முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

DVAC ரகசியம் அல்ல! ஊழல் விவரங்களை RTI-யில் கொடுத்தே ஆக வேண்டும் -உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒரு காலத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உயர் அதிகாரியாக இருந்தவர் S.R.ஜாங்கிட் IPS. அவர் மீது 2013-ல் DE No.48/2013 என்று ஒரு ஊழல் புகாரில் DVAC விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்து "ஜாங்கிட் மீது தவறு இல்லை" என்று DVAC-யே அரசுக்கு அறிக்கை கொடுத்துவிட்டது.


அப்போது ஜாங்கிட், "என் மீது என்ன விசாரித்தீர்கள்? அந்த அறிக்கையை எனக்கே கொடுங்கள்" என்று RTI-யில் கேட்டார்.

*DVAC சொன்ன பதில்:*

"முடியாது. நாங்கள் யாருக்கும் பதில் தர மாட்டோம். எங்களுக்கு http://G.O.Ms.No.158 மூலம் RTI-யில் இருந்து முழு விலக்கு உண்டு. எங்கள் ஃபைல் எல்லாம் ரகசியம். DVAC Manual Rule 29 அப்படி சொல்கிறது. சாட்சிகள் பெயரை சொன்னால் உயிருக்கு ஆபத்து. ஃபைல் ஆயிரம் பக்கம் இருக்கு" என்று மறுத்துவிட்டது.




இதை கேட்ட தமிழ்நாடு தகவல் ஆணையம் 30.05.2024 அன்று, "DVAC சொல்வது தப்பு. ஊழல் வழக்கு என்றால் RTI-யில் இருந்து விலக்கு கிடையாது. மற்ற அதிகாரிகள் பெயரை மட்டும் மறைத்துவிட்டு, மீதி ஃபைலை ஜாங்கிட்டுக்கு கொடுங்கள்" என்று அதிரடியாக உத்தரவிட்டது.

ஆணையத்தின் உத்தரவை கூட மதிக்காமல், தமிழக அரசு ஹைகோர்ட் போனது. WP No.22237/2024 என்று ரிட் மனு போட்டு தடை கேட்டது.




*இறுதி உத்தரவு:* தகவல் ஆணையத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அரசின் WP 22237/2024 மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. DVAC உடனே ஆவணங்களை கொடுக்க வேண்டும்.

இனி தமிழகத்தில் எந்த சாமானியனும் DVAC-யிடம் ஊழல் தொடர்பான தகவல்களை RTI-யில் கேட்கலாம். DVAC "நாங்கள் விலக்கு பெற்ற அமைப்பு" என்று சொல்லி தப்பிக்க முடியாது. இந்த தீர்ப்பு (WP 22237/2024, Dated 09.10.2026) அனைத்து சமூக ஆர்வலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ஒரு வரலாற்று ஆயுதம்.

ஆனால் கதை இன்னும் முடியவில்லை. அரசின் மனு தள்ளுபடி ஆனாலும் DVAC இன்னும் ஆவணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பதால், ஜாங்கிட் தொடர்ந்த WP 100863/2024 வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. பப்ளிக் ஜஸ்டிஸ் தொடர்ந்து கண்காணிக்கும்.




---ஓய்வு பெற்ற DGP S.R.ஜாங்கிட் IPS மீது 2013-ல் DE No.48/2013 என்று ஒரு ஊழல் புகாரில் DVAC விசாரணை நடத்தியது. அப்போது *அதிமுக ஆட்சி.*

விசாரணை முடிந்து DVAC அரசுக்கு ஒரு ரகசிய அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஜாங்கிட், "அந்த அறிக்கையை எனக்கே கொடுங்கள்" என்று RTI-யில் கேட்டார்.

ஜாங்கிட் RTI கேட்டது, தகவல் ஆணையம் உத்தரவு போட்டது, அதை எதிர்த்து அரசு ஹைகோர்ட் போனது எல்லாம் *திமுக ஆட்சியில் தான்.*




DVAC "தர மாட்டோம், நாங்கள் ரகசிய போலீஸ், எங்களுக்கு http://G.O.Ms.No.158 மூலம் விலக்கு உண்டு, DVAC Manual Rule 29-ன் படி ஃபைல் ரகசியம், சாட்சிகளுக்கு உயிருக்கு ஆபத்து" என்று மறுத்தது.

தகவல் ஆணையம் 30.05.2024 அன்று (திமுக ஆட்சி), "ஊழல் வழக்கு என்றால் விலக்கு கிடையாது, பெயரை மட்டும் மறைத்துவிட்டு கொடுங்கள்" என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு WP No.22237/2024 என்று ஹைகோர்ட்டில் வழக்கு போட்டு தடை கேட்டது.

*ஹைகோர்ட் போட்ட 4 சம்மட்டி அடி! (09.10.2026)*

வழக்கை விசாரித்த நீதிபதி HEMANT CHANDANGOUDAR திமுக அரசின் வாதங்களை தூக்கி எறிந்தார்.

*1. G.O.158-லேயே விதிவிலக்கு உள்ளது:* "DVAC-க்கு விலக்கு உண்டு தான், ஆனால் அதே G.O-வில் 'ஊழல் புகார் என்றால் விலக்கு கிடையாது' என்று உள்ளது."

*2. ஆதாரமில்லாமல் 'உயிருக்கு ஆபத்து' சொல்லக்கூடாது.*

*3. DVAC Manual சட்டம் அல்ல, அதை வைத்து RTI சட்டத்தை மீற முடியாது.*

*4. ஃபைல் பெரியது என்பது காரணமல்ல.*

இறுதியாக தகவல் ஆணைய உத்தரவை உறுதி செய்து, திமுக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

*ஜாங்கிட் ஊழல் செய்தாரா இல்லையா?*

*இந்த தீர்ப்பில் அதற்கு பதில் இல்லை.* இது ஊழலை முடிவு செய்யும் தீர்ப்பு அல்ல. இது RTI ஆவணத்தை கொடுக்க சொல்லும் தீர்ப்பு மட்டும் தான். ஊழல் செய்தாரா இல்லையா என்பது DVAC-யின் அந்த ரகசிய அறிக்கையில் தான் உள்ளது. அந்த அறிக்கை தான் இனி இந்த தீர்ப்பால் வெளியே வரப்போகிறது.

*மக்களுக்கு என்ன பயன்?*

இனி தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் DVAC-யிடம் ஊழல் தொடர்பான தகவல்களை RTI-யில் கேட்கலாம். DVAC "நாங்கள் விலக்கு பெற்ற அமைப்பு" என்று சொல்லி தப்பிக்க முடியாது. இந்த தீர்ப்பு (WP 22237/2024) ஒரு வரலாற்று ஆயுதம்.

*குறிப்பு:* இது தவெக ஆட்சியில் நடந்தது அல்ல. முழு சம்பவமும் - RTI மறுப்பு முதல் ஹைகோர்ட் வரை சென்று வாதாடியது வரை - *திமுக ஆட்சிக்காலத்தில் தான் நடந்தது.*

---

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...