8 ரயில்கள் அதிரடி மாற்றம்! உங்கள் ரயில் எண் மாறிவிட்டதா? உடனே பாருங்கள்*
தமிழ்நாடு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை, ராமேஸ்வரம், திருச்சி, நாகர்கோவில் வழித்தடத்தில் தினமும் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரும் 2027 புத்தாண்டு முதல், நீங்கள் வழக்கமாக பயணிக்கும் 8 விரைவு ரயில்கள் இனி *சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களாக* மாறுகிறது. அதனால் அவற்றின் எண்களும் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன.
*புதிய எண்கள் பட்டியல் - மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்:*
*ராமேஸ்வரம் வழித்தடம்*
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (16751) -> *20611*
ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் (16752) -> *20612*
தாம்பரம் - ராமேஸ்வரம் (16103) -> *20613*
ராமேஸ்வரம் - தாம்பரம் (16104) -> *20614*
*திருச்சிராப்பள்ளி வழித்தடம்*
தாம்பரம் - திருச்சி (16807) -> *22635*
திருச்சிராப்பள்ளி - தாம்பரம் (16808) -> *22636*
*மும்பை - நாகர்கோவில் வழித்தடம்*
LTT - நாகர்கோவில் (16351) -> *20615*
நாகர்கோவில் - LTT (16352) -> *20616* (ஜன. 3 முதல்)
*பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்:*
1. *நேரம் மாறவில்லை:* புறப்படும் நேரம், சேரும் நேரம், நிறுத்தங்களில் எந்த மாற்றமும் இல்லை.
2. *டிக்கெட் செல்லும்:* பழைய எண்ணில் ஏற்கனவே டிக்கெட் எடுத்திருந்தால் பதற வேண்டாம், அதே PNR செல்லும்.
3. *கட்டணம் சற்று உயர்வு:* சூப்பர்ஃபாஸ்ட் ஆவதால் ரூ.30 முதல் ரூ.75 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஜனவரி 1க்கு பிறகு Where is my Train, IRCTC-யில் பழைய எண்ணை தேடினால் ரயில் காட்டாது. புதிய எண்ணை பயன்படுத்தி தேடுங்கள்.




கருத்துகள்