ஒடிஷா பெண்ணை தாம்பரம் பகுதியில் கொன்று பிரியாணி செய்த குற்றவாளி மனிப்பூரில் கைதாகி சென்னையில் விசாரணை தீவிரம்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த xxxx xx (வயது 42) இவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்,
இவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்களைப் பிரியாணி அண்டாவில் வைத்து வேகவைத்து அழிக்க முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மணிப்பூரில் கைது விசாரணை தீவிரம் தாம்பரம் கூடுவாஞ்சேரி மனிதக்கறி பிரியாணி கொலை வழக்கில் மணிப்பூரில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை கைது செய்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்
சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து, உடற்பாகங்களைப் பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் மாவுடன் கலந்து வேகவைத்து, மீதிப் பாகங்களை ஆக்ரா சென்ற ரயிலில் வீசிவிட்டுத் தப்பியோடிய குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியை மணிப்பூரில் தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர். நாடெங்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் (வயது 22) என்ற நபர் தற்போது சிக்கியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக்ரா அருகே துர்நாற்றம் வீசிய ஒரு சூட்கேஸிலிருந்து பெண் ஒருவரின் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. சூட்கேஸில் இருந்த பிளாஸ்டிக் கவரை வைத்து விசாரணையைத் தொடங்கிய ரயில்வே காவல்துறை மற்றும் சென்னை தனிப்படைக் காவல்துறை , சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து, கூடுவாஞ்சேரி மசூதி தெருவிலுள்ள ஒரு வாடகை வீட்டைக் கண்டறிந்து சோதனையிட்டனர்.
அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த xxxx xx (வயது 42) என்ற பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. உடலின் பல பாகங்கள் பிரியாணி அண்டாவில் காய்கறிகளுடன் சமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை , அங்கிருந்த பாகங்களைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை அடையாளமின்றி அழிக்கவே கொலையாளிகள் இந்தக் கொடூரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது விசாரணையின் மூலம தெரியவந்தது.
கொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடிய மாணிக் உத்தின் லஸ்கர் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை அவன் பயன்படுத்திய செல்போன் சிக்னல் மூலம் அறிந்த தனிப்படை காவல்துறை அங்கு விரைந்து சென்று கணவன் மனைவி இருவரையும் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து மேல் விசாரணைக்காக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கூட்டி வந்தனர்.
விசாரணையின் முடிவில் தான் எதற்காக இந்தக் கொலை நடைபெற்றது என்பது தெரியவரும். ஆனால் வடநாட்டு நபர்கள் தென்னிந்தியப் பகுதியில் குடியேறிய நிலையில் தான் இதுபோன்ற கொடூரச்செயல்கள் நடப்பது அதிகரிக்கும் நிலை ஆகவே வட இந்தியப் பணியாளர்கள் மீது உளவுத்துறை தக்க கவனம் செலுத்த வேண்டும் அப்போது தான் இது போன்ற விபரீதங்கள் நடக்காது என்பதே பலரது கருத்து.












கருத்துகள்