தையூரில் கூலிப்படையை ஏவி ஒரே ஜாதியில் நடந்தது ஆணவக் கொலையா? போராட்டம் பின் விசாரணை,
மகளின் காதலனைக் கொன்றதாக தவெக நிர்வாகியுடன் சிலர் கைது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா தையூரில் பிரவீன்குமார் (வயது 23) என்ற அட்டவணை பட்டியல் சமூக இளைஞர் அதே சமூக நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தகவல் மேற்கண்ட சம்பவத்தின் பின்னணி
தையூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பிரவீன்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. பெற்றோர் எதிர்ப்பு: இதற்கு பெண்ணின் வீட்டார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு, பெண்ணின் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் பிரவீன்குமாரைக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிய நிலையில் படுகாயமடைந்த பிரவீன்குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 21 ஆம் தேதியில் உயிரிழந்தார். பிரவீன்குமாரின் மரணத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட நபர்கள் புதிய பைபாஸ் சாலையில் சடலத்துடன் சுமார் 2 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாகக் கேளம்பாக்கம் காவல் நிலையத்தினர் தீவிரமாக விசாரணை நடத்தி, பெண்ணின் தந்தை ஏழுமலை (வயது 48), மணிகண்டன் (வயது 31), நந்தீஸ் ( வயது 19) மற்றும் கௌதம் (வயது 30) ஆகிய 4 நபரைக் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரைத் தனிப்படை அமைத்துக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக நிர்வாகியான ஏழுமலை என்பவர் தனது மகளின் காதலனை கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் காதல் விவகாரத்தில் இருவரும் அட்டவணை பட்டியல் ஜாதி எதிர்ப்பு தெரிவித்து காதலனை வெட்டிக் கொன்ற பெண்ணின் தந்தை ஏழுமலை கொன்றவர் தவெகவில் ராஜினாமா செய்த சடடமன்ற உறுப்பினர் மரகதம் குமாரவேலுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் நிர்வாகி எனக் கூறப்பட்ட நிலையில் இறந்தவர் விசி கட்சியின் நபராம் மீண்டும் ஒரே அட்டவணை பட்டியல் ஜாதி ஆணவக் கொலை அரங்கேறியது
கேளம்பாக்கம் தையூரில் உள்ள பிரவீன் என்ற அட்டவணை பட்டியல் ஜாதி இளைஞன் தையூர் புதியகாலனியில் உள்ள அதே அட்டவணை பட்டியல் ஜாதி தவெகவில் புதிதாக இணைந்து நபர் ஏழுமலையின் மகளான xxxxx யை காதலித்து வந்ததால் ஏழுமலை மற்றும் அவர் மகன் மற்றும் நண்பர்கள் கௌதம் மணிகண்டன் நந்திஷ் இவர்கள் அனைவரும் சேர்ந்து பிரவீனை வெட்டிப் படுகொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில் பிரவீன் ஏழை என்பதாலும், ஏழுமலை பணம் படைத்த ஆளும்கட்சி நபர் என்பதாலும் துணிகரமாக இந்தக் கொலை நடந்தேறியுள்ளது என வெளியில் பேசப்படுகிறது
உயிரிழந்த பிரவீனுக்கு நீதி வேண்டும்..அநீதி இழைத்து கொலை செய்த குடும்பத்தினர் சட்டப்படி தண்டிக்கபட வேண்டும்.என சாலைமறியல் போராட்டம் நடந்தது. ஆனால் இதில் அந்த பெண்ணுக்கு தொந்தரவு செய்த நபர் கொலை என்பதே உண்மை நிலை என பலர் பேசும் நிலை. காணலாம்,







கருத்துகள்