முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதயநிதி கைதை வைத்து கடமை கண்ணியம் கட்டுப்பாடு மீறிய திமுக தொண்டர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் பாரதிய நியாய


சன்ஹிதாவின் பல பிரிவுகள், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 4 அன்று சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து திமுகவின் உதயநிதி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்கூட்டிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்,

மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் ஆஜராகி, உதயநிதியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் எண்ணமில்லை என்றும், விசாரணைக்குப் பிறகு அன்றைய தினமே காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்படுவார் எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிமன்றம், விசாரணையை முடித்தவுடன் அன்றே காவல் நிலைய பிணையில் விடுவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், தேவையான போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உதயநிதியையும் அறிவுறுத்தியது. 


தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். காவல் நிலையப் பிணை என்பது பொதுவாக ஜாமீன் வழங்கத்தக்க குற்றங்களில் காவல் நிலையத்திலேயே காவல்துறை அலுவலர்களால் வழங்கப்படும் பிணை.  இது நீதிமன்றக் காவலுக்கு அனுப்பாமல் விடுவிப்பதைக் குறிக்கிறது. ஆனால் வழக்கு முடிந்துவிட்டது என்று அதற்கு அர்த்தமல்ல. விசாரணை தொடரும், தேவைப்பட்டால் மேலும் அழைப்பு சம்மன் விடுக்கப்படலாம், புதிய ஆதாரங்கள் கிடைத்தால் அல்லது விசாரணையில் ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டால் பிணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. 



இந்த வழக்கில் அரசு தற்போது நீதிமன்றக் காவல் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தாலும், விசாரணை முழுமையாக முடியும் வரை சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரலாம். எனவே காவல் நிலைய பிணை உடனடி விடுதலையை உறுதிசெய்தாலும், எதிர்காலத்தில் இந்த வழக்கில் எந்தவிதமான மேலதிக நடவடிக்கையும் இருக்காது என்று உறுதியளிக்க முடியாது. தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு காவல் நிலைய பிணை வழங்கப்பட்டதால் இந்த வழக்கில் எதிர்காலத்தில் அவர் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இதுவே சட்டத்தின் நிலை.அது சரி இந்த எழு வினா பொதுமக்கள் தரப்பு சார்பில் வருவது 


அடக்க முடியாத ஆத்திரம், வெறுப்பு,எதிர் கட்சி தலைவரான திமுகவின் வன்மம் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் விஜய் மீது!

ஏன் வருகிறது, தேர்தல் முடிவு வந்த போதே அவரை தேற்றி வழிக்கு கொண்டு வருவதற்கே தலைமைக் குடும்பம் தடுமாறிவிட்டதாம். மற்ற பல சீனியர் தலைவர்கள் வந்து சமாதானப்படுத்திய போது, ’’எடப்பாடி முதல்வராவதைக் கூட ஏற்றுக் கொள்வேன். விஜய் ஒரு போதும் முதலமைச்சர் ஆகக் கூடாது’’ என உதயநிதி கோபத்தின் உச்சத்திற்கு போனதால் தான், நடக்கக் கூடாதவை எல்லாம் அரங்கேறி, எல்லாம் பெய்லியர் ஆனது.

அதன் பின்னர் ஆட்சி கவிழ்ப்பு அசைன்மெண்டிற்கு செந்தில் பாலாஜியை களம் இறக்கிவிட்டு துபாய்க்கு பறந்தார். தற்போது விஜய் குறிவைத்தழிக்கும் உதயநிதியின் பகை அரசியல் தன் தலையில் தானே கொள்ளியிடும்  தன்னழிப்பு அரசியலுக்கு வித்திட்டுக் கொண்டுள்ளது.


அரசியல் வாழ்க்கையில் பொது நலனுக்காகவோ, அநீதியை தட்டிக் கேட்டோ ஒருவர் கைதாவது பெருமைக்குரிய விஷயம்.

ஆனால், கண்ணியக் குறைவான ஆபாச பேச்சுக்காக ஒரு அரசியல் தலைவர் கைதாவது அவமானம்!

உதயநிதி மேல் பதியப்பட்ட வழக்குகளில் அவர் கைதுக்கான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன;

வார்த்தைகளாலோ, சைகைகளாலோ அல்லது செயல்களாலோ பெண்ணின் கண்ணியத்துக்கும் மானத்துக்கும் பங்கம் விளைவித்தல். (BNS 79) 

தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளைத் தடுத்தல். (2002 – பிரிவு 4)

பொது அமைதியை சீர்குலைத்து குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் ஒருவரை திட்டமிட்டே அவமதிப்பது. (BNS 352)

ஆக, காவிரி தண்ணீரை திறக்க மறுக்கும் கர்நாடகத்தைக் கண்டித்தோ, இதில் நடு நிலை தவறி நடக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவோ போராடி கைதாகி இருந்தால், அது திமுக தொண்டர்களுக்கும் பெருமை தந்திருக்கும்.

ஆபாசமாகப் பேசி கைதான ஒரு தலைவருக்கு ஆதரவாக தெருவில் இறங்கி போராட வேண்டிய அவலச் சூழல் இன்றைய திமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது வருத்தமாகத் தான் உள்ளது.

தவெக ஆட்சியை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் வெறியாக உள்ள உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கவுள்ள (ஆகஸ்ட்5,2026) பட்ஜெட் கூட்டத் தொடரில் சில அசம்பாவிதங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாகவும் பரவலாக பேசப்பட்டு வந்த சூழலில் தான் இந்த ஆபாச பேச்சு விவகாரத்தை உதயநிதிக்கு எச்சரிக்கை விடுக்கும் வாய்ப்பாக விஜய் பயன்படுத்தியுள்ளார் என நினைக்கிறேன்.

கைது நடவடிக்கை என்றவுடன்ஊழலில் ஊறித் திளைத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி ஆகியோரும் நீதிமன்றம் சென்று நிம்மதி அடைந்தனர். ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு கூட செந்தில் பாலாஜியை சிறைப்படுத்தி விசாரிக்க இயலாத நிலை உள்ளது. 

இதோ தற்போதும் நீதிமன்றம் வழியே உதயநிதி உடனே விடுவிக்கப்பட வேண்டும் என்ற உத்திரவை பெறுகின்றனர். இந்த ரீதியில்  நீதி பரிபாலன அமைப்பு முறையை செல்வாக்கானவர்கள் தங்களுக்கானதாக மாற்றிக் கொள்ளும் வரையில் நியாயங்களை நிலை நாட்டுவது அரிதினும் அரிது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...