முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நேற்று (31.07.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள ‘சமுத்திர மந்தன்’ எனப்படும் தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு 2030-31 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பரந்த அளவிலான கடல்சார் ஆற்றல் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வரும் நோக்கில், 2025-ம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட நவீன காலச் சமுத்திர மந்தன் என்ற தொலைநோக்குப் பார்வையை இத்திட்டம் நனவாக்குகிறது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உள்நாட்டில் எண்ணெய் வளங்கள் ஆய்வு, உற்பத்தியை விரைவுபடுத்துதல், தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறுதல் ஆகியவற்றில் இத்திட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமையும்.

இத்திட்டம் கடல்சார் ஆற்றல் ஆய்வின் அனைத்து நிலைகளிலும் விரிவான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. உயர்தரத்திலான நில அதிர்வு தரவுகளை ஆராய்தல், செயல்படுத்துதல், ஆய்வு செய்தல், ஆழ்கடல் & மிகவும் ஆழ்கடல் பகுதிகளில் விரைவாக ஆய்வுத் துளையிடுதல், எல்லைப்புறப் படுகைகளில் அறிவியல் ரீதியில் துளையிடுதல், பொதுவான கடல்சார் உற்பத்தி, வெளியேற்றக் கட்டமைப்புகளை உருவாக்குதல், ஒருங்கிணைந்த எண்ணெய், எரிவாயு உற்பத்தி சேவை மண்டலத்தை அமைத்தல் ஆகிய முக்கியமான பணிகள் இதில் அடங்கும். மேலும் டிஜிட்டல் திட்ட மேலாண்மை, திறன் மேம்பாடு, நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், சர்வதேச அளவிலான தொடர்புகள் ஆகியவற்றிற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமுத்திர மந்தன் திட்டம் மூலம் 600 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய்க்குச் சமமான ஆற்றல் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் கடல்சார் ஆய்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதுடன், உள்நாட்டு எண்ணெய், எரிவாயு உற்பத்தியைப் பெருக்கவும் வழிகோலும். பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘தற்சார்பு இந்தியா’ ஆகிய திட்டங்களின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும். சர்வதேச அளவில் போட்டித்தன்மையுடன் கூடிய கடல்சார் தொழில்நுட்பங்கள், சேவைகளுக்கான சூழல் அமைப்பை உருவாக்கும். ஆய்வு, உற்பத்தி சார்ந்த வணிகக் கட்டமைப்பில் பெரும் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தொழில்வளர்ச்சி, புத்தாக்கம், நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நாட்டின் கடல்சார் ஆற்றல் வளங்களை வெளிக்கொணர்ந்து நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்யும் தேசிய அளவிலான மாற்றத்தை உருவாக்கும் திட்டமாக இது திகழும். கடந்த பத்தாண்டுகளில், கடல்சார் பகுதிகளை ஆய்வு செய்தல், சட்ட மற்றும் ஒப்பந்த அமைப்புகளை நவீனப்படுத்துதல், தேசிய தரவு களஞ்சியத்தை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது. அந்தச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, பொதுக்கட்டமைப்பில் முதலீடு, அதிநவீனத் தொழில்நுட்பங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் கடல்சார் ஆய்வில் புதிய சகாப்தத்தை உருவாக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...