மதுரை செக்கானூரணி காவல் நிலைய மரணம்
UPDATE - 24 நவம்பர் 2026, இரவு:*
*1. CCTV பார்த்தாச்சு - ஆனால் வெளியே சொல்ல முடியாது*
நவ.23 அன்று மனைவி சுதா, சகோதரி ஜெயா, சகோதரர் மணிகண்டன் + வழக்கறிஞர் ஆகியோர் CB-CID SP அலுவலகம், மதுரையில் 4 காவல் நிலைய CCTV-யையும் பார்த்துவிட்டனர். நீதிமன்றம் செல்போன் கொண்டு மதுரை செக்கானூரணி காவல் நிலைய மரணம் - முழு உண்மை | சட்டம் + நீதிமன்றம் + போராட்டம், பதிவு செய்யக்கூடாது, பிரஸ் மீட் நடத்தக்கூடாது என்று தடை விதித்ததால், அவர்கள் பார்த்தது என்ன என்பது இன்னும் வெளியே தெரியவில்லை.
*2. இன்று நவம்பர் .24 - ஹைகோர்ட் கடும் எச்சரிக்கை*
மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணை. "பிரேத பரிசோதனையில் 20 காயங்கள் இருக்கு, ஆனால் இதுவரை காவலர்கள் மீது FIR கூட இல்லை, ஏன் நடவடிக்கை இல்லை? மதியம் 3.30 மணிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை" என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குடும்பத்தினர் CBI விசாரணை கேட்டு புதிய மனு போட்டுள்ளனர்.
*3. புதிய திருப்பம் - 31 மூட்டை ஏலக்காய் மீட்பு + SI கைது?*
காவல்துறை தரப்பில், தேவாரத்தில் பாலகிருஷ்ணனின் நண்பர்கள் வீட்டில் இருந்து சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள 31 மூட்டை ஏலக்காய் மீட்கப்பட்டதாகவும், 3 பேர் கைது என்றும் செய்தி வந்துள்ளது. அதே போல் தேவாரம் காவல் நிலைய SI ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
*4. மனைவி சுதாவின் புதிய குற்றச்சாட்டு*
"நவ.14 காலை, உடலை கூட பார்க்கும் முன், மதுரையில் ஒரு டீக்கடையில் வைத்து DSP ஒருவர் ரூ.3 லட்சம் + அரசு வேலை தருவதாக சமரசம் பேசினார்" என்று சுதா குற்றம் சாட்டியுள்ளார். இது குடும்பத்தினரின் குற்றச்சாட்டு, காவல்துறை இதை மறுக்கிறது.
*பகுதி 1: யார் பாலகிருஷ்ணன்?*
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே டி. அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆர். பாலகிருஷ்ணன் (42). மனைவி பி. சுதா, 2 குழந்தைகள். மதுரை அவனியாபுரத்தில் உள்ள கொரியர் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கண்டெய்னர் லாரி ஓட்டுநராக பணி. குடும்பத்தின் ஒரே நம்பிக்கை.
*பகுதி 2: சம்பவத்தின் ஆரம்பம் - நவம்பர் 3, 2026*
தேவாரத்தில் இருந்து 162 ஏலக்காய் மூட்டைகள் + பார்சல்கள் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு வந்தபோது, மதுரை மாவட்டம் வாலாந்தூர் கண்மாய் கரை / சுடுகாடு அருகே அதிகாலை லாரியில் தீ விபத்து. தீயை அணைக்க முயன்றார், செல்போனில் வீடியோவும் எடுத்தார். 50-60 மூட்டைகள் எரிந்ததாக தகவல். வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். லாரி உரிமையாளர் சொன்னதால் செக்கானூரணி காவல் நிலையம் சென்றார்.
*கொரியர் நிறுவனம் புகார்:* 162 மூட்டைகளில் 67 மூட்டைகள் காணவில்லை, மதிப்பு சுமார் ரூ.2.56 கோடி, 2 GPS கருவிகள் சேதம்.
*குடும்பத்தினர் குற்றச்சாட்டு:* இந்த தீ விபத்தே இன்சூரன்ஸ் பணத்திற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது. கொரியர் நிறுவன உரிமையாளர் + லாரி உரிமையாளர் + காவல்துறை கூட்டுச்சேர்ந்து பாலகிருஷ்ணனை சிக்க வைக்க முயன்றனர். இது குடும்பத்தினரின் குற்றச்சாட்டு.
*பகுதி 3: காவல் நிலைய மரணம் - நவம்பர் 13-14, 2026*
விசாரணைக்காக நவம்பர் 13 இரவு செக்கானூரணி காவல் நிலையம் அழைக்கப்பட்டார். வாலாந்தூர், உசிலம்பட்டி நகர், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையங்களுக்கும் அழைத்துச் சென்று விசாரித்தனர். இரவு முழுவதும், நள்ளிரவு தாண்டியும் செக்கானூரணி காவல் நிலையத்திலேயே வைத்திருந்தனர். எந்த சம்மனும் இல்லாமல் அழைக்கப்பட்டார் என்பது குடும்பத்தினர் குற்றச்சாட்டு.
*நவம்பர் 14 அதிகாலை 6 மணி:* காவல் நிலைய கழிப்பறையில் தனது சட்டையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை கூறியது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குடும்பத்தினர்: "அவர் தற்கொலை செய்யவில்லை, போலீசார் அடித்து கொன்றுவிட்டனர்" என குற்றச்சாட்டு. 4 நாட்கள் உடலை வாங்க மறுத்து அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே போராட்டம். ரூ.3 லட்சம் இழப்பீடு காசோலையை வாங்க மறுத்தனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் உடலை பெற்று சொந்த ஊரில் அடக்கம்.
*பகுதி 4: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி*
- கழுத்தில் 27 செ.மீ நீள கழுத்து இறுக்கப்பட்ட அடையாளம்
- முதுகில் 5 ரத்தக்கட்டு காயங்கள்
- இடது தோள்பட்டை, நெற்றி, கைவிரல்கள், கழுத்து, வயிற்றில் சிராய்ப்பு காயங்கள்
- கழுத்தின் வலதுபுறம் ஊசி குத்தியது போன்ற 3 அடையாளங்கள்
- மூளை, நுரையீரலில் சிறிய ரத்தக்கசிவு, நுரையீரலில் வீக்கம்
- மொத்தம் 20 காயங்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
- டாக்டர்கள் இறுதி கருத்தை ஒத்திவைத்துள்ளனர்.
*பகுதி 5: நீதிமன்ற வழக்கு - முழு விபரம்*
*முதன்மை வழக்கு:* CRL OP (MD) No. 26462 / 2026
*துணை மனுக்கள்:* CRL MP (MD) No. 24593 / 2026, CRL MP (MD) No. 24590 / 2026
*மனுதாரர்:* B. சுதா Vs தமிழ்நாடு அரசு மற்றும் பலர்
*நீதிமன்றம்:* சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை
*மனுவில் கேட்டது:* கணவர் சித்திரவதையால் தான் இறந்தார். உடலில் காயங்கள். எனவே செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர், தாலுகா ஆகிய 4 காவல் நிலைய CCTV-களை பாதுகாத்து நகல் வழங்க வேண்டும். உடல் அகற்றப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பாதுகாக்க வேண்டும்.
*அரசு தரப்பு வாதம்:* CCTV DSP-யிடம் பாதுகாப்பாக உள்ளது, நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்கப்படும். குடும்பத்தினருக்கு கொடுத்தால் CB-CID விசாரணை பாதிக்கப்படும்.
*தீர்ப்பு 1 - நவம்பர் 17, 2026 - நீதிபதி T. லிங்கேஸ்வரன்*
4 காவல் நிலையங்களின் நவ.13, 14 CCTV-களின் 2 நகல்களை சீலிட்ட உறையில் BSA பிரிவு 63 சான்றிதழுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு. FIR-ல் டிஜிட்டல் கையொப்பம் இறந்து 4 மணி நேரம் கழித்து போடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
*தீர்ப்பு 2 - நவம்பர் 20-21, 2026 - நீதிபதி R. விஜயகுமார்*
> "பிரேத பரிசோதனை அறிக்கையில் காயங்கள் இருப்பதை புறக்கணிக்க முடியாது. CCTV மட்டுமே விசாரணையின் திசையை காட்டும்."
> "விசாரணை நடத்தும் அமைப்பே குற்றம் சாட்டப்பட்டிருக்கும்போது, குடும்பத்தினர் CCTV பார்க்க அனுமதிக்க வேண்டும்."
> "ஒரு புகார்தாரருக்கு காவல் நிலையத்தில் தற்கொலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஏன் இரவு முழுவதும் வைத்தீர்கள்?"
> "தேர்ந்தெடுக்கப்பட்ட CCTV மட்டும் எப்படி லீக் ஆனது? படத்தின் டீசர் போல் ஏன் வெளியிட்டீர்கள்? முழு காட்சியை ஏன் வெளியிடவில்லை?"
> "காவல் நிலையத்தில் ஒருவர் இறந்தால் புகைப்படம் எடுக்காதது ஏன்?"
*உத்தரவு:* மனைவி சுதா + சகோதரி ஜெயா + சகோதரர் மணிகண்டன் + வழக்கறிஞர் ஆகியோர் நவம்பர் 23 CB-CID SP அலுவலகம், மதுரையில் 4 காவல் நிலைய CCTV-யையும் பார்க்கலாம். செல்போன் கொண்டு செல்லக்கூடாது, பதிவு செய்யக்கூடாது, பார்த்த பிறகு பிரஸ் மீட் / பொது விவாதம் நடத்தக்கூடாது. பார்த்ததை மனித உரிமை ஆணையம் போன்ற சட்ட அமைப்புகளில் மட்டும் பயன்படுத்தலாம். இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு மட்டும், மற்ற வழக்குகளுக்கு முன்னுதாரணம் ஆகாது. வழக்கு முடித்து வைக்கப்பட்டது, விரிவான உத்தரவு பின்னர்.
*பகுதி 6: சட்டம் என்ன சொல்கிறது? - மீறப்பட்ட சட்டங்கள்*
*1. BNSS பிரிவு 196 (முன்பு CrPC 176):* காவலில் மரணம் என்றால் காவல்துறை விசாரிக்கக்கூடாது, நீதித்துறை நடுவர் தான் விசாரிக்க வேண்டும். இங்கு பேரையூர் நீதித்துறை நடுவர் ஆனந்தராஜா விசாரணை நடத்தி வருகிறார்.
*2. BNSS பிரிவு 193:* உடலை பார்த்து Panchanama செய்து புகைப்படம், வீடியோ எடுக்க வேண்டும். இங்கு புகைப்படம் இல்லை - இது சட்ட மீறல்.
*3. BNSS பிரிவு 58 + அரசியலமைப்பு பிரிவு 22(2):* கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும். கைது செய்யாமல், சம்மன் கூட கொடுக்காமல் இரவு முழுவதும் வைத்தது சட்டவிரோத காவல்.
*4. D.K. Basu Vs மேற்கு வங்க அரசு (1997) உச்ச நீதிமன்றம்:* கைது செய்யும்போது 11 வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். கைது Memo, உறவினருக்கு தகவல், மருத்துவ பரிசோதனை கட்டாயம்.
*5. Paramvir Singh Saini Vs பல்பீர் சிங் (2020) உச்ச நீதிமன்றம்:* அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV கட்டாயம், 18 மாதங்கள் சேமிக்க வேண்டும்.
*6. BSA பிரிவு 63:* CCTV ஆதாரமாக ஏற்க சான்றிதழ் கட்டாயம்.
*7. அரசியலமைப்பு பிரிவு 21:* ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை உண்டு. காவலில் இருப்பவரையும் அரசு பாதுகாக்க வேண்டும்.
*8. NHRC வழிகாட்டுதல்:* காவலில் மரணம் நடந்த 24 மணி நேரத்தில் NHRC-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிரேத பரிசோதனை வீடியோ எடுக்கப்பட வேண்டும்.
*9. BNS 2023-ல் போடக்கூடிய பிரிவுகள்:* பிரிவு 103 - கொலை, பிரிவு 105 - கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை, பிரிவு 120(1) - காயம் ஏற்படுத்துதல், பிரிவு 127(2) - சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், பிரிவு 198 - பொது ஊழியர் சட்டத்திற்கு மாறாக செயல்படுதல், பிரிவு 229 - சாட்சியத்தை அழித்தல்.
*10. BNSS பிரிவு 173:* புகார் கிடைத்தவுடன் FIR போட வேண்டும். நவ.4 புகார், நவ.13 FIR, நவ.14 டிஜிட்டல் கையொப்பம் - 9 நாட்கள் தாமதம் என்பது வழக்கின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும்.
*11. CBI விசாரணை:* State of West Bengal Vs Committee for Protection (2010) தீர்ப்புப்படி, விசாரணை நடத்தும் அமைப்பே குற்றம் சாட்டப்பட்டிருக்கும்போது உயர் நீதிமன்றம் CBI-க்கு மாற்றலாம். அதனால் தான் குடும்பத்தினர் CB-CID வேண்டாம், CBI வேண்டும் என கேட்கின்றனர்.
*பகுதி 7: தற்போதைய விசாரணை நிலை*
- CB-CID விசாரணை - மதுரை தெற்கு மண்டலம்
- நீதித்துறை நடுவர் விசாரணை - பேரையூர் நீதித்துறை நடுவர் ஆனந்தராஜா
- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் - இதில் பெண் காவலர் கலைச்செல்வியும் அடங்குவர் என்று செய்திகள்
- குடும்பத்தினர் CBI விசாரணை கேட்டு வருகின்றனர்.
- மக்கள் கண்காணிப்பகம், சித்திரவதைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை அமைப்பு, CPM மதுரை ஊரக மாவட்ட செயலர் K. ராஜேந்திரன் ஆகியோர் காவலர்கள் மீது வழக்குப்பதிவு + கைது கோரி வலியுறுத்தல்.
*பகுதி 8: கனிமொழி MP கேள்வி*
மதுரை சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் X-ல் பதிவு:
> "நவம்பர் 4-ம் தேதியே புகார், நவம்பர் 13-ல் தான் FIR, நவம்பர் 14-ல் தான் டிஜிட்டல் கையொப்பம். தூக்கில் தொங்கிய நிலையில் புகைப்பட ஆதாரம் இல்லை. CCTV கசிவு குறித்து விசாரணை நடக்கிறது. இத்தனை சந்தேகங்கள் இருக்கும்போது முதல்வர் விஜய் இன்னும் எத்தனை நாட்கள் மௌனம் காப்பார்? காவல்துறை உண்மையில் அவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? தந்தையை இழந்த 2 குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும்."
*பகுதி 9: கண்டன ஆர்ப்பாட்டம் -!*
1. CBI விசாரணை வேண்டும்
2. சம்பந்தப்பட்ட காவலர்கள் உடனடியாக கைது
3. குடும்பத்திற்கு உரிய நிதியுதவி + குழந்தைகள் கல்வி பாதுகாப்பு
4. முழு CCTV வெளியிட வேண்டும் என கோரிக்கை
*FINAL CAPTION:*
> பாலகிருஷ்ணன் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டாரா? பிரேத பரிசோதனை, FIR தாமதம், CCTV கசிவு, புகைப்பட ஆதாரம் இல்லாதது - அத்தனையும் சந்தேகத்தை கிளப்புகிறது. சட்டப்படி காவலில் இருப்பவரின் உயிருக்கு அரசே பொறுப்பு. நீதிமன்றமே கேள்வி கேட்டுவிட்டது. இனியும் மௌனம் ஏன்?
> வழக்கு எண்: CRL OP (MD) 26462/2026
> நவம்பர் .25, காலை 10 மணி, தேனி பங்களாமேடு பகுதியில் நடப்பதாகத் தகவல்








கருத்துகள்