டாஸ்மாக் முறைகேடு வழக்கில் S.சர்வேஷ்ராஜ் ஐ.பி.எஸ் சகோதரர்
S.ரத்திஸ்ராஜுக்கு DVAC-யின் லுக்-அவுட் நோட்டீஸ். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையால் (DVAC) தேடப்படும் முக்கியக் குற்றவாளியும், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருமான ரத்தேஷ் ராஜ் சண்முகவேலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் எனும் Look-out Circular பிறப்பிக்கப்பட்டுள்ளது.வழக்குப்பதிவு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் TASMAC நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்புக் ஙண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை மாதம் 28 ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ரத்தேஷ் ராஜ், டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமற்ற இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
மதுபான பிராண்டுகளுக்கான அனுமதி, பார் உரிம ஒப்பந்தங்கள் மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் ஆகியவற்றில் இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். அநன் பின் இவரைக் கைது செய்யத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், ரத்தேஷ் ராஜ் தலைமறைவாகியுள்ளார். அவர் கைது நடவடிக்கைக்குப் பயந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என விஜிலன்ஸ் அதிகாரிகள் பலமாகச் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக, அவர் சர்வதேச விமான நிலையங்கள் வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுக்கவும், அவரைப் பிடிக்கவும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,
தலைமறைவான ரத்தேஷ்ராஜை மது கொள்முதலில் முறைகேடுகள், பார் லைசென்ஸ் குறுக்கீடு, அதிகாரி இடமாற்றங்களில் தலையிடுதல் போன்ற புகார்கள். டாஸ்மாக் முறைகேடு குறித்து துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
அதே ரதீஷின் தொழில் பங்குதாரர்களாக பேசப்படும் சுஜய் ரெட்டி, அனில் ரெட்டி, விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என்றும் வெளியே கூறுகிற நிலை. தற்போதுள்ள நடைமுறையில், இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் 25022/13/78-F.I நாள்: 5.9.1979 மற்றும் OM number 25022/20/98-F.IV நாள் 27.12.2000 கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளின்படி, கவன ஈர்ப்பு சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
இந்தியக் குடிமகனைப் பொறுத்த வரை, கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக்கான கோரிக்கை அனைத்துக் குடிவரவு சோதனைச் சாவடிக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் வடிவில், முழுமையான தகவல்களுடன் அனுப்பப்படும்.
கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக் கோரிக்கை விண்ணப்பத்தில் கையொப்பமிடும் அதிகாரியின் பெயர், பதவி தவறாமல் குறிப்பிட்டிருக்கும். இவையில்லாத கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.
கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக் கோரிக்கையில் இணைக்கப்படும் படிவத்தில் கோரிக்கை விடுப்பவரின் தொடர்பு விவரங்கள் முழுமையாக வழங்கப்படும், முறையான தொடர் நடவடிக்கைகளுக்காக, தொடர்புடைய கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் இடம் பெற்றிருக்கும்.
கவன ஈர்ப்பு சுற்றறிக்கை விடுக்கப்படும் நபரின் முழுமையான தகவல்கள் இணைப்பில் இடம் பெற்றிருக்கும். குறைந்தபட்சம் மூன்று அடையாளம் காணும் அளவுருக்கள் அளிக்கப்பட்டிருக்கும். அவை இல்லாத நிலையில், கோரிக்கை ஏற்கப்படாது. பெயர், ஒளிப்படம், கடவுச்சீட்டுத் தகவல்கள் போன்றவை இருக்கும். உண்மையான பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் கூடுதல் அளவுருக்களை முன்பே வழங்குவது கோரிக்கை அளிப்பவரின் பொறுப்பாகும்.
கவன ஈர்ப்பு சுற்றறிக்கைக்கேற்ப குடிவரவு அதிகாரிகளால் எடுக்கப்பெற்ற நடவடிக்கையின் சட்டப்பூர்வப் பொறுப்பு அதனைத் தோற்றிவித்த நிறுவனம் மற்றும் அமைப்புக்குத்தான் உண்டு.



கருத்துகள்