திருவண்ணாமலையில் புதிய மருத்துவமனை தொடங்க தடையில்லா சான்றிதழ் (Fire NOC) வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக தீயணைப்பு துறையில் பணியாற்றும் அரசு பணி அலுவலரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
*கைதானவர் விவரம்:*
திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு துறையில் பணியாற்றும் *பி.சரவணன் (வயது 52)* என்ற அலுவல் பணியாளர்.
*புகார் என்ன?*
செங்கம் பகுதியை சேர்ந்த டாக்டர் கணேஷ் (வயது 32), தனது கிளினிக்கை விரிவுபடுத்த Fire NOC சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அதற்கு கள ஆய்வு செய்ய வந்தபோது லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், முதலில் ரூபாய் .25,000 கேட்டு பின் ரூபாய் .10,000 ஆக பேரம் பேசிக் குறைத்ததாகவும் FIR-ல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து (Cr.No.10/2026), பொறி வைத்து பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ரூபாய் .10,000 லஞ்சம் வாங்கியபோது கையுடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக நாட்டில் யாரும் அதிகாரி மற்றும் சர்வாதிகாரிகள் இல்லை, அனைவரும் அரசின் மக்கள் பணியாளர்களே என்பதை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. மக்கள் சேவைக்காக நியமிக்கப்பட்டவர்கள், சேவையை வெளிப்படையாக வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
_FIR No.40/2026, திருவண்ணாமலை V&AC._





கருத்துகள்