முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமன்ற பிடியாணையில் கைதான ரமேஷ் விவகரத்தில் லாட்டரி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலையீடு தவறு மன்னிப்பு கேட்க தேவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ரமேஷ் கைது செய்யப்பட்டது கடந்த 14 ஆண்டுகளாக நீதிமன்றத்தால் நிலுவையிலிருந்த வழக்கு பிடியாணையன Warrant அதை காவல்துறை நிறைவேற்றியதே தற்போதைய கைது 


  மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சேதுராமன் மகன் ரமேஷ் சேதுராமன்.  2012-13 ஆம் ஆண்டில், மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணியாளர்களைத் தாக்கியதாகவும், சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கிற்காக மேலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு இவருக்குப் பலமுறை சம்மன் அனுப்பியும் வழக்கில் ஆஜராகவில்லை



என்பதால் , நீதிமன்றம் இவருக்கு எதிராக பிணைப்பில் வெளிவர முடியாத பிடியாணையை  பிறப்பித்தது. சுமார் 14 வருடங்களாக உத்தரவு நிலுவையில் இருந்த நிலையில், காவல்துறை சிறப்புப் படை அமைத்து தற்போது இவரைக் கைது செய்தது. இவரது சகோதரி டாக்டர் பிரதீபா  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தங்களது தந்தை உருவாக்கிய மருத்துவமனைச் சொத்துக்களை ரமேஷ் அபகரிக்க முயன்றதாகவும், அவரது கைதிற்கு இதுவே உண்மையான பின்னணி என்றும் தெரிவித்துள்ளார்       



 மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரும், ஆரம்ப காலத்தில் மதுரை முனிச்சாலையில் சாதாரண கிளினிக் நடத்தி தனது உழைப்பால் உயர்ந்த மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனருமான டாக்டர் என். சேதுராமன் அவர் மனைவி டாக்டர் ராஜம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையை நிர்வகிக்கும் 'எஸ்.ஆர். டிரஸ்ட்' (S.R. Trust)-ன் அறங்காவலர் குழு செயலாளராகவும், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர் ஜூன் மாதம் 2021-ல் காலமானார், எஸ். புதூர் ஒன்றிய் வாராப்பூர் கிராமத்தில் முதுமை காரணமாக ஓய்வில் உள்ள டாக்டர் சேதுராமன் - காலமான டாக்டர் ராஜம் தம்பதியருக்கு


இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளதில் எஸ். ரமேஷ் மூத்த மகன் இவர் ஆரம்பத்தில் குடும்ப அறக்கட்டளை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் இணைந்து செயல்பட்டார். டாக்டர் எஸ். குருசங்கர் இளைய மகன் இவர் தற்போது மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவராகப்  பொறுப்பு வகிக்கிறார். டாக்டர் பிரதிபா மகள் இவர் ஒரு மருத்துவர் மஹா சேமம் அறக்கட்டளையின் தொடக்கக்கால இணை அறங்காவலர்களில் ஒருவர். இந்த நிலையில் ரமேஷ்  தனது நீண்ட கால நண்பர் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறி மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தில் நிலவும் குடும்பப் பிரச்சினையில் ரமேஷ் மீது பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டுப் பொய் வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்.



மருத்துவமனையின் தற்போதைய தலைவரான டாக்டர். குருஷங்கர் ஆளுங்கட்சித் தரப்போடு நெருங்கிய அரசியல் தொடர்பு கொண்டவர் என்பதால், அந்த அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கைத் திசைதிருப்புவதாக லோக் ஜனசக்தி கட்சி எனும் அவரது பாண்டிச்சேரி கட்சி கருதுவதாகவும் அரசின் கைது நடவடிக்கையில் உரிய விசாரணை கோரி தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் மற்றும் சட்டம் நீதி, மின்சார அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரை நேரில் சந்தித்து மூன்றாம் தரப்பினராக மனு அளித்துள்ளார்.  மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். ரமேஷ் சேதுராமனுக்காக லட்சிய ஜனநாயக கட்சியின்  தலைவரும், லாட்டரி சார்லஸ் மார்ட்டின் மகனும் ஆன புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆர்வம் காட்டுவதற்கும் அவரது கைதுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கும் ரமேஷ் தமக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்  தெரிவித்துள்ளார் 



ரமேஷ் சேதுராமனின் கைது ஒரு திட்டமிடப்பட்ட "பொய் வழக்கு"  என்றும், இதில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தற்போதைய தலைவர் குருசங்கர், தனது அண்ணனான ரமேஷ்  மற்றும் சகோதரி பிரதிபா ஆகியோர் நிர்வாகத்திற்குள் வரக்கூடாது என்பதற்காக, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்குகளைப் போட்டுள்ளார் என்று ஜோஸ் மார்ட்டின் தரப்பில் கூறப்படுகிறது. 



அவரது தலையீடு மற்றும் நடவடிக்கைக்கு  எதிராக தற்போது .மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்ப்பட்டால் எங்களது கூட்டமைப்பு சார்பில் எந்த எல்கைக்கைக்கும் போக தயங்க மாட்டோம் என
தேவர் சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உண்மைக்குப்புறம்பான தவறான செய்தியை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஜோஸ் சார்லஸ் மார்டின் மீது தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். மதுரை மாட்டுத்தாவணி அருகில் செய்தியாளர்கள் அரங்கத்தில் தேவர் சமூகத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பார்வேர்ட் பிளாக் தலைவர் பிவி.கதிரவன். தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் ஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது தென் மாவட்ட மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவை குறைந்த செலவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு மதுரையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தை டாக்டர் N சேதுராமன் அவர்களால் தொடங்கப்பட்டு அவரது மகன் டாக்டர் S. குருசங்கரால் நிர்வகிக்கப்பட்டு கடந்த 36 ஆண்டுகளாக தமிழகத்திலே மிகச்சிறந்த மருத்துவமனை என்று மத்திய மாநில அரசுகளால் சிறப்பான மருத்துவ சேவைக்கான நோயாளிகள் பயன்பெறும் வகையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் சில குடும்பங்கள் தற்பொழுது இம் மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு இம்மருத்துவமனையைப் பற்றி எதுவுமே தெரியாத. மக்களால் தமிழகத்தை விட்டு விரட்டப்பட்டு பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்து இந்தியாவில் வாழ்வாதாரத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோ மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவர் தேவர் சமுதாயத் தலைவரின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்டு இன்று வரை தென் மாவட்ட மக்களால் சிறந்த மருத்துவமனை என்று போற்றப்படும் இம்மருத்துவமனையையும் மருத்துவமனை நிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் செய்தி சேனலில் மூலம் உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோ மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டினை சமுதாயத்தின் சார்பாக எச்சரிக்கிறோம்


மருத்துவமனையையும் மருத்துவமனை நிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப்புறம்பான செய்திகளைப் பரப்பி மக்களிடம் தவறாக எண்ணத்தை ஏற்படுத்திய செய்தியை லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் செய்தி சேனலில் இருந்து முற்றிலும் இம்மருத்துவமனை பற்றிய அனைத்து தவறான செய்திகளையும் நீக்கவேண்டும். மற்றும், இந்த தவறான செய்தியை வெளியிட்டதற்கு பகிரங்க மன்னிப்பைத் தெரிவிக்க வேண்டும். மன்னிப்பு கோராத பட்சத்தில் தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் முன்பு அனைத்து மாவட்டங்களிலும் எங்களின் சமுதாய மக்களின் சார்பாக சட்டரீதியான முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். அதோடு மீண்டும் இது போன்று தொடர்ந்து செயல்ப்பட்டால் எங்களது கூட்டமைப்பு சார்பில் எந்த எல்கைக்கைக்கும் போகத் தயங்க மாட்டோம் என்றார்கள். மேலும் உண்மைக்குப்புறம்பான தவறான செய்தியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஜோஸ் சார்லஸ் மார்டின் மீது தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமுதாயத் தலைவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்‌ என்றார்கள்.மீனாட்சி மிஷன் மருத்துவமனை 1990 ஆம் ஆண்டு மருத்துவர் ந. சேதுராமனால் தொடங்கப்பட்டதாகும். 1000 படுக்கை வசதிகளுடன் இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை உட்பட 42 சிறப்புத் துறைகளைக் கொண்டது.

மூவேந்தர் முன்னணிக் கழகம் கட்சியின் தலைவரும் சிறுநீரக மருத்துவருமான ந. சேதுராமனால் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள்  தொடங்கப்பட்ட எஸ் ஆர் அறக்கட்டளையின் கீழ் 1990 ஆம் ஆண்டு மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக திருமதி ராஜம் சேதுராமன் 1985 முதல் 2021 வரை பொறுப்பிலிருந்தார். 1991 இல் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாறியது 2005 ஆம் ஆண்டில் இதன் துணைத் தலைவராக மருத்துவர் . குருசங்கர் பெறுப்பேற்றார். 2020 காலக்கட்டத்தில் 330 மருத்துவர்களுடன் 350 கோடி மதிப்புள்ள மருத்துவமனையாக வளர்ந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில்  தானியங்கி அறுவை சிகிச்சை வசதியையும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் முதன்முறையாக தொலை மருத்துவ தானியங்கிகளை அறிமுகம் செய்தது

அண்ணப் பிளவு சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை என ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.[2][7] இரத்ததான மூகாம், இலவச கண் மருத்துவ முகாம் என மருத்துவ சேவைகளை வணிக நோக்கின்றியும் செய்கின்றனர்.

மதுரையில் செயலபட்டுவரும் இந்நிறுவனம், தனது கிளை நிறுவனத்தினை தஞ்சாவூரில் நிறுவியது. தஞ்சாவூர் மீனாட்சி மிசன் மருத்துவமனைக்கு 2010 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மருத்துவமனை, 2013- ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது. 250 படுக்கை வசதியுடன், அறுவைச் சிகிச்சை வசதிகள் என முக்கியமான 19 துறைகளில் இப்பகுதி மக்களின் மருத்துவத் தேவையினைப் இந்த மருத்துவமனை பூர்த்திச் செய்கிறது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனரான டாக்டர் என். சேதுராமனின் மகன்கள் ரமேஷ் மற்றும் டாக்டர் குருசங்கர் நீண்ட நாட்களாக சொத்து மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக  பிரச்சனை மற்றும் சட்டப் போராட்டங்கள் நிலவி வருகின்றன.சமீபத்தில், ரமேஷ்  சென்னை சைதாப்பேட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இப்பிரச்சனை மீண்டும் பொதுவெளியில் விவாதமாக மாறியுள்ளது.  டாக்டர் என். சேதுராமன் உருவாக்கிய ‘எஸ்.ஆர் டிரஸ்ட்’ (S.R Trust)


மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் அவரது மகன்களான ரமேஷ் மற்றும் டாக்டர் குருசங்கர் இடையே நீண்ட கால மோதல கடந்த 2012-2013 காலகட்டத்திலேயே, மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை மிரட்டியதாக ரமேஷ், அவரது சகோதரி பிரதிபா மற்றும் மைத்துனர் சாய்ராம் ஆகியோர் மீது வழக்குகள் பதியப்பட்டன. அதில் ரமேஷ்  கைது. ரமேஷின் சகோதரி டாக்டர் பிரதிபா , "என் தம்பி குருசங்கர் செய்த கொடுமைகளே எனது சகோதரர் ரமேஷ் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ளது" என ஊடகங்களில் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார், ரமேஷ் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எதிர்த்தரப்பினர் இந்த விவாதத்தை மறுக்கின்றனர். கடந்த 14 ஆண்டுகளாக நீதிமன்றப் பிடியாணையில் தேடப்பட்டு வந்த நபர் என்ற அடிப்படையிலேயே காவல்துறை சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், குடும்பப் பிரச்சினையில் வெளிநபர்கள் மற்றும் லாட்டரி தொழில் பின்னணி கொண்டவர்கள் தலையிடத் தேவையில்லை என்றும் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...