நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியீடு
இந்தியாவில் நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியீடு நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி எண் 597-க்கு பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், National Judicial Data Grid (NJDG)-இன் 16.07.2026 நிலவரத்தின் அடிப்படையில், இந்தியாவின் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் 16.07.2026 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய உச்சநீதிமன்றத்தில் மொத்தம் உள்ள நிலுவை வழக்குகள் 96,024 ஆகும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக 26 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக – 558 வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக – 10,094 வழக்குகள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக – 24,611 வழக்குகள், 1 ஆண்டுக்கும் மேலாக – 49,248 வழக்குகள், நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில்: மொத்த நிலுவை வழக்குகள் – 64,72,536 ஆகும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக – 80,660 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக – 4,52,152 வழக்குகள், 10 ...