FQL கிரிப்டோ எனும் பிளாக் ஜெயின் வர்த்தக முறைகேடு மற்றும் MLM மோசடி வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவு,
17 பேர் கைது, FQL கிரிப்டோ மற்றும் MLM (Multi-Level Marketing) முதலீட்டு மோசடி வழக்குகள், மேல் விசாரணைக்காகப் தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவுக்கு (EOW) மாற்றப்பட்டுள்ளன. தென் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆன்லைன் செயலிகளின் மோசடி தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். FQL Exchange மற்றும் VG Investment போன்ற போலி செயலிகள் மூலம் கிரிப்டோகரன்சி எனும் மறைபொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், வெறும் 45 நாட்களில் பணம் உங்களுக்கு இரட்டிப்பாகும் என விபரம் அறியாத கிராமத்து மக்களை ஆசை காட்டியுள்ளனர்.
ஆரம்பத்தில் 50,000 முதல் 1,000,000 வரை பொதுமக்களிடம் இருந்து ஏஜெண்டுகள் மூலம் ஆன்லைன் வழியே வசூலிக்கப்பட்டுள்ளது.இதில் பாதிக்கப்பட்ட பகுதிகள்: மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 70,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளனர். முதற்கட்டமாக திண்டுக்கல் பகுதியில் மட்டும் ரூபாய் 30 கோடிக்கும் மேல், ஒட்டுமொத்தமாக தென் தமிழகம் முழுவதும் ரூபாய் 150 கோடிக்கு மேல் உத்தேசமாக மோசடி நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன, காவல்துறை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாவட்ட காவல் குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்குகள்,
இனிமேல் PMLA சட்டம் மூலம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் நிலை வரும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டியதால் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு (EOW) தற்போது மாற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் முக்கிய ஏஜெண்டுகளான ரமேஷ், அவரது மனைவி அனிதா, விஜய் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலூர் மற்றும் பிற பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 17-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களிலோ அல்லது தேசிய சைபர் கிரைம் போர்ட்டலிலோ புகார் அளிக்கலாம். என அறிவித்து புகார் பெறப்பட்டது,
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வாங்குவதும் விற்பதும் தடை செய்யப்படவில்லை என்றாலும், அது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வப் பணப் பரிமாற்ற முறையான Legal Tender அல்ல. இந்தியாவில் கிரிப்டோகரன்சியை வைத்திருப்பதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் தடை இல்லை. ஆனால் அது சட்டப்பூர்வமான பணமல்ல: இதைக் கொண்டு பொருட்கள் வாங்கவோ அல்லது கடன் தீர்க்கவோ முடியாது; இது ஒரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்தாக (Virtual Digital Asset - VDA) மட்டுமே எனப் பார்க்கப்படுகிறது. கிரிப்டோ முதலீட்டு லாபத்திற்கு 30 சதவீதம் வரியும், பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் TDS வரியும் வசூலிக்கப்படுகிறது. CoinDCX போன்ற கிரிப்டோ பரிமாற்ற தளங்கள் KYC மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டங்களின் (PMLA) கீழ் கண்காணிக்கப்படுகின்றன, கிரிப்டோ முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு இந்திய அரசு கடுமையான வரி கிரிப்டோ பரிவர்த்தனைகள் மூலம் நீங்கள் பெறும் லாபத்திற்கு 30 சதவீதம் வரி (மற்றும் 4 சதவீதம் கூடுதல் செஸ் வரி) விதிக்கப்படும். ஒரு கிரிப்டோவில் ஏற்படும் நஷ்டத்தை, மற்றொரு கிரிப்டோவின் லாபத்தைக் கொண்டு ஈடுகட்ட (Set-off) முடியாது. அடுத்த வருடத்திற்கும் கொண்டு செல்ல (Carry forward) முடியாது, உள்நாட்டுப் பரிமாற்றங்களில் (Exchanges) நடக்கும் ஒவ்வொரு கிரிப்டோ விற்பனை அல்லது பரிமாற்றத்தின் போதும் 1 சதவீதம் TDS (Tax Deducted at Source) கழிக்கப்படும் பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் பாதுகாப்பு (PMLA & FIU-IND)கிரிப்டோ சந்தையை முறைப்படுத்தவும், சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களைத் தடுக்கவும் அரசு கடுமையான விதிகளைக் கொண்டுவந்துள்ளது: FIU-IND பதிவு: இந்தியாவில் இயங்கும் அனைத்து கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகளும் (Exchanges) இந்திய நிதி புலனாய்வு அமைப்பில் (FIU-IND) கண்டிப்பாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.கட்டாய KYC: கிரிப்டோ தளங்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனர்களும் தங்களின் அடையாளச் சான்றுகளை (Aadhaar, PAN போன்ற KYC) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு: கிரிப்டோ மூலம் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்தால், அதுகுறித்து அரசுக்குத் தகவல் தெரிவிப்பது எக்ஸ்சேஞ்சுகளின் கடமையாகும். கிரிப்டோ சந்தை மிகவும் நிலையற்றது. இதில் நீங்கள் முதலீடு செய்யும் முழு மூலதனத்தையும் இழக்கும் அபாயம் (Risk of total capital loss) உள்ளது.அரசின் பாதுகாப்பு இல்லை: கிரிப்டோ பரிவர்த்தனைகளில் ஏதேனும் மோசடி அல்லது இழப்பு ஏற்பட்டால், உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க தற்போதைக்குத் தனியான சட்டப்பூர்வக் குறைதீர்ப்பு அமைப்புகள் (Grievance Redressal) எதுவும் இந்தியாவில் இல்லை
இந்தியாவின் டிஜிட்டல் ரூபாய் (e-Rupee)தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு (Bitcoin, Ethereum போன்றவை) மாற்றாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது சொந்த டிஜிட்டல் ரூபாயை (CBDC - Central Bank Digital Currency) அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கினாலும், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான சட்டப்பூர்வ நாணயம் (Legal Tender) ஆகும். ஆகவே காவல்துறை இதில் எதுவரை புலனாய்வு விசாரணை நடத்தும் என்பதை இனி மேல்தான தெரியும், நம்நாட்டு முதலீடான இன்வெஸ்ட்மென்ட் என்ற வார்த்தையே இப்போதும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இத்தனைக்கும் காலங்காலமாக எளிய மக்கள் சீட்டு போடுகிறோம்.. நகைச்சீட்டு போட்டு நகை வாங்கிச் சேர்க்கிறோம்.. வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்கிறோம்..என இருந்தாலும் இதெல்லாம் நமக்கு இன்வெஸ்ட்மென்டின் வகைகள் தான் என்று டெக்னிகலாகத் தெரிவதில்லை. அதற்கு செபி பாதுகாப்பு உண்டு ஆனால்
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துள்ள FQL Trading மோசடியில், அமெரிக்க டாலர்ல இன்வெஸ்ட் பண்றோம்... அதும் ஆப் மூலமா பண்றோம்.., என்றெல்லாம் சொல்லித்தான் ஏமாற்றியிருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக சில பெண்கள் கூறுகையில், "மீட்டிங் போட்டு பேசுனாங்க... விதவிதமான கார்ல, கோட்டு சூட்டுல வந்து பேசுனாங்க... அதனால நம்பிட்டோம்!" என்றும் சொல்கிறார்கள்! கோட்டு சூட்டு போட்டு வந்தாலே பிராடுத்தனம் பண்ணுவாங்கன்னு தானம்மா சதுரங்க வேட்டைலயே சொல்லிட்டாங்க. அதவது சிவப்பு நிறத்தில் உள்ள நபர் பொய் சொல்ல மாட்டான் எனும் கதை தான் இன்னும் மக்கள் திருந்தவில்லையானா என்னங்கம்மா!! இப்படிப் பன்றீங்களேம்மா பணம் விதை போட்டால் முளைக்கும் செடியல்ல என்று உணரத் தவறிய மக்கள் தானே காரணம், இந்த நிலையில் FQL முதலீட்டு மோசடியில் திண்டுக்கல் மாவட்டம் : நத்தம் வட்டம் காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் FQL முதலீட்டில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் இதுகுறித்து நத்தம் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகத் தகவல், இந்த நிலையில் இறந்த நபரின் சடலத்துடன பகுதி மக்கள் சாலையில் மரியல் போராட்டம் செய்தனர். இவர்கள் பணம் திரும்ப வர குற்றவாளி பிடிபட வேண்டும் அதற்கு இன்டர்போல் காவல்துறை வர வேண்டும், நடக்குமா, இது இந்த மக்களுக்கு ஒரு அனுபவப் பாடம்கைது செய்யப்பட்டுள்ள முக்கிய ஏஜென்ட்டுகள் ரமேஷ் திண்டுக்கல், காசம்பட்டி அனிதா ஏஜென்ட் ரமேஷின் மனைவி. விஜய் திண்டுக்கல் .ஏ. கல்லணை திண்டுக்கல் மாவட்டக் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டவர்.பி. கல்லணை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஏஜென்ட்.கே. புஷ்பம் முதலீட்டாளர்களைச் சேர்த்த பெண் ஏஜென்ட்.ஏ. பாஞ்சு இந்த நெட்வொர்க்கில் செயல்பட்ட இடைத்தரகர்.ஆர். ஆனந்தி, ஏஜென்ட்.ஏ. ராஜலட்சுமி பணத்தை வசூலித்த ஏஜென்ட் மூளையாகச் செயல்பட்டதாக மதுரை கட்டையம்பட்டியைச் சேர்ந்த ஏஜென்ட் ரஞ்சித் மற்றும் அவரது மனைவி தற்பொழுது தலைமறைவாக உள்ளனர்.இந்த மோசடியின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் முக்கிய நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது:தீனதயாளன்,பிரியதர்ஷினி,அருண், கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மோசடி கும்பலுக்குத் தொடர்புடைய 13 முக்கிய வங்கி கணக்குகளை காவல்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளனர்.













கருத்துகள்