தேனி மாவட்டம், மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் வசித்து வரும் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை காலி செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக,
7 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மிகப்பெரிய முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்புக்காடு காப்பகம் (Reserve forest) காரணம் காட்டி அப்பகுதியில் வசிக்கும் மக்களை சட்டப்படி வெளியேற்ற உத்தரவிடப்பட்டது
.வருஷநாடு மற்றும் மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 98 மலைக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4,011 குடும்பங்களுக்கு வெளியேற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பூர்வீகக் குடிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மக்களின் கோரிக்கையில் மத்திய அரசின் மக்களை வெளியேற்றும் ஆணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எனவும் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act, 2006)-ன் கீழ் மலைவாழ் மக்களுக்குக் கிடைக்கும் சட்டப்பூர்வ உரிமைகளை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையாக எடுத்துரைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு (Revision Petition) தாக்கல் செய்து மக்களின் வசிப்பிட உரிமையைப் பாதுகாத்துத் தர வேண்டும்.
என இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் முழுமையான கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மேலும், தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மாணவர்கள், பெண்கள் என ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மலைக் கிராமப் பள்ளிகள் வெறிச்சோடின.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. தேனி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மக்களை வெளியேற்றினால் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அரசியல் காரணங்களுக்காக அறிவித்தார்.
மாநிலத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல அரசியல் கட்சியின் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டு, அரசு மூலம் சீராய்வு மனு தாக்கல் செய்ய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.














கருத்துகள்