முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈசனைக் காண கைலாயம் போனவர்கள் நேபளத்தில் தற்போதய நிலை

நேபாளத்தின் ராசுவா  மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக,



கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சுமார் 400 பேர் குறித்து தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளனர். இன்று புதன்கிழமை  ஆகஸ்ட் 26, 2026 அதிகாலையில் போதே கோசி  நதியில் பனி உறுகி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் எல்லைப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 390 ஆன்மீக சுற்றுலா யாத்ரீகர்கள் ராசுவாகதி  எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர் 



அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் 105 இந்தியர்கள், 37 வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் சில வெளிநாட்டினரும் நேபாளிகளும் அடங்குவர். நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் மிதேரி பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பல பாலங்களும் சாலைகளும் சேதமடைந்தன.நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது காத்மாண்டு நகரில் தொடங்கி திபெத் எல்லை வழியாகச் செல்லும் ஒரு ஆன்மீகப் பயணமாகும்.




காத்மாண்டுவிலிருந்து ரசுவாகடி மற்றும் கெருங்  எல்லை வழியாக திபெத் நுழைந்து கைலாஷ் செல்வது பொதுவான வழியாகும்.  இப்பயணம் பொதுவாக 10 முதல் 15 நாட்கள் வரை நீடிக்கும். இதற்குச் சீனா விசா மற்றும் திபெத் பயண அனுமதியான TAR Permit தேவைப்படுகிறது.நேபாளம் ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்களின் நிலை என்னவானது கும்பகோணம் சூப்பர் யாத்ரா சர்வீஸ் மூலம் சென்றவர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா சென்றவர்களும் மானசரோவர் யாத்திரை சென்றவர்களும் இந்தியர் (தமிழர்கள்) உள்ளிட்டோர் தொடர்பின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 





நேபாளத்தின் வட பகுதியில் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி  ஆற்றில் திடீர் வெள்ளத்தில் வெளிநாட்டினர், நேபாளிகள் உட்பட 384 சுற்றுலா பயணிகள் தொடர்பு எல்லையை தாண்டி (காணாமல் போனதாக) நேபாள அரசு சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளதில் இந்தியர்கள் பலரும் அடங்குவர். அதில் கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் 36 பெண்கள் உட்பட 57 பேர் சென்றனர். இவர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அப்பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.நேபாள சுற்றுலா வாரியத்தின் (NTB) அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 105 இந்தியர்கள், 12 பிரிட்டிஷ் நபர்கள் உட்பட மொத்தம் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 93 நேபாள நாட்டினரும் தொடர்பை இழந்துள்ளனர்.






கும்பகோணத்தைச் சேர்ந்த 'சூப்பர் யாத்ரா' ஏஜென்சி மூலம் கைலாஷ் மானசரோவர் ஆன்மீகப் பயணத்திற்காக சென்ற 57 தமிழர்கள் ரசுவா மாவட்டத்தில் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பேருந்தில் பயணித்த 20 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, திமுரே  பகுதியில் உள்ள ஆயுதப்படைக் காவல் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். மீதமுள்ள 37 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. நேபாள ராணுவம், உள்ளூர் காவல்துறை மற்றும் ஆயுதக் காவல் படையினர் மக்கள் இணைந்து ஹெலிகாப்டர்கள் மற்றும் தற்காலிகப் பாலங்கள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமரைத் தொடர்புகொண்டு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலையைத் தெரிந்துகொள்ளவும், அவர்களை மீட்கவும் தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் விபரங்களை அறிய விரும்புவோர் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:தமிழ்நாடு அரசு உதவி எண்கள்: 80690 09900, 80690 09901நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரக எண்கள்: +977 985 131 6807, +977 970 910 7500நேபாள சுற்றுலா வாரிய எண்கள்: 1234 (Toll-free), 1144 (Hotline) மூலம் தகவல் பெறலாம்,கைலாஷ் மலையில் ஏறிய ஒரே நபர் என்று திபெத்திய ஆன்மீகவாதியான மிலாரேபா (Milarepa) மட்டுமே வரலாற்றிலும் புராணங்களிலும் கூறப்படுகிறார்.கைலாஷ் மலையும் மிலாரேபாவும்சிவபெருமான் உறைவிடம்: இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் கைலாஷ் மலையை மிகவும் புனிதமான இடமாகவும், சிவபெருமான் வசிக்கும் இடமாகவும் கருதுகின்றனர்.ஏற முடியாத மலை: புனிதத்தன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் கைலாஷ் மலையில் ஏற யாருக்கும் அனுமதி இல்லை; இது உலகின் ஏறப்படாத மலைகளில் ஒன்றாக உள்ளது.மிலாரேபாவின் சாதனை: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திபெத்திய யோகியான மிலாரேபா தனது ஆன்மீக சக்திகளால் மட்டுமே கைலாஷ் மலையின் உச்சிக்குச் சென்று திரும்பியதாக நம்பப்படுகிறது.எச்சரிக்கை கதை: மலையின் உச்சிக்குச் சென்று திரும்பிய மிலாரேபா, அங்கு கடவுளின் சக்தி இருப்பதாகவும், மலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் யாரும் மேலே ஏற வேண்டாம் என்றும் மக்களை எச்சரித்ததாக ஐதீகம் உள்ளது.

ஹிந்து சமயப் புராணங்களின் படி, சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் போன்றோரும், திபெத்திய துறவியான மிலரேபா பண்டைய காலத்தில் கயிலாய மலையின் உச்சிக்குச் சென்றதாக நம்பிக்கைகளும் வரலாறுகளும் கூறப்படுகின்றன.  சுந்தரர் வெள்ளை யானை மீது ஏறி கயிலாயம் சென்றதாகவும், அவருடன் சேரமான் பெருமாள் குதிரையின் மீது ஏறி கயிலாயம் சென்றதாகவும் பெரியபுராணம் கூறுகிறது.           


தற்காலத்தில் கைலாஷ் எனும் கயிலாய மலையின் உச்சிக்கு மனிதர்கள் யாரும் ஏற அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் அது முடியாத காரியம் என நம்பப்படுகிறது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு திபெத்திய ஆன்மீகத் துறவி மிலரேபா மட்டுமே கயிலை மலையின் உச்சிக்குச் சென்ற ஒரே நபர் என நம்பப்படுகிறது. கைலாயம் மானசரோவர் யாத்திரை போனவர்கள் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் தரிசனம் கிடைக்கும்.இதனை கூறி பயமுருத்துவதாக நினைக்க வேண்டாம் கைலாஷ் மலை திபெத்தின் Ngarii பகுதியில் அமைந்துள்ள மலை ஹிந்துக்கள் மற்றும் சில பண்டைய இந்திய மதங்களுக்கு புனிதமானது. இது இந்து கடவுள் சிவனின் இருப்பிடம் ஹிந்துக்கள் , பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் கைலாஷ் மலையை மிகவும் புனிதமான இடமாகவும், சிவபெருமான் வசிக்கும் இடமாகவும் கருதுகின்றனர். புனிதத்தன்மை மற்றும் பாதுகாப்புக் காரணங்களால்


கைலாஷ் மலையில் ஏற யாருக்கும் அனுமதி இல்லை; இது உலகின் ஏறப்படாத மலைகளில் ஒன்றாக உள்ளது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திபெத்திய யோகியான மிலாரேபா தனது ஆன்மீக சக்திகளால் மட்டுமே கைலாஷ் மலையின் உச்சிக்குச் சென்று திரும்பியதாக நம்பப்படுகிறது. மலையின் உச்சிக்குச் சென்று திரும்பிய மிலாரேபா, அங்கு கடவுளின் சக்தி இருப்பதாகவும், மலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் யாரும் மேலே ஏற வேண்டாம் என்றும் மக்களை எச்சரித்ததாக  ஐதீகம் உள்ளது.திருக்கயிலாயம்  இமயமலையின் மேற்குப் பகுதியில் திபெத்தில் அமைந்துள்ள புனித மலை. ஹிந்துக்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் நித்திய வாசஸ்தலமாகவும், பௌத்தர்கள் மற்றும் சமணர்களால் போற்றப்படும் மிக முக்கியமான தெய்வீகத் தலமாகவும் விளங்குகிறது,  கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,638 மீட்டர் உயரம் கொண்டது,

மேற்குத் திபெத்தில் கயிலை மலைத்தொடரில் அமைந்துள்ளது. சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா ஆகிய பெருநதிகள் இங்கிருந்து தான் உற்பத்தியாகின்றன, இமலையின் அருகே புனிதமான மானசரோவர் நன்னீர் ஏரியும், இராட்சதலம் ஏரியும் உள்ளன. இங்குள்ள மூலவர் பரமசிவனாகிய கயிலாயநாதர்,  இறைவி பார்வதி தேவி. தமிழ் இலக்கியங்களிலும் தேவாரத்திலும் இது 'திருநொடித்தான்மலை' என அழைக்கப்படுகிறது.திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமான், தன் வாழ்நாளில் கயிலை மலைக்குச் சென்று சிவபெருமானை நேரில் தரிசிக்க வேண்டும் எனும் பெரும் ஆவல் கொண்டார். வயது முதிர்ந்த நிலையிலும், உடல் நலிவுற்ற நிலையிலும் அவர் கயிலையை நோக்கி தடி ஊன்றி, கைகளாலும், மார்பினாலும் ஊர்ந்து யாத்திரை மேற்கொண்டார்.


அவரது பக்தியைக் கண்டு உருகிய சிவபெருமானே முனிவர் வடிவில் தோன்றி, "இங்கிருக்கும் குளத்தில் மூழ்கி, சோழநாட்டு திருவையாறு திருக்குளத்தில் எழுந்து வா" எனக் கட்டளையிட்டார். அதன்படியே அப்பர் குளத்தில் மூழ்கி திருவையாறில் எழுந்தபோது, அங்குள்ள உலகமே கயிலாயமாக மாறியிருப்பதைக் கண்டார். அனைத்து உயிர்களும் அம்மையப்பனாக (சிவனும் பார்வதியுமாக) காட்சியளிப்பதைக் கண்டு உருகி அவர் பாடிய புகழ்பெற்ற தேவாரமே இதுவாகும்:             

                   "
மாதர் பிறைக்கண்ணி யானை மலையான் மகளோடு பாடிப்போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்யாதும் சுவடுபடா மல்ஐ யாறடை கின்ற போதுகாதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்கண்டேன் அவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்."  எனவும்             
 
"வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றிஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றிஓவாத சத்தத் தொலியே போற்றிஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றிஆறங்கம் நால்வேத மானாய் போற்றிகாற்றாகி எங்குங் கலந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி!" என்கிறார்.       மேலும்  ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்  தலைமையில் கைலாச யாத்திரை சென்ற குழுவினர் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் 77 பக்தர்கள் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதுகைலாச மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டு, நேபாள எல்லைக்கு அருகே திபெத் பகுதியில் உள்ள கியிரோங்  குடிவரவு (Immigration) அலுவலகத்தில் பக்தர்கள் காத்திருந்த போது இந்தத் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எல்லையில் உள்ள குடிவரவு அலுவலகக் கட்டிடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து அடித்துச் சென்றுள்ளது. இதனால் அங்கு தங்கியிருந்த 77 பக்தர்கள் மற்றும் 3 தன்னார்வலர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.


ஜக்கி வாசுதேவ் வழிகாட்டுதலில் சென்ற 21 குழுக்களில், 495 பக்தர்கள் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர். மேலும் 743 பேர் திபெத் பகுதியிலும், 148 பேர் நேபாளத்தின் பிற பகுதிகளிலும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இமயமலைப் பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலைக்கு மத்தியிலும்,  ஜக்கி வாசுதேவ் அந்தப் பகுதியிலேயே தங்கி உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை நேரடியாக ஒருங்கிணைத்து வருவதாக கூறப்பட்ட நிலையில் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மீட்புக் குழுவினர், காவல்துறை மற்றும் ராணுவத்தினரை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளார். தொலைத்தொடர்பு நெட்வொர்க் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.





21 குழுக்களில் இடம்பெற்று இருந்த 495 பேர் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டனர். 743 பேர் திபெத்தில் உள்ளனர். 148 பேர் நேபாளத்திலும்,77 பேர் குடியேற்ற மையத்திலும் உள்ளனர். 3 தன்னார்வலர்கள் நேபாளத்தின் திமூரில் உள்ளனர்.
ஜக்கி வாசுதேவ் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். எனவும் இந்த கடினமான நேரத்தில் எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து உள்ளதாக பதிவு ஆனால் அதிகாரப் பூர்வமான தகவல் வரவில்லை .

முதலில் ஈசன் அருள் இருந்தால்தான் இந்த யாத்திரை சிறப்பாக அமையும். தொடர் பிரார்த்தனை இருந்தால் உடல் நலத்துடன் தரிசனம் கிடைக்கும். உதாரணம் 2007 ஆம் ஆண்டில்  காட்மண்டுவிலிருந்து கிளம்பும் போது 88 நபர்கள் கிளம்பி நெருங்கும் போது 53 நபர்மட்டும் தரிசனவாய்ப்புக் கிட்டிய நிலை.சிலர் வடக்கு முகம் தோடு திரும்ப,அதிலும் நான்கு பேர் நடந்து வந்ததில் மழைவராமலும்
மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் தான் தரிசனம் கிடைக்கும். முன்பு கூறியபடி. தொடர்பிரார்த்தனை விண்ணப்பம் செய்தால் மட்டுமே நல்லதரிசனம் அமையும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...