தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு (SHRC) இரண்டு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக: சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஆர்.என். மஞ்சுளா, மற்றும் ஓய்வுபெற்ற IAS அதிகாரி ஏ. சுகந்தி ஆகிய இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த நியமனம் Protection of Human Rights Act, 1993 – Section 22(1)-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர் இருவரையும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார்,
அரசாணையின்படி, அவர்கள் பதவியேற்கும் நாளிலிருந்து: 3 ஆண்டுகள் அல்லது 70 வயது நிறைவடையும் நாள் இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை அவர்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாகப் பதவி வகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழும் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வது உள்ளிட்ட சட்டப்பூர்வ பணிகளை மாநில மனித உரிமைகள் ஆணையம் மேற்கொள்கிறது.
குறிப்பாக காவல் நிலையம், சிறை, அரசு நிர்வாகம் மற்றும் பொது ஊழியர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவகாரங்களில் சட்டம் வழங்கியுள்ள அதிகார வரம்பிற்குள் ஆணையம் செயல்படுகிறது.
ஆணையம்: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் புதிய உறுப்பினர்கள்: 2 பேர் டாக்டர் ஆர்.என். மஞ்சுளா: ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ. சுகந்தி: ஓய்வுபெற்ற IAS அதிகாரி
Protection of Human Rights Act, 1993 Section 22(1) படி தமிழ்நாடு ஆளுநர் நியமனம் செய்துள்ளார். 3 ஆண்டுகள் அல்லது 70 வயது நிறைவடையும் வரை – எது முந்தையதோ அதுவரைமாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல் புகார்களை விசாரிக்கும் முக்கியமான சட்டப்பூர்வ அமைப்பான தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள்