விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் அகில உலக செயல் தலைவரும், தமிழக வி.எச்.பி. அமைப்பின் மூத்த முன்னோடித் தலைவருமான ஸ்ரீ எஸ். வேதாந்தம் ஜி
(வயது 93), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஆகஸ்ட் 29, 2026 இன்று காலமானார். அவர் 1933 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கொல்லத்தில் ஒரு வளமான குடும்பத்தில் பிறந்தார். அவரது 16வது வயதில் 1949 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் சேவையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் TVS நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றியவர், சமுதாயப் பணிக்காக அந்த வேலையைத் துறந்து, 1972 ஆம் ஆணடில் வி.எச்.பி-யின் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் பொறுப்பை ஏற்றார். கிராமப்புறக் கோவில் பூசாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு ஆகமப் பூஜை முறைகளைப் பயிற்றுவிக்கவும் 1990 ஆம் ஆண்டில் இந்த அமைப்பைத் தொடங்கினார். பூசாரிகளுக்கு அரசு நலவாரியம் மற்றும் ஓய்வூதியம் கிடைக்க முக்கியப் பங்காற்றினார். தொலைதூரக் கிராமங்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா அமைப்பை நிறுவி, பல தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உருவாகக் காரணமானார். ஏழை எளிய மக்களுக்காகத் தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் மற்றும் சென்னை புரசைவாக்கம் ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் மற்றும் உடற்கூறு ஆய்வு மையங்களைத் தொடங்கினார். திருப்பதி திருக்குடை ஊர்வல வைபவத்தை நடத்தும் 'ஹிந்து தர்மார்த்த சமிதி' அறக்கட்டளையை நிறுவி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை வழிநடத்தினார். அவர் இன்று காலமானார்.அவரது இறுதிச் சடங்குகள், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 30, 2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் சமூக மற்றும் சுயம் சேவகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்