தமிழ்நாடு அனுமதியற்ற வீட்டு மனைப்பிரிவை
வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 30.06.2027 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசாணை.
நகர்ப்புற வளர்ச்சித் துறை 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அணைத்து மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 30.06.2027 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த .அரசாணை எண் 78-ன் கீழ் கொண்டுவரப்பட்ட
இந்தத் திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்களின் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை ஆன்லைன் வழியாக சட்டப்பூர்வமாக வரன்முறைப்படுத்திக் கொள்ள முடியும். 20 அக்டோபர் 2016 அல்லது அதற்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகளாக இருக்க வேண்டும். மனைப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது 20.10.2016-க்கு முன் விற்கப்பட்டு, அதற்கான விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமதளப் பகுதிகளில் அமைந்துள்ள விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகளுக்கும் இது பொருந்தும். விண்ணப்பிக்கும் பொதுமக்கள் தங்களின் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த நகர் ஊரமைப்புத் துறை இயக்ககத்தின் (DTCP) அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியெனில் CMDA வரன்முறை இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் DTCP ஆன்லைன் போர்டல் தேவைப்படும் ஆவணங்களாக சொத்தின் விற்பனைப் பத்திரம், மனைப்பிரிவு வரைபடம், வில்லங்கச் சான்றிதழ், பட்டா உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்கள்.






கருத்துகள்