பொதுமக்கள் காவல்துறை புகார்களைத் தெரிவிக்க, மாவட்டம், மாநகரம் வாரியாக தனி Mobile Phone WhatsApp எண்கள்
தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டது
காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான லஞ்சம் ஊழல், முறைகேடு, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனச் செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது தான் முக்கிய நோக்கம்.
பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile Phone WhatsApp எண்கள் வழங்கப்பட்டன.
புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன்
புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அதில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகார அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல்துறையினர் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடு புகார்களைத் தெரிவிக்கலாம் என DGP/HoPF தகவல் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.காவல்துறை மீதான ஆதாரமான ஊழல் புகாருக்கு 46 வாட்ஸ் ஆப் எண்கள் - மாநிலம் முழுவதும் வழங்கியது
ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குறித்து புகார் அளிக்க மாவட்ட வாரியாக தனி செல்லுலர் தொலைபேசி எண்களின் மூலம் புகார்தாரர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என காவல்துறை தலைமை இயக்குனர் உறுதி, காவல்துறையினரின் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஒழுங்கின்மை ஆகிய புகார்களை பொது மக்கள் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஆணையர் அலுவலகங்களிலும் உள் விழிப்புணர்வு கலங்கள் (Internal Vigilance Cells) அமைக்கப்பட்ட கலங்களுக்கு மாவட்ட வாரியாக தனி செல்லுலர் தொலைபேசி வாட்ஸ்அப் எண்கள் ஒதுக்கப்பட்டன.
காவல்துறையினர் மீதான ஊழல் புகார்கள் அடிக்கடி எழுந்தாலும், அவற்றை புகார் அளிக்க பொதுமக்கள் அஞ்சும் சூழல் நிலவி வந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில், காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால், ஐ.பி.எஸ்., அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் உள் விழிப்புணர்வு கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழல், ஒழுக்கக்கேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கின்மைகளை தடுக்கவும், கண்காணிக்கவும், விசாரணை செய்யவும் இந்த கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் மாவட்டம் அல்லது நகரத்திற்கான உள் விழிப்புணர்வுக் கலத்தை தொடர்பு கொள்ள, 46 இடங்களுக்கான தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்களின் பட்டியல்:
1 சென்னை மாநகரம் 7871723000,
2 தாம்பரம் மாநகரம் 6374514428,
3 அவடி மாநகரம் 9840018110,
4 சேலம் மாநகரம், 9626207262,
5 திருப்பூர் மாநகரம் 8438761616,
6 திருச்சிராப்பள்ளி மாநகரம் 7871202100,
7 மதுரை மாநகரம் 8300021100,
8 கோயம்புத்தூர் மாநகரம் 8148919100,
9 திருநெல்வேலி மாநகரம் 9952540100,
10 காஞ்சிபுரம் 9940031700,
11 செங்கல்பட்டு 9500779100,
12 திருவள்ளூர் 9498181359,
13 விழுப்புரம் 9944889161,
14 கள்ளக்குறிச்சி 8870353799,
15 கடலூர் 9677100551,
16 வேலூர் 8807258532,
17 ராணிப்பேட்டை 7305877732,
18 திருப்பத்தூர் 9600903373,
19 திருவண்ணாமலை 7695878100,
20 திருச்சிராப்பள்ளி 7448878100,
21 புதுக்கோட்டை 9500550543,
22 கரூர் 8807709299,
23 பெரம்பலூர் 8903631122,
24 அரியலூர் 7904932100,
25 தஞ்சாவூர் 9840438678,
26 திருவாரூர் 9944336551,
27 நாகப்பட்டினம் 9489901106,
28 மயிலாடுதுறை 9087755100,
29 கோயம்புத்தூர் 7540083100,
30 ஈரோடு 9655220100,
31 திருப்பூர் 9042227100,
32 |நீலகிரி 9789800100,
33 சேலம் 9629390203,
34 நாமக்கல் 9566637105,
35 |தர்மபுரி 7604904492,
36 கிருஷ்ணகிரி 9025552100
37 மதுரை 9003719004,
38 விருதுநகர் 9600975100,
39 திண்டுக்கல் 7904300491,
40 தேனி 9626207262,
41 இராமநாதபுரம் 7904114100,
42 சிவகங்கை 7598788108,
43 திருநெல்வேலி 9498101740,
44 தென்காசி 9385678039,
45 தூத்துக்குடி 9489929270,
46 |கன்னியாகுமரி 7358776100,
இந்த உள் விழிப்புணர்வுக் கலங்கள் மூலம் புகார் அளிப்பவர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளித்ததற்காக எவ்வித தொல்லை, மிரட்டல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் எந்த புகார்தாரரும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.
இந்த கலங்களின் செயல்பாடுகள், காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர், கூடுதல் டிஜிபி மற்றும் டிஜிபி ஆகியோரால் வழக்கமான முறையில் கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற, வெளிப்படையான, பொறுப்புள்ள காவல் துறையை உறுதி செய்வதற்காக, பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு டிஜிபி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையில் மட்டும் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட உள் விழிப்புணர்வு கலங்கள், இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி எண்கள் ஒதுக்கப்பட்டிருப்பது, புகார் அளிப்பதை எளிமையாக்கும். ஆனால், இந்த எண்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பது அவசியம், புகார்தாரர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த கால அனுபவங்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த அச்சத்தை போக்க நேரடி நடவடிக்கைகள் தேவை. உயரதிகாரிகள் முதல் டிஜிபி வரை இந்த கலங்களை கண்காணிப்பது, இதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. ஆனால், இந்த கண்காணிப்பு வெறும் முறையானதா அல்லது உண்மையானதா என்பதை காலம் தான் சொல்லும் இதற்கு முன்னதாக, சென்னை பெருநகர காவல் துறையில் இந்த பிரிவு மூலம் ஒரு சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது அது மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்டுள்ளது, இந்த முயற்சி வெற்றி பெற, விசாரணைகள் விரைவாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும். மேலும், உண்மையான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த உள் விழிப்புணர்வு கலங்கள் மூலம் வரும் புகார்களின் அடிப்படையில், காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. முதல் சில மாதங்களில் புகார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். அவற்றை முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பது இந்த கலங்களின் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும். மேலும், இந்த கலங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளலாம். இந்த முயற்சி வெற்றி பெற்றால், மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்ற வாய்ப்புள்ளது.தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீன செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது இதன் முக்கிய நோக்கம்.
பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile/WhatsApp எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.







கருத்துகள்