நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியீடு
இந்தியாவில் நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியீடு
நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி எண் 597-க்கு பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், National Judicial Data Grid (NJDG)-இன் 16.07.2026 நிலவரத்தின் அடிப்படையில், இந்தியாவின் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் 16.07.2026 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய உச்சநீதிமன்றத்தில் மொத்தம் உள்ள நிலுவை வழக்குகள் 96,024 ஆகும்,
30 ஆண்டுகளுக்கும் மேலாக 26 வழக்குகள்,
20 ஆண்டுகளுக்கும் மேலாக – 558 வழக்குகள்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக – 10,094 வழக்குகள்,
5 ஆண்டுகளுக்கும் மேலாக – 24,611 வழக்குகள்,
1 ஆண்டுக்கும் மேலாக – 49,248 வழக்குகள்,
நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில்: மொத்த நிலுவை வழக்குகள் – 64,72,536 ஆகும்,
30 ஆண்டுகளுக்கும் மேலாக – 80,660 வழக்குகள்,
20 ஆண்டுகளுக்கும் மேலாக – 4,52,152 வழக்குகள்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக – 16,14,657 வழக்குகள்,
5 ஆண்டுகளுக்கும் மேலாக – 29,75,161 வழக்குகள்,
1 ஆண்டுக்கும் மேலாக – 52,43,328 வழக்குகள்,
நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில்: மொத்த நிலுவை வழக்குகள் – 4,98,45,538,
30 ஆண்டுகளுக்கும் மேலாக – 81,275 வழக்குகள்,
20 ஆண்டுகளுக்கும் மேலாக – 7,21,357 வழக்குகள்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக – 54,37,032 வழக்குகள்,
5 ஆண்டுகளுக்கும் மேலாக – 1,48,45,848 வழக்குகள்,
1 ஆண்டுக்கும் மேலாக – 3,74,95,558 வழக்குகள்,
வழக்குத் தேக்கத்தை குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து,
மத்திய அரசு தனது பதிலில், வழக்குத் தேக்கத்தை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகளையும் விளக்கியுள்ளது.
அவற்றில்: eCourts Phase-III திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Fast Track Special Courts (FTSCs) மூலம் பாலியல் வன்கொடுமை மற்றும் POCSO வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படுகின்றன.
அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் Arrears Committees அமைக்கப்பட்டுள்ளன.
புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் பல்வேறு சட்டத் திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
Alternative Dispute Resolution (ADR) மற்றும் Lok Adalat போன்ற மாற்று தீர்வு முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு நிலை:-மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 5,67,814 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவற்றில்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக – 3,118 வழக்குகள்,
20 ஆண்டுகளுக்கும் மேலாக – 76,298 வழக்குகள்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக – 1,19,699 வழக்குகள்,
5 ஆண்டுகளுக்கும் மேலாக – 2,05,815 வழக்குகள்,
1 ஆண்டுக்கும் மேலாக – 4,17,639 வழக்குகள்,
மேலும், தமிழ்நாட்டின் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் மொத்தம் 17,81,234 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவற்றில்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக – 450 வழக்குகள்,
20 ஆண்டுகளுக்கும் மேலாக – 4,173 வழக்குகள்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக – 63,962 வழக்குகள்,
5 ஆண்டுகளுக்கும் மேலாக – 2,68,543 வழக்குகள்,
1 ஆண்டுக்கும் மேலாக – 10,91,674 வழக்குகள்,
இந்திய நீதித்துறையில் வழக்குத் தேக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 5.67 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளும், தமிழ்நாடு மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 17.81 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் இருப்பது கவலைக்குரியதாகவே பார்க்கப்படுகிறது,.
நீதிபதிகள் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புதல், நீதிமன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுத்துதல், மாற்று தகராறு தீர்வு (ADR) முறைகளை ஊக்குவித்தல் ஆகியவை வழக்குத் தேக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் அம்சங்களாகும் எனத் தகவல் இந்த நிலையில் நாள்தோறும் 30-40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் வருவதாக - நீதிபதி அதிர்ச்சி; பார் கவுன்சில் ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
'குற்றவியல் பின்னணியில் வழக்கறிஞர்கள் பார் சங்க தலைவர்களாக ஆவது கவலைக்குறியது என' - நீதிபதி பாரத சக்கரவர்த்தி கண்டனம்; பார் கவுன்சில்களுக்கு ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை கெடு!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி, தினமும் 30 முதல் 40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, இந்திய பார் கவுன்சில் (BCI) மற்றும் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் (BCTNP) ஆகியவை, வழக்கறிஞர்கள் மற்றும் சட்டப் பட்டதாரிகள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். 'நீதித்துறையின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகும்' என்று கவலை தெரிவித்துள்ளவர், இந்தப் பிரச்சனைக்கு உரிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுக்க பார் கவுன்சில்களுக்கு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளார்.
கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யும் பொறுப்பில் உள்ள நீதிபதி பாரத சக்கரவர்த்தி, தனது அன்றாடப் பணியின் போது, நடைமுறையில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் சட்டப் பட்டதாரிகள் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். 'கிட்டத்தட்ட ஒவ்வொரு வேலை நாளிலும் 30 முதல் 40 கிரிமினல் வழக்குகள் வழக்கறிஞர்களை உள்ளடக்கியதாக இருப்பதை நீதிமன்றம் கவனித்துள்ளது' என்று அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல்வேறு பார் சங்கங்களின் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளனர் என்பதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 'கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் சில வழக்கறிஞர்கள் இறுதியில் பார் சங்கங்களின் பொறுப்பாளர்களாக மற்றும் தலைவர்களாக மாறுவதும் கவனிக்கப்பட்டுள்ளது' என்று நீதிபதி கூறினார்.
வழக்கறிஞர் பி. ஜெகதீஸ்வரன் என்பவர் தனக்கு எதிரான FIR-ஐ ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த போது, இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த நீதிபதி, பின்வரும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார், பார் கவுன்சில்களை சுயமாக (suo motu) எதிர்மனுதாரர்களாக இணைத்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். இந்தப் பிரச்சனை ஒரு கட்டத்தை எட்டியுள்ளது' என்று கூறி, நம்பகமான ஆய்வாளர்களை நியமித்து, வழக்கறிஞர்கள் மற்றும் சட்டப் பட்டதாரிகள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்து அனுபவ ஆதாரங்களைச் சேகரிக்க பார் கவுன்சில்களுக்கு உத்தரவிட்டார்.
"இந்த ஆய்வின் முடிவுகள், பார் கவுன்சில்கள் பதிவு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் பார் சங்க பதவிகளுக்கான தகுதிகள் குறித்து புதிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்க உதவும்" என்று நீதிபதி தெளிவுபடுத்தினார்.
பார் கவுன்சில்கள் தங்களது கருத்துக்களை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி , 2026-க்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்திலேயே நாள்தோறும் 30-40 வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் விசாரணைக்கு வருவது, சட்டத் துறையின் உள்ளார்ந்த சீரழிவைக் காட்டும் கண்ணாடியாகும். 'நீதியின் காவலர்கள்' என்று அழைக்கப்படும் வழக்கறிஞர்களே குற்றவாளிகளாக மாறும் போது, பொதுமக்களின் நீதி நம்பிக்கை எங்கே போகும்? குறிப்பாக, கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் பார் சங்கங்களின் தலைவர்களாக ஆவது மிகவும் ஆபத்தான போக்கு. இது, சட்ட அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக அழித்துவிடும். என்பது நீதிபதி பாரத சக்கரவர்த்தியின் இந்த தலையீடு மிகவும் அவசியமானது. ஆனால், பார் கவுன்சில்கள் இந்த ஆய்வை உண்மையான நோக்கத்துடன் மேற்கொள்கின்றனவா, அல்லது அதனை மேலோட்டமாக கடந்து செல்கின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். கிரிமினல் பின்னணி உள்ளவர்களை வழக்கறிஞர் பதிவு செய்வதிலும், பார் சங்க பதவிகளில் இருந்து தடுப்பதிலும் கடுமையான விதிமுறைகள் தேவை இந்த உத்தரவு, எதிர்காலத்தில் சட்டப் பணியின் தரத்தை உயர்த்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
இந்த உத்தரவின் பேரில், பார் கவுன்சில்கள் விரைந்து ஆய்வு நடத்தி, ஆகஸ்ட் 24-க்குள் தங்கள் கருத்துக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், நீதிமன்றம் மேலும் வழிகாட்டுதல்களை வெளியிடும். இதன் மூலம், வழக்கறிஞர் பதிவு, பார் சங்க பதவிகள் மற்றும் ஒழுக்காற்று விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வழக்கு, நாடு முழுவதும் உள்ள பார் கவுன்சில்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும். அதேபோல் மற்றொரு வழக்கு பொது மக்களை போல வழக்கறிஞர்களும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவு,
திருச்சிராப்பள்ளி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை வழக்கறிஞர்களுக்காக சுங்கக் கட்டணமில்லாததாக மாற்றக் கோரி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அந்த ஆர்ப்பாட்டம், போராடுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திய செயல் என்றும், அது எந்தவொரு குற்றவியல் குற்றத்தின் கூறுகளையும் ஈர்க்கவில்லை என்றும்
மனுதாரர்கள் வழக்கறிஞர்களாக இருப்பதால் மட்டுமே, அவர்களைத் தனிப்பட்ட நிலையில் வைக்க முடியாது. பொதுமக்களிடமிருந்து சட்டப்பூர்வமாக ஒரு சுங்கம் வசூலிக்கப்படும் போது, அதை வழக்கறிஞர்களும் செலுத்த வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.








கருத்துகள்