தமிழ்நாட்டில் 10 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் இ ஆ ப வெளியிட்டுள்ள அறிவிப்பில், உளவுத்துறை டிஜிபியாக பணிபுரிந்த பாலநாகதேவி, சைபர் கிரைம் டிஜிபியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார், வேலூர் சரக டிஐஜியாக பணிபுரிந்த தர்மராஜன், பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு காவல் துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம் உள்ளிட்ட 3 பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
சென்னை காவல்துறையின் தெற்கு இணை ஆணையராக பணிபுரிந்த பகர்லா செபாஸ் கல்யாண், உளவுப் பிரிவு உள்பாதுகாப்பு டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலி சரக டிஐஜியாக பணிபுரிந்த சரவணன், சென்னை சிஐடி உளவுத்துறை டிஐஜியாக மாற்றப்பட்டார்.
திருவாரூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த கராட் கரூண் உத்தவராவ், சென்னை குற்றவியல் உளவுத்துறை பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த மயில்வாகனன், சென்னை சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்தத மதன், சென்னை பாதுகாப்புப் பிரிவு குற்றபுலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.சென்னை குற்ற புலனாய்வுத் துறை கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த சண்முகம், சென்னை சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை மெட்ரோ மண்டல குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த மாதவன், சென்னை பாதுகாப்பு பிரிவு குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.சென்னை சட்டம் - ஒழுங்கு கூடுதல் காவல் துறை ஆணையரின் உதவிப் பொது அதிகாரியாக பணிபுரிந்தத சிலம்பரசன், சென்னை சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்த அதிரடி மாற்றங்கள் காவல் துறையின் உளவுத்துறை, பாதுகாப்பு மற்றும் சைபர் குற்ற பிரிவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் கண்காணிப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தில் வேலன், சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராஜீவ் குமார், சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் துறை பயிற்சி பள்ளி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல சென்னை மாநகரக் காவல்துறையில் லஞ்சப் புகார்களை விசாரிக்க தனி லஞ்ச ஒழிப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது
காவலர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பான புகார்களை பொதுமக்கள் WhatsApp அல்லது தொலைபேசி மூலம் 7871723000 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். எனவும்
புகார் அளிப்பவர்களின் பெயர் முகவரி அடையாளம் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். எனவும்
பெறப்படும் புகார்கள் விசாரிக்கப்பட்டு, லஞ்சம் கேட்டது அல்லது பெற்றது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவும்
“காவல்துறையின் அதிகாரப்பூர்வ பணிகளை செய்ய லஞ்சம் வழங்க வேண்டாம்” என சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் IPS அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.





கருத்துகள்