இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருடன் சந்திப்பு
இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு பிரிவு இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ஆர். எஸ். சுந்தரம், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப. வைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்ட கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களாக தமிழகத்தில் இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்புப் பணிகளை மேலும் திறம்பட நடத்துவது குறித்து இரு அதிகாரிகளும் விரிவாகக் கலந்துரையாடினர். ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்கள் மற்றும் தேர்வுகள் நடைபெறும் போது, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியாகத் தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து வழங்கி வரும் முழுமையான ஆதரவை அவர் சுட்டிக்காட்டினார். ராணுவப் பணிகளுக்கு இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த உன்னதப் பணியில் தமிழ்நாடு காவல்துறை அளித்து வரும் தொடர் ஒத்துழைப்பிற்கு லெப்டினன்ட் ஜெனரல் ஆர். எஸ். சுந்தரம் தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

கருத்துகள்