> * தமிழக அரசியல் வரலாற்றில் 1967 முதல் திமுக - அதிமுக என்ற இருமுனை ஆதிக்கமே இருந்து வந்தது. ஒரு கட்சி ஆட்சியை இழந்தால், மறு கட்சி தானாக ஆட்சிக்கு வரும் என்ற நிலை இருந்தது. இந்த 50 ஆண்டு ரிதத்தை தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் உடைத்துவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் அருண் ராம் Times of India-யில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளார். *1. இருமுனை ஆதிக்கம் எப்படி உடைந்தது?* 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின் நடந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி TVK வெற்றி பெற்றது. இது அதிமுக இனி முதன்மை எதிர்க்கட்சி இல்லை, TVK தான் என்பதை நிரூபித்தது. *2. முதல்வர் விஜய்யின் அரசியல் கணக்கு என்ன?* முதல்வர் விஜய் தொடக்கம் முதலே திமுகவை தனது நேரடி எதிரியாக காட்டுகிறார். திமுகவை "தீய சக்தி, ஊழல் சக்தி" என்று விமர்சிப்பதன் மூலம், திமுக எதிர்ப்பு வாக்குகளை தனக்கு இழுக்கிறார். ஆனால் உண்மையில் அவர் தனது கட்சியை வளர்ப்பதற்கு ஆட்களை எடுப்பது அதிமுகவில் இருந்து தான். மூத்த பத்திரிகையாளர் அருண் ராம் ...
RNI:TNTAM/2013/50347