இந்தியாவில் நீண்ட ஆன்மீகக் கலாச்சாரப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், லண்டனிலிருந்து மீட்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருமங்கையாழ்வார் சிலை
கும்பகோணத்தை வந்தடைந்தது! பின்னர் முதல்வர் சி. ஜோசப் விஜய் பார்வையிட்டார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Ashmolean Museum மூலம் மீட்கப்பட்டு, ஆகஸ்ட் 16, 2026 ஆம் தேதியன்று வெற்றிகரமாகத் தமிழ்நாடு கொண்டுவரப்பட்டது. கும்பகோணம் பகுதி கத்திரிநத்தம் சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில். 16-ஆம் நூற்றாண்டு வெண்கலச் சிலை
(சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள Ashmolean Museum.நூலகத்தில் இருந்து கண்டறிந்து மீட்பு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு CID காவல்துறையினரின் தீவிர விசாரணை மற்றும் அறிவியல் பூர்வமான ஆவணங்கள் மூலம் சிலை அடையாளம் காணப்பட்டது. இங்கிலாந்து தரப்பு ஒப்புதலுடன் மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்தியத் தூதரகத்தின் கூட்டு முயற்சியால் சிலை மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டது.
கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் வழியில் திருவலஞ்சுழிக்கு அருகிலுள்ள கோயில் சுந்தரச் சோழ வின்னகரம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை பல ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டவரால் ஆக்ஸ்போர்டு அஷ்மோலியன் அருங்காட்சியகம் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தற்போது அறிந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று திருமங்கை ஆழ்வார் சிலையானது சுந்தரபெருமாள் கோயில் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுவாமி வீதியுலா நடைபெற்று, சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள், ஆன்மிகவாதிகள், பக்தர்கள்,பெருமகிழ்ச்சி அடைந்தனர். தனது சொந்த ஊரான சுந்தரப் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோயிலின் சிலை மீட்கப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டுள்ளதால் ஊர் மக்களோடு சேர்ந்து தானும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தமாக தலைவர் ஜி.கே. வாசன் தகவல்





கருத்துகள்