காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தனித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜோதிமணி,
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகன வசதி கார் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆகஸ்ட் 12, 2026 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அவர் பேசிய உரையில் " சொந்த வாகனம் இல்லை: தான் தலைமைச் செயலகத்திற்கு 280 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வருகிறேன். சட்டமன்றத்திற்கு வர பயணப்படிகள் வழங்கப்பட்டாலும், தனக்கு சொந்தமான வாகனம் இல்லை. வாடகை வாகனத்தில்தான் வந்து போகிறேன். தனது காட்டுமன்னார்கோவில் தொகுதி 40 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. அங்கு மக்களைச் சந்தித்து நேரில் பணியாற்ற தன்னிடம் வாகன வசதி இல்லை. தனிச் செயலாளரை நியமித்து, அவருக்கு ஊதியம் வழங்கி வேலை வாங்குவதற்குக் கூட தன்னிடம் போதிய வசதி இல்லை. தற்போதைய சூழலில் முக்கால்வாசி எம்.எல்.ஏ-க்களின் நிலைமை இதுதான். காலணி அதாவது செருப்புக் கூட அணிய முடியாத அளவிற்கு எளிய நிலையில் இருக்கும் உறுப்பினர்களும் இந்த அவையில் இருக்கிறார்கள்,மாநிலத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத, தூய்மையான அரசு அமைய வேண்டும் என்றால், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நலமுடன் வைத்துக் கொள்வது அவசியம். எனப் பேசினார் சபாநாயகரின் பதிலாக ஜோதிமணி எம்.எல்.ஏ-வின் உரையைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் (சபாநாயகர்), "முதலமைச்சருக்கு கிள்ளிக் கொடுக்கும் கரங்கள் அல்ல, அள்ளிக் கொடுக்கும் கரங்கள்தான்" என்று குறிப்பிட்டார். சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த நியாயமான கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு சென்று உரிய பரிசீலனை செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். சட்டமன்றத்தில் தேர்தல் நேரத்தில் இணைந்து விசிகவின் சார்பாக எம்.எல்.ஏ ஆன ஜோதிமணி பிரபலமான நபரின் மகன் இனி உண்மை நிலவரம் குறித்துக் காணலாம். எல். ஈ. ஜோதிமணி எம் எல் ஏ வின் தந்தை எல். இளையபெருமாள் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சமூகநீதிப் போராட்டவாதியாகவும், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட மூத்த காங்கிரஸ் தலைவராகவும் திகழ்ந்தவர்.
சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினராக 1952 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை பணியாற்றினார்.
1962- ஆம் ஆண்டில் பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசால் அமைக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டியின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1979- ஆம் ஆண்டில் தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பணியாற்றினார்.
1980- ஆம் ஆண்டில் சென்னை எழும்பூர் தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
'L. E.'ஜோதிமணி என்பது லட்சுமணன் இளையபெருமாள் (எல். இளையபெருமாள் மகன்) என்பதாகும்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் புகுமுக வகுப்பையும் (PUC), 1984- ஆம் ஆண்டில் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் டீசல் மெக்கானிக் பயிற்சியையும் முடித்துள்ளார்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியரானவர், தற்சமயம் தேர்தல் நேரத்தில் வி சி கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.வெற்றி பெற்ற எல்.ஈ. ஜோதிமணி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி ரூபாய் . 85.5 லட்சம் சொத்து மதிப்பினைக் கொண்டுள்ளார். மொத்த சொத்து மதிப்பு: ரூபாய் 85,47,835 கடன்கள் மற்றும் பொறுப்புகள்: ரூபாய் 3,42,000 தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் படிகள் சேர்த்து மாதமொன்றுக்கு மொத்தம் ரூபாய் . 1,05,000 வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய அடிப்படைச் சம்பளம் ரூபாய் . 30,000 தொகுதிப் படி ரூபாய் . 25,000 வாகனப் படி: ரூபாய் . 25,000 ஈடுசெய்தல் படி ரூபாய் . 10,000 தொகுப்புப் படி ரூபாய் . 5,000 தொலைபேசிப் படி ரூபாய் . 7,500 அஞ்சல் படி ரூபாய் . 2,500 மொத்த மாத ஊதியம்: ரூபாய் . 1,05,000 இதர சலுகைகளாக தினசரிப் படி சட்டமன்றக் கூட்டத்தொடர் மற்றும் குழுக்கூட்டங்களில் பங்கேற்கும் நாட்களில் கூடுதல் தினப்படியாக ரூபாய் . 500 வழங்கப்படுகிறது. அது அல்லாது ஓய்வூதியம் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் . 35,000 வழங்கப்படுகிறது. அரசு விதிமுறைப்படி இலவச மருத்துவ உதவிகள் மற்றும் பயணப்படி சலுகைகளும் உண்டு. சென்னை சட்டமன்ற உறுப்பினர் வசிக்கும் வீடு உண்டு,





கருத்துகள்