆனால் இது துரிதமாக விசாரணை நடந்தால் இவர்கள் பொய் வெளியாகலாம் என்பதே பலரது கருத்து 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...