முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேமுதிக, பாமகவை உடைத்து அதிமுகவில் இணைத்தது சரி எனில் தவெக செய்வது எப்படித் தவறாகும்

தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மூலம் கேப்டன் என வர்ணிக்கப்பட்டு,  பார்க்கப்பட்ட நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியை உடைத்த அதிமுகவின் ஜெ ஜெயலலிதா


தற்போது அதே பாணியைக் கையில் எடுத்த  தவெக முதல்வர் சி. ஜோசப் விஜய்

2011 சட்டமன்ற தேர்தலில் வென்று எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டார். இதனால் தேமுதிகவே இரண்டானது. குறிப்பாக கட்சியை விட்டு விலகிய 11 எம்.எல்.ஏ.க்கள் விஜயகாந்தை சட்டமன்றத்திலேயே எதிர்த்துப் பேசி அவமதித்தனர். தற்போது அதே பாணியைக் கையில் எடுத்துள்ள தவெக தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய், அதிமுகவில் தற்போது அதிருப்தியில் உள்ள எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் டீமை இபிஎஸுக்கு எதிராக பேச தயார் படுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,


இதன் மூலம் கட்சியிலும், மக்களிடமும் எடப்பாடி கே பழனிசாமி மீது அதிருப்தி அதிகரிக்கும் என்றும், அவரைத் தனிமைப்படுத்தவும் தவெக டீம் திட்டமிட்டுள்ளதாகப் தகவல் பரவலாக பேசப்படுதிறது, .தவெக பொதுச் செயலாளரும் உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்சித்துறை அமைச்சருமான புஸ்ஃஸி என். ஆனந்த் முன்னிலையில்


தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகளின் பட்டியலில் :முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், என்.ஆர். சிவபதி, கடம்பூர் சி. ராஜு, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், பச்சைமால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வனரோஜா, இளவரசன், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் அதன் பின்       முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ்    தற்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இணைந்த மரகதம் குமாரவேல், எஸ்.ஜெயக்குமார், பி.சத்தியபாமா,  இசக்கி சுப்பையா, டாக்டர் சி. விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர். ஜூன் மாதம் 16 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் எம்.ஆர். விஜயபாஸ்கர்:  கரூர் தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர்.  ஜூன் மாதம் 29 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தவர்களுடன் சேர்த்து முன்னாள் அமைச்சர்கள் மதுரை எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவெகவில் இணைந்தனர்.


முக்கிய நிர்வாகிகள் ராஜேஷ் -  சிவகங்கை பொன்மணி பாஸ்கரன் வட சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர். மேலும் 7-க்கும் மேற்பட்ட முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்,  மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் இதில் ஒரு கடந்த கால முன்கதை அரசியல் இங்கு அறியாத பலர் உண்டு கடந்த அதிமுகவின் செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த ஆட்சிக்காலத்தில் தான் 

தேமுதிக சார்பில், 2011 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், திட்டக்குடி தொகுதி தமிழழகன், பேராவூரணி தொகுதி அருண் பாண்டியன், ராதாபுரம் தொகுதி மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி சுரேஷ்குமார், சேந்தமங்கலம் தொகுதி சாந்தி, விருதுநகர் தொகுதி மாஃபா.பாண்டியராஜன், திருத்தணி தொகுதி அருண் சுப்பிரமணியம், மற்றும் ஈரோடு சந்திரகுமார் எனப் பலருக்கும் சட்ட மன்ற உறுப்பினர் எனும் முகவரியைக் கொடுத்தவர் அதன் தலைவர் நடிகர் அ.விஜயகாந்த்  ஆனால் இவர்கள் யாரும் அவருக்கு விஸ்வாசம் காட்டி நடந்தார்களா? இல்லை. காரணமாவது சரியாகச் சொன்னார்களா, இல்லையே, 



இவர்கள் தான் வரிசையில் நின்று,  ஜெ.ஜெயலலிதாவைப் பார்த்து, அ.விஜயகாந்த்  முழுமையாகக் கவிழக் காரணமாக இருந்தவர்கள். 

இவர்கள் மொத்தபேரும், 'தொகுதி மேம்பாடு தொடர்பாக மட்டுமே முதல்வரைச் சந்தித்தோம்' என்று தான் முதல் காரணத்தைச் சொன்னார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் பேராவூரணி அருண் பாண்டியனுக்கு சினிமா, அரசியல் இரண்டிலும் வாய்ப்பு மற்றும் அறிமுகம் கொடுத்ததே, நடிகர் அ. விஜயகாந்த் தான். தொகுதி மக்கள் நலனுக்காக இப்படியான மகத்தான தியாகம் செய்த இவர்கள்தான், ஓரிரு நாள்களில் சட்டப் பேரவையில்தேமுதிக இல்லை எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்ற ஒரு புதுவரிசை உண்டாகவும் காரணமாக இருந்தனர்.







 அந்தப் புதுவரிசை தான், அடுத்தடுத்த நாள்களில் அதிமுக ஆதரவு நிலை எடுத்து அவர்கள் தலையில் தூக்கிச் சுமந்த கேப்டனான விஜயகாந்தைக் கீழே தள்ளி சிறப்பாகச்  செயல்பட ஆரம்பித்தது. தான் துவக்கம் துவங்கி வைத்தவர் அதிமுகவின் காலஞ்சென்ற ஜெ. ஜெயலலிதா, அவர் விஜயகாந்த்தை வீழ்த்தியது போலவே அவரையும் டெல்லி பலம் கொணட ஒரு மடாலயம் வீழ்த்தி வெற்றி கண்டது தான் இதில் ஹைலைட் நிலக்கோட்டை புதிய தமிழகம் கட்சி ராமசாமி ஆகியோரும், இதுபோலவே தொகுதி மேம்பாடு தொடர்பாக, முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுக ஆதரவு சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டனர். பிறகு பத்து சட்ட மன்ற உறுப்பினர்க்களும் சபாநாயகரைச் சந்தித்து தங்களது உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அடுத்ததாக குடும்பத்தோடு போயஸ் கார்டனுக்கு போய், முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்து குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

பிற்காலத்தில் பத்துபேரில் இரண்டு பேர் எதிர்கால அரசியல் வாழ்க்கையில் தேறினர். படிகள் பல ஏறினர். அதில் விருதுநகர் க. பாண்டியராஜன், கல்வி மந்திரியாகி மாஃபா. பாண்டியராஜன் ஆனார். மைக்கேல் ராயப்பன் கொஞ்சம் கண்டு கொள்ளப் பட்டார். மற்றவர்கள் வளர்ச்சி குறித்து இப்போது வரை அவ்வளவு பெரியதாக வெளியில் தெரிய வில்லை- ஆகவே அது குறித்து யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் அரசியல் வாழ்வு அதோடு அஸ்தமனம் ஆனது,

இது மட்டுமா  கவுன்டர், படையாச்சி, நாயக்கர் ஆகியோர் ஒருங்கிணைந்த வன்னியர் ஜாதிச் சங்கமாக இருந்து வன்னிய அடிகளாருடன் மோதல் காரணமாக அதன் பின் 1989 ஆம் ஆணடு வரை திண்டிவனம். மைலம் சாலையில் சிறிய கிளினிக் மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் ச. ராமதாஸ் நிறுவனராக இருந்து உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 1991 ஆம் ஆண்டு முதல் துவங்கி முதல் சட்டமன்ற உறுப்பினர் பனருட்டி எஸ். ராமச்சந்திரன் வெற்றி பெற்று பதவியை அடைந்து அதன் பின் அவர் போல 1996 ஆம் ஆண்டில் வென்ற நால்வரில் இருவரும் அதன் பின் தேர்தலில் வென்ற 18 நபர்களில் சிலரும் அதிமுக, திமுக உள்ளிட்ட அப்போதய பெரிய கட்சியில் இணைந்த மக்கள் பிரதிநிதிகள் ஏராளம் 

அதில் முதலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள எடப்பாடி ஐ.கனேசன்,  வை.காவேரி, தாரமங்கலம் கோவிந்தன், சமயநல்லூர் வசித்து வந்தவாசியில் நிறுத்தி வென்ற க. முருகவேல் ராஜன், டாக்டர் மலையப்பசாமி, கபிலர்மலை .Dr.நெடுஞ்செழியன், தனிக் கட்சியே துவங்கிய பண்ருட்டி க.வேல்முருகன், ஏழ்மை நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஆன சாமானிய அந்தியூர் கிருஷ்ணன், தாராபுரம் சிவகாமி வின்சென்ட், செஞ்சி கழந்தப்பாடி பா.செந்தமிழ்ச்செல்வன்  முகையூர் VAT கலிவரதன், பவானி ராமநாதன், போரூர் சண்முகம், காமராஜ், அனைக்கட்டு கலையரசு,    திருத்தணி கோ.ரவிராஜ், ஓமலூர் தமிழரசு, கனிதா சம்பத், ஆகியோர் மற்றும் முதல் பாமக தலைவரான சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் தீரன், மத்திய இணை அமைச்சரான, பொன்னுச்சாமி, முன்னால் மத்திய இணை அமைச்சரான இரண்டாவது பொதுச்செயலாளர் தலித் இரா எழில்மலை, பாண்டிச்சேரி இருமுறை நாடாளுமன்ற உறுப்பினர் மு.இராமதாஸ்,  தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் இணை பொதுச்செயலாளராக இருந்த 

பு.தா.இளங்கோவன், தனிக்கட்சியே துவங்கி வெளியேறிய பன்ருட்டி க.வேல்முருகன் மற்றும் உள்ளிருந்தே குழிபறித்து பலரை வெளியேற்றி கடைசியாக தானும் அதே நிலைக்கு ஆளான தொடக்கப்பள்ளி ஆசிரியர் பின் உலகப் பணக்காரக் குடும்பமாகவே உயர்ந்த ஜி. கே. மணி ஆகியோர் ஆவர், அப்போது அது சரி என்றால் இப்போது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையும் பலரை அக்கட்சியின் பிரமுகர்கள் கேள்வி கேட்பது வினோதம்,

இவர்கள் அனைவருமே, அப்போது அதிமுக பொதுச் செயலாளர், காலஞ்சென்ற முதலமைச்சரான செல்வி ஜெ.ஜெயலலிதாவை அல்லது காலஞ்சென்ற முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியைச் சந்தித்து கட்சியில் இணைந்தனர் என்பது தானே கடந்த கால வரலாறு.  அதிமுகவில் லீடர் என்பதே பொதுச்செயலாளர் பதவி தான்.


 தொகுதி மேம்பாடுக்காக- மக்கள் நலனுக்காக கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முதலமைச்சரைச் சந்தித்தோம் என்று அப்போது போல் இப்போது யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. காரணம் நடிகராக விஜய் நற்பணி மன்றம் துவங்கி தற்போது அரசியல் கட்சி துவங்கி வளரும் வரை வரும் நபர்கள் அனைவரையும் இணைப்பது எப்போதும் பொதுச்செயலாளர் மற்றும் தற்போது அமைச்சரான புஸ்ஸி ஆனந்த் தான். இதில் பலரும் சுய விருப்பம் காரணமாக இணைவது என்பது ஜனநாயக நெறி தானே தவிர வேறு இல்லை, தொகுதி மேம்பாட்டுக்காகவே மக்கள் நலனுக்காகவே கட்சியின் தலைவர் மற்றும் முதலமைச்சரைச் சந்தித்தோம் என்று அப்போது போல் இப்போது யாரும் சொல்லிக் கொள்ளமுடியாது. தவெக கட்சி தேர்தலைச் சந்திக்கும் முன் இணைந்த பலர் அமைச்சர் கே. ஏ.செங்கோடடையன் போலப் பதவியை பிடித்தனர், ஆனால் அரசியல் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து கணிக்க முடிமாத பலர் தற்போது வழி இல்லாமல் இணைகிறார்கள், காரணம் மக்கள் பலம், இதில் பாஜக பிள்ளையார் பிடிக்க குரங்காகிய கதை போல தற்போது காங்கிரஸ் பலம் பெற தவெக உதவும் நிலை,  அரசியல் களத்தில் அதிமுகவை ஒழித்து பாஜக காலூன்ற முயன்று அது கடந்த ஒன்பது ஆண்டுகள் அது நடக்கவில்லை மேலும் தற்போது பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தரப்பு 20 லட்சம் உறுப்பினர் உடன் அரசியல் களம் காணும் நிலையில் பாஜகவின் பலம் என்ன என்பது தெரியவில்லை தற்போது நடிகர் தனுஷ்  வேறு சினிமா கவர்ச்சியில் களமிறங்கத் தயாராக உள்ளார்,  அதன் காரணமாக  கோயம்பத்தூர் வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர,, சூலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 

மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும் உறுப்பினர் சேர்க்கவும் கோயம்பத்தூர் மாவட்ட தலைவர் G. சங்கரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோயம்பத்தூர் தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை, ஆகியவற்றில் இயக்கம் தொடங்க, உறுப்பினர் சேர்க்கைக்கு கோயம்பத்தூர் தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சதீஸ்குமாரை தொடர்பு கொள்ள வேண்டும். எனவும் தனுஷ் வழியில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்படுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ள கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற அனைத்திந்திய தலைவர் சுப்ரமணியம் சிவா, அனைத்திந்திய செயலாளர் இராஜா ஆகியோர் கடந்த 8- ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், காணலாம்   மக்கள் மத்தியில் நடிகர் விஜயை 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்ப்புகள் உடன்  கண்ணை மூடிக்கிட்டு ஆதரித்த ஜென் சி மற்றும் ஜென் z இளைய தலைமுறை மக்கள் அவர் முதல்வரான பின் தற்போது அவர் சார்ந்த கட்சி சிறுபான்மையினரின் மற்றும் பட்டியல் சமூகத்தை மட்டுமே முன் நிறுத்தி அரசியல் செய்வதால் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் முற்பட்ட வகுப்பு மக்கள் மத்தியில் சிறு சலசலப்பு  நிலவும் நிலையில் நடிகர் தனுஷ் அரசியல் வரவு சில சினிமா வாக்கு வங்கி உடைப்பு வேலையின் துவக்கம் தான், எனலாம், இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் நிதியமைச்சர் நா. மரிய வில்சன்  வெளிப்படுத்திய கோபமும், அதனுடன் இணைந்த மதச்சார்புடைய கருத்துக்களும் மாநிலத்தின் அரசியல் பண்பாட்டிற்கு அர்த்தமானதாக அமையவில்லை பட்ஜெட் விவாதத்தின் போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இது தமிழ் ஆர்வலர் என்ற முறையில் எழுப்பப்பட்ட நியாயமான விமர்சனமே. ஆனால் அதற்கு பதிலளித்த அமைச்சர், “நான் பிறப்பால் கிறிஸ்தவன். எனக்கு கிறிஸ்தவம் அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழியை கற்றுக்கொடுத்திருக்கிறது. இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது” எனக் கூறியது மட்டுமல்லாமல், தனது பேச்சு நடையை யாருக்காகவும் மாற்றமாட்டேன் என்று ஆவேசமாகவே அறிவித்தார். சபாநாயகரே அவரை அமைதிப்படுத்த வேண்டிய நிலை உருவானது. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பதவி வகிப்பவர், தமிழை தாழ்த்தி தனது மதத்தை உயர்த்திப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 

ஜனாதன தர்மமும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் போதிக்கிறது. ஒவ்வொரு மதமும் அன்பை, இரக்கத்தை, பொறுமையை வலியுறுத்துகிறது. ஆனால் தன் மதம் மட்டும் தான் இவற்றை கற்றுக்கொடுத்தது என்ற உணர்வை உருவாக்குவது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது. பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஜெபமாலையுடன் வந்து சிலுவை அடையாளம் செய்த அமைச்சர், தற்போது தமிழை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசியிருப்பது தொடர்ச்சியான மதச்சார்பு வெளிப்பாடாகவே தெரிகிறது. 

கல்வித்துறையில் 25 முதல் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்று அவரே கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பழக்கப்பட்டவர் என்பதால் தமிழில் சில பிழைகள் ஏற்படலாம். ஆனால் அதை ஒப்புக்கொண்டு முயற்சி செய்வதற்குப் பதிலாக, தமிழ் படித்தவர்களுக்கே அன்பு தெரியாது என்று சொல்வது ஆணவத்தின் உச்சம். மேலும், சொத்துத் தகராறில் தனது சொந்த அண்ணன் குடும்பத்தினரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், “அன்பு மொழி” பற்றி பேசுவது அவரது இரட்டை வேடமாகவே தென்படுகிறது. சட்டமன்றப்பேரவை என்பது அனைத்து மக்களின் பிரதிநிதித்துவ அரங்கம். அங்கு மதத்தை முன்னிறுத்தி தமிழை இழிவுபடுத்துவது மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தானது. 

நிதியமைச்சர் பதவி என்பது பொறுப்பானது. கோபத்தைக் கட்டுப்படுத்தி, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதே அந்தப் பதவிக்கு அழகு. தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மதிக்கும் மனப்பான்மையை அமைச்சர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் விவாதங்களை மதரீதியாக மாற்றி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்.அன்பை போதிக்காத மதம் ஏதாவது உலகில் இருக்கிறதா என நமக்குத் தெரியவில்லை. இது ஒரு தற்காலிக தஞ்சம்..




அரசியல்... மக்கள் சேவைக்கானது தான். அயோக்கியர்களின் கடைசி புகலிடமும் அதுதான் என்பது மானுடவியல் கொடுமை. தமிழ் என்றால்  தவெக பாணியில் கெத்து தமிழ் என்றால் தனி பவர், தமிழ் என்றால் தெறிமாஸ்,, தமிழ் என்றால் டாப் டக்கர்,  தமிழ் என்றால் மெர்சல்,  தமிழ் என்றால் மஸ்து  தமிழ் என்றால் ஒஸ்தி.. என இப்போது பேசும் தமிழ் இதில் பள்ளிக் கல்வி அமைச்சர் தந்த விளக்கம் வட்டார வழக்கிலான தமிழ், இதில் சென்ளை தமிழ் வேறு, ஆஹா  போடு விசில்..

அப்படி போடு..... போடு......போடு.... அசத்தி போடு கண்ணாலே...எனப் பாடுவதைத் தவிர வேறு வழி இல்லை, ஊழல் திமுகவை, சுயநல அதிமுகவை தோற்கடித்த மக்கள், தற்போது திக்கற்ற நிலையில் தெய்வம் துணை என நிற்கிறார்கள். ஜனநாயகன் தான் இனி 2031 வரை ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...