திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் 17 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அரசு தரப்பு நிலைப்பாடு ஒரே வரியில்: > *"திருப்பரங்குன்றம் தேவஸ்தானமே தீபத்தூணில் தீபம் ஏற்ற விரும்பவில்லை"* 1. ஆட்சியர் அறிக்கையில் சொன்ன முக்கிய 4 காரணங்கள் *1. குழு அமைக்கப்படவில்லை:* தீபத்தூணில் தீபம் ஏற்ற தேவஸ்தானத்தால் குழு அமைக்கப்பட்டு, பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை. *2. அதனால் தான் ஏற்ற முடியவில்லை:* தேவஸ்தானம் குழுவை அமைத்து பரிந்துரைக்காததால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. *3. அறங்காவலர் குழு முடிவு:* அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்கு பதிலாக அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற தீர்மானித்தது. *4. வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது:* இதனை தொடர்ந்து ஒவ்வொரு கார்த்திகை திருநாள் அன்றும் வழக்கமாக தீபம் ஏற்றும் *உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில்* கோயிலின் மரபுகளுக்கு உட்பட்டு திரு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. 2. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ...
RNI:TNTAM/2013/50347