இராமநாதபுரத்தில் போலி அதிகாரப் பத்திரம் தயாரித்து ரூபாய் .4 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த நால்வர் கைது,
இராமநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் அலி மனைவி ஹாஜாபானு. இவருக்கு இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் ரூபாய் .4 கோடி மதிப்புள்ள 80 சென்ட் காலி இடமாகவே இருந்துள்ளது.
இதை போலியான பொது அதிகாரப் பத்திரம் மூலமாக சின்னக்கடை பகுதியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரும், அவருடைய கூட்டாளிகளான செந்தில் குமார், சந்திரகுமார் , ஆகியோரும் 80 சென்ட் நிலத்தில் ஒரு பகுதியை பத்திரம் பதிவு செய்து வாங்கிக்கொண்டு மீதமுள்ள பகுதியையும் விற்பனை செய்வதற்காக போலி பவர் பத்திரம் தயார் செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த நில உரிமையாளர் ஹாஜா பானு இராமநாதபுரம் நில மோசடி தடுப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை ஜாபர் அலி, சந்திரகுமார், செந்தில் குமார், மகேஸ்வரன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.
மேலும் அதற்கு உதவிய சில ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்

கருத்துகள்