நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் கணக்கீடுவதற்கான அடிப்படை ஆண்டை 2012-லிருந்து 2024 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது
நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை 2012-லிருந்து 2024 ஆக மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.
இது தொடர்பான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. புதிய அடிப்படை ஆண்டை கணக்கில் கொண்டு, மாதாந்திர விலை தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகள், 434 நகரங்களில் உள்ள 1,465 கிராமப்புற சந்தைகள், 1,395 நகர்ப்புற சந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, மின்னணு வர்த்தகம் அல்லது இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களை கண்டறியும் வகையில் தலா 25 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகைக் கொண்ட 12 நகரங்களில் 12 இணையவழி சந்தைகளும் இந்த தரவு சேகரிப்பு பணியில் இணைக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் மாற்றியமைக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பில் மொத்த எடை கொண்ட பொருட்களின் எண்ணிக்கை 299-லிருந்து 358 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 2013-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2024-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அகில இந்திய பொதுக் குறியீடுகள் கிராமப்புற, நகர்ப்புற, கூட்டுறவுத்துறைகளுக்கான பணவீக்க விகிதம் குறித்த முந்தைய ஆண்டுகளின் தரவுகள் இந்த அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்