முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ளக்குறிச்சி கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

தமிழகத்தில் பழைய ஆற்காடு ஜில்லா பின் தென்னார்க்காடு ஜில்லா பின் விழுப்புரம் மாவட்டம் அதிலிருந்து புதிதாக உருவான கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, அர்த்தநாரீஸ்வரர் கோவில் ரயத்து நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் ரயத்து நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மனு தாக்கல் செய்தார். அது நேற்று நவம்பர். 27 ஆம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில், "கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோயில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கருத்துக் கேட்புக் கூட்டம் நடப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பே முதல்வர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது எனவும், 100 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு 1 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்கள். இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கருத்துக்கேட்புக் கூட்டத்தின் அடிப்படையில் கோயில் நிலத்தை அரசுக்கு சொந்தமாக வழங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு நிலத்தை வழங்க தற்போது அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளதாகவும், பரிந்துரையின் மீது அரசின் முடிவுக்குக் காத்திருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். அதுவரை ஆட்சியர் அலுவலகம் அமைப்பது தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்கும்படி இடைக்கால உத்தரவிட்டனர். கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவில்இடத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட கொடுக்கக்கூடாது என முன்பே கோரிக்கை மனுவும் தரப்பட்டது. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் நிலத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்ட இடம் கொடுக்கக் கூடாது என ஆட்சேபனை தெரிவித்து இந்துசமயஅறநிலைய துறை ஆணையர் பிரபாகரன் இ.ஆ.ப விடம் இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவரான இராம. இரவிக்குமார், மற்றும் ஆன்மீக இந்து மத கட்சி நிறுவனத் தலைவர் ஜெயம் எஸ் கே கோபி, இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர் சோலை வீரமணி, திருவல்லிக்கேணி பி.முருகன் ஆகியோர் சேர்ந்து 28 அக்டோபர் 2020 ல் மனு அளித்தனர். அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் திருப்பணி சம்பந்தமாக உயர்மட்டக் குழுவினரும் முன்பே ஆய்வுக்காகச் சென்றிருக்கிறார்கள். பழமை மிகுந்த கோவில் என்பதால் திருப்பணிக்குத் தடையில்லா சான்று கொடுக்க உயர்மட்டக் குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகு ரூபாய் இரண்டரை கோடிக்கு மேலாக திருப்பணிக்கு செலவாகும் அதைச் செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்கள். இந்த திருக்கோயில் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் குடமுழுக்கு சம்பந்தமாக எங்களால் தற்போது ஏதும் செய்ய முடியவில்லை. விரைவில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெறும் அதற்கான நடவடிக்கையில் இந்து சமய அறநிலைத்துறை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்கள். அதற்கு குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு எத்தனையோ அரசாங்கத்தின் புறம்போக்கு தரிசு நிலங்கள் இருக்கிறது. அப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் திருக்கோயில்களுக்கு நமது முன்னோர்கள் எந்த நோக்கத்திற்கு ரயத்து நிலங்களை வழங்கினார்களோ அந்த நோக்கத்தை விட்டு, வேறு எந்தப் பயன்பாட்டிற்கும் திருக்கோயில் நிலங்களைப் பயன்படுத்தக்கூடாது; என குழு கருத்து ஆகவே வேண்டாம் என்றார்கள். மேலும் ஆட்சேபனை தெரிவிக்க 29 அக்டோபர் 2020 கடைசி நாள் என்று இருந்த சூழ்நிலையில் வீரசோழபுரம் கோவில் இடத்தில் அரசாங்கப் பணிகள் செய்வது விதி மீறல் என்று தெரிவித்தார்கள் மனுவை பெற்றுக் கொண்டு மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை ஏடுக்கத் தாமதமாகவே.சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம் மூலம் தடை பெற்ற நிகழ்வாகும். "உமையும் உமையொரு பாகனும் ஏகவுருவில் வந்திங்கு எமையும் தமக்கன்பு செய்ய வைத்தார் இனியெண்ணுதற்கு சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயுமில்லை அமையும் அமையுறுதோளியர் மேல்வைத்த ஆசையுமே" -அபிராமி அந்தாதி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இளையாத்தங்குடியில் கோலப் புரட்சி, மீனா ஆச்சி -லீலா மாமி குழு தந்த வண்ண மாட்சி!

 * இளையாத்தங்குடியில் * *மீனா ஆச்சி - லீலா மாமி குழு செய்த கோலப் புரட்சி! இளையாத்தங்குடி கைலாஷநாதர் - நித்யகல்யாணி அம்மன் ஆலயத்தில் அதிசயம்! பகுதி 1: பிரத்யேகம் - தற்போது பிரபலமான நிகழ்வாக நடைபெறும் கோலச் சேவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருநகருக்கு அருகில் அமைந்துள்ள இளையாத்தங்குடி அருள்மிகு கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் தற்போது பக்தர்கள் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பிரபலமான நிகழ்வாக நகரத்தார் பெண்கள் குழுவினரின் கோலச் சேவை நடைபெற்று வருகிறது. இவர்கள் திருப்பணி ஏற்கனவே நாம் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வெளியிட்ட நிலையில், தற்போது இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்திய கல்யாணி அம்மன் திருக்கோயிலில் இது பிரபலமான நிகழ்வாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது பெண்கள் அடங்கிய குழுவினர் செம்மை, பசுமை, மஞ்சள், நீலம், ஊதா என பல்வேறு வண்ணப் பொடிகளைக் கொண்டு, நுண்ணிய புள்ளிகள் வைத்து, சிக்குக் கோலங்கள், பூக்கோலங்கள், தாமரைக் கோலங்கள், கிளிக் கோலங்கள் இட்டு, கருங்கல் தரையை வண்ண ஓவியமாக மாற்றி வருகின்றனர். தலைம...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...