பழங்குடியினர் மொழிகள், அருங்காட்சியகங்கள் குறித்த தேசிய மாநாடு மைசூருவில் நடைபெற்றது
கர்நாடக மாநிலம் மைசூருவில் பழங்குடியினர் மொழிகள், அருங்காட்சியகங்கள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில், வரலாற்று ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள், பழங்குடியின சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பழங்குடியினரின் மொழிகள், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது, மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையிலான அருங்காட்சியகங்களை அமைப்பது, வரலாற்று உண்மைத்தன்மை மாறாமல் காட்சிப்படுத்துவது, உள்ளூர் மக்களின் நேரடிப் பங்களிப்புடன் பாரம்பரியக் கதைகளை எடுத்துரைப்பது ஆகியவைக் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அருங்காட்சியகங்களை வெறும் கண்காட்சிக் கூடங்களாக மட்டுமல்லாமல், பழங்குடியின மக்களின் தனித்துவமான அடையாளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் மையங்களாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை முறையாக ஒருங்கிணைப்பது, பழங்குடியின பாரம்பரிய உணவுகள், கைவினைப் பொருட்கள் விற்பனை மூலம் வருவாயை ஈட்டி, அருங்காட்சியகங்களின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.



கருத்துகள்