முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்த திமுக ஆட்சியில் நடந்த டாஸ்மாக் ஊழல் முறைகேடு ED நடவடிக்கை அடிப்படையில் DVAC வழக்குப் பதிவு செய்து சோதனை

கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சரான



வி.செந்தில்பாலாஜி, டாஸ்மாக் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் எஸ்.விசாகன், முன்னாள் மூத்த மண்டல மேலாளர்கள் டி ராமதுரை முருகன், பி.பன்னீர் செல்வம், செந்தில் பாலாஜியின் பிஏ பாஸ்கர், அவரது கூட்டாளியான ரதீஷ் ராஜ், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கார்த்திக், சண்முகவேல் ஆகியோர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கரூர் இரமேஷ்வரன்பட்டியிலுள்ள செந்தில் பாலாஜியின் பழைய வீட்டில்




தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் சோதனை நடத்துகிறது. கரூர், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடக்கிறது முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, சில முன்னாள் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மதுபான ஆலை உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.






டாஸ்மாக் நிறுவனம் மதுபானக் கொள்முதல், டெண்டர் முறைகேடுகள் மற்றும் வரம்பு மீறிய நிதி முறைகேடுகள் குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூபாய் 1,000 கோடிக்கும் அதிகமான ஊழல் தொடர்பாக, ஏற்கனவே அமலாக்கத்துறை (ED) மற்றும் தற்போது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தீவிர விசாரணை மற்றும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கனவே அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகள் படி ரூபாய் 1000 கோடி ஊழல் நடத்திய டாஸ்மாக் நிர்வாகம், பார் டெண்டர்கள், மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் ரூபாய் 1,000 கோடிக்கு மேல் நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அப்போது திமுக ஆட்சி நடந்த நிலையில் மார்ச் மாதம் 2025-ஆம் ஆண்டில் சென்னை, கரூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில்


அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்துப் பத்திரங்களைப் பறிமுதல் செய்தது. மதுபான ஆலைகளிடம் இருந்து சட்டவிரோத கமிஷன் பெற்றது, பார் உரிமங்களை போலியான ஆவணங்கள் மூலம் வேண்டியவர்களுக்கு ஒதுக்கியது, மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை பல முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் முன்வைத்தது. அதற்கு அமலாக்கத்துறையின் இந்த சோதனைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மத்திய முகமையின் விசாரணை நடைமுறைகளை உறுதிப்படுத்தியுள்ளது. ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) தற்போதைய அதிரடி நடவடிக்கை என்பது முன்பு அமலாக்கத்துறை திரட்டிய ஆதாரங்கள் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்,



தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தற்போது இந்த ஊழல் தொடர்பாக புதிய FIR பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதன் படி 41 இடங்களில் சோதனை நடக்கிறது,முன்னாள் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் ஐஏஎஸ் மற்றும் டாஸ்மாக் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 41 இடங்களில் தற்போது ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.முக்கிய குற்றச்சாட்டுகள்:விதிகளை மீறி தனியார் நிறுவனங்களுக்கு மது விநியோக ஒப்பந்தங்கள் வழங்கியது.கோயம்பத்தூர் , திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உரிமம் புதுப்பிக்கப்படாத பார்களை சட்டவிரோதமாக இயக்கி அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது. குடித்த போத்தல்களான பழைய காலி பாட்டில்கள் கொள்முதல் மற்றும் அலுவலர்கள் பணி இடமாற்றங்களில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியது என பல முறைகேடு அரசின் தற்போதைய நிலைப்பாடுகளில் புதிய அரசு மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான நிர்வாகம், டாஸ்மாக் வருவாய் முறைகேடுகளைத் தடுக்கவும் கணக்குகளை வெளிப்படைத்தன்மையுடன் கையாளவும் அலுவலர்களுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.



மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் விதிகளை மீறி இயங்கி வந்த 717 மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னார்குடி அருகிலுள்ள கர்ணாவூரில் அமைந்துள்ள முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையில் . ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சித்ரா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல் தொடர்பான வழக்கில் தொடர்புடைய சில மதுபான ஆலைகளில் ஆவணங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கும் பணி.பாதுகாப்பு: சோதனையை ஒட்டி அப்பகுதியில் திமுகவினர் கூடியதால் மன்னார்குடி நகரக் காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சில மதுபான உற்பத்தி நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.


அந்த அடிப்படையில், மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையின் போது, மதுபான ஆலையில் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான கோப்புகள் மற்றும் வழக்கு விசாரணைக்குத் தேவையான பிற ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.சென்னை இராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள


தனியார் மாரீஷ் ஹோட்டலில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியிடம், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் யுவராஜ் தலைமையிலான அதிகாரிகள் காலை முதல் விசாரணை நடத்தி சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். விசாரணையின் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதிகாரிகள் ஒரு பெட்டியுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...