ஒரு காலத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உயர் அதிகாரியாக இருந்தவர் S.R.ஜாங்கிட் IPS. அவர் மீது 2013-ல் DE No.48/2013 என்று ஒரு ஊழல் புகாரில் DVAC விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்து "ஜாங்கிட் மீது தவறு இல்லை" என்று DVAC-யே அரசுக்கு அறிக்கை கொடுத்துவிட்டது. அப்போது ஜாங்கிட், "என் மீது என்ன விசாரித்தீர்கள்? அந்த அறிக்கையை எனக்கே கொடுங்கள்" என்று RTI-யில் கேட்டார். *DVAC சொன்ன பதில்:* "முடியாது. நாங்கள் யாருக்கும் பதில் தர மாட்டோம். எங்களுக்கு http://G.O.Ms.No.158 மூலம் RTI-யில் இருந்து முழு விலக்கு உண்டு. எங்கள் ஃபைல் எல்லாம் ரகசியம். DVAC Manual Rule 29 அப்படி சொல்கிறது. சாட்சிகள் பெயரை சொன்னால் உயிருக்கு ஆபத்து. ஃபைல் ஆயிரம் பக்கம் இருக்கு" என்று மறுத்துவிட்டது. இதை கேட்ட தமிழ்நாடு தகவல் ஆணையம் 30.05.2024 அன்று, "DVAC சொல்வது தப்பு. ஊழல் வழக்கு என்றால் RTI-யில் இருந்து விலக்கு கிடையாது. மற்ற அதிகாரிகள் பெயரை மட்டும் மறைத்துவிட்டு, மீதி ஃபைலை ஜாங்கிட்டுக்கு கொடுங்கள்" என்று அதிரடியாக உத்தரவிட்டது. ஆணையத்தின் உத்தரவை கூட மதிக்காமல், தமிழக அரசு ஹைகோர்ட...
RNI:TNTAM/2013/50347