தேசத் தலைவர் நேதாஜி அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரி உச்சநீமன்றத்தில் மகள் மனு அரசுக்கு நோட்டீஸ்
சுதந்திரப் போராட்ட வீரர் தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது அஸ்தி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜியின் அஸ்தியை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, அவரது மகள் அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின் போது, அனிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஒரே மகள் அனிதா போஸ் பிஃபாஃப் ஆவார். இவர் 1942-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார் எமிலி ஷென்கல் இவரது தய் ஆவார். இவர் ஜெர்மனியில் உள்ள ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஜெர்மனியில் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி , 1942 ஆம் ண்டு பிறந்தவர நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - எமிலி ஷென்கல் மகளாவார்,ஜப்பானில் இருக்கும் தன் தந்தையின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு வரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மகள் மூத்த வழக்கறிஞர் வைத்து மனு தாக்கல் செய்துள்ளார், தனது தந்தைக்கு இந்திய மண்ணில் கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி அன்று தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நேதாஜி விபத்தில் இறக்கவில்லை என்றும், அவர் தொடர்ந்து தலைமறைவாக வாழ்ந்தார் என்றும் அவரது ஆதரவாளர்களும், பசும்பொன். உ. முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட ஐ என் ஏ வீரத் தியாகிகள் மற்றும் தலைவர்களும் உறுதியாகவே நம்பினர். ரெங்கோஜி கோயிலில் இருப்பது உண்மையில் நேதாஜியின் அஸ்திதானா என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய அரசு இந்த விவகாரத்தில் எடுக்கப் போகும் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்தே அஸ்தி இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவது உறுதியாகும். இந்த நிலையில் 1982-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவின் மூலம் மன்னர் மருது பாண்டியர் சகோதரர்களுக்கு நேரடியாக வாரிசுகள் துரைசாமி தவிர யாரும் இல்லாத நிலையில் அவர் வழி உறவு இரண்டாம் மூன்றாம் வழித்தோன்றல்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதில் பெண் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிய வழக்குகளில் நீதிமன்றங்கள் வாரிசு உரிமையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளன. இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் இருந்த தேசப் படை வீரர்களின் மனைவிக்கு மட்டுமே குடும்ப ஓய்வுதியம் வழங்கிய நிலையில் மற்றும் படை வீரர்களின் அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கும் மருதுபாண்டியர்கள் வாரிசுக்கு வழங்கப்படும் சுதந்திரப் போராட்ட கருணை ஓய்வூதியம் போல வழங்க வேண்டும் அதுவே அவர்களின் தியாகத்திற்கு செய்யும் நாட்டு மரியாதை இது குறித்து மத்திய உள்துறை நடவடிக்கை எடுத்தால் அதுவே பாஜக அரசு செய்யும் சிறப்பு.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் (INA - Azad Hind Fauj), பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய புகழ்பெற்ற சுதந்திரப் படை. இரண்டாம் உலகப் போரில் வெளிநாடுகளில் இருந்த இந்தியர்களைத் திரட்டி இப்படையை அவர் பலப்படுத்தினார்.

.webp)











கருத்துகள்