தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) நடத்திய சோதனையில், ரூபாய் 1.18 கோடி பணம் கூகுள் பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டது
தமிழ்நாடு முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) நடத்திய சோதனையில்,
ரூபாய் 1.18 கோடிக்கும் அதிமான கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகத்திற்கிடமான கூகுள் பே (G-Pay) பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தொடர் புகார்களின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மின்சார வாரிய அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் இந்த கூட்டுத் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம்: ரூபாய் 28,24,945 (சுமார் ரூபாய் 28.24 லட்சம்).சந்தேகத்திற்கிடமான G-Pay பரிவர்த்தனைகள்: ₹89,89,663 (சுமார் ரூபாய் 89.89 லட்சம்).கண்டறியப்பட்ட மொத்த தொகை: ரூபாய் 1,18,14,608 (ரூபாய் 1.18 கோடி) முக்கிய இடங்களான சென்னை (கிண்டி): அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூபாய் 31.52 லட்சம் மதிப்பிலான சந்தேகத்திற்குரிய G-Pay பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன.திருச்சிராப்பள்ளி (தென்னூர்): மின்சார வாரிய (TNEB) அலுவலகத்தில் ரூபாய் 1 லட்சம் ரொக்கமும், ரூபாய் 13.58 லட்சம் மதிப்பிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன. அரியலூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர் ஒருவரின் வங்கி கணக்கு மூலம் கடந்த இரண்டு மாதங்களில் ரூபாய் 7.24 லட்சம் கூகுள் பே பரிவர்த்தனை நடந்துள்ளது
அம்பலமாகியுள்ளது.கள்ளக்குறிச்சி: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூபாய் 15,100 ரொக்கம் மற்றும் ரூபாய் 6.69 லட்சம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன.சென்னை (பல்லாவரம்): சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்சப் பணத்தை நேரடியாக ரொக்கமாக வாங்காமல், தற்காலிக ஊழியர்கள் அல்லது புரோக்கர்களின் G-Pay, PhonePe கணக்குகள் மூலம் டிஜிட்டலாக வாங்கும் புதிய முறையை அலுவலர்கள் கையாண்டது இந்தச் சோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஊழவ் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் அமராவதிபுதூரில் ரூபாய் .5,000 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி ஆகியோரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலத்திற்கு அடங்கல் திருத்தம் சரி செய்து தர ரூபாய் .5,000 லஞ்சப் பணம் பெற்ற கையுடன் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் அமராவதிபுதூரில், நிலத்திற்கு அடங்கல் பதிவை சரி செய்து தருவதற்காக ரூபாய் .5,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் மற்றும் தலையாரி சாந்தி ஆகிய இருவரையும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தனர்
சக்திவேல் தனது நிலம் தொடர்பான அடங்கல் பதிவை சரி செய்து தருவதற்காக சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலகத்தை அனுகவே
ரூபாய் .5,000 லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திவேல், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சக்திவேலிடமிருந்து ரூபாய் .5,000 லஞ்சப் பணம் பெறப்பட்டபோது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையில்: கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் தலையாரி சாந்தி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை பணம் பெற்றபோது பிடித்துக் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த சட்டப்பூர்வமான சேவைகளை வழங்குவதற்காக அரசு ஊழியர்கள் சட்டவிரோதமாக பணம் கோருவது அல்லது பெறுவது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
பொதுமக்களிடம் அரசு சேவைகளுக்காக லஞ்சம் கேட்டால், அதற்கு உடன்படாமல் உரிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் இப்போதெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துரிடம் சிக்க கூடாது என்பதற்காக போன் பே கூகுள் பே இது போன்ற பண பரிவர்த்தனை செய்யும் ஆப் மூலம் செய்வதில்லை பணம் கையில் வாங்குகிறார்கள் இதே கூட கைதேர்ந்த திருடன் இருப்பார்கள் அவர்கள் அப்படி செய்வதில்லை மூன்றாவது நபரிடம் கொடுக்க சொல்கிறார் மெதுவாக பேசுகிறார் ஏனென்றால் குரல் பதிவு செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மெதுவாக பேசுகிறார்கள் நீங்கள் வீடியோ எடுக்கின்றீர்களா என்று அதையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் மூன்றாவது நபர் இடைத்தருகிற ஒருவரை வைத்து உள்ளார்கள் அதிகாரிகள் அவர்களிடம் கொடுக்க சொல்கிறார்கள் அவ்வளவுதான் அவர் வாங்கிவிட்டு அதன் பிறகு பேச சொல்கிறார்கள் உஷாராக இருக்கிறார்கள் அரசு அதிகாரிகளில் சில லஞ்சவாதிகள் இதை முதலில் சரி செய்ய வேண்டும் லஞ்சம் வாங்குறவனுக்கு அரசு வேலை எதற்கு நிரந்தரமாக வேலையை பறிமுதல் செய்வதே காலச்சிறந்தது






கருத்துகள்