முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமெரிக்காவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1255 மரணங்கள் கொரானாவால்

அடுத்த நாட்டின்  மரணத்தில் மகிழ்ந்த நாட்டினரின் சாலையெல்லாம் பிணங்கள்
கொத்துக் கொத்தாக அமெரிக்கா வில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1255 மரணம். அமெரிக்கா வில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1255 மரணம். இரவு 10:30 மணி வரை 13,868 நபர்கள் இறந்துள்ள னர்.4,06,697 நபர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். 3,70,796 நபர்கள் தீவிர தொற்றில் உள்ளனர்.
9,220 நபர்களின் உயிர் மிகவும் கவலை க்கிடமாக உள்ளது.
இன்று மட்டும் கொரானா புதிதாக பிடிக்கப்பட்டவர்கள் 6,362 நபர்கள்
இன்றைய அமெரிக்கத் தலை முறையின் மக்கள், அமெரிக்கா அல்லாத வெளிநாட்டில் அமெரிக்கர்களால் கொல்லப்படும் செய்தியை மட்டுமே பார்த்து கொண்டிருந்திருப்பார்கள்.
வியட்நாம் போரில் உயிரற்ற அமெரிக்கா ராணுவத்தினரின் சவப்பெட்டிகள்  அந்நாட்டு மண்ணில் தரையிறங்கும் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அமெரிக்கர்கள் தங்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கடுத்து தற்போது "கொரோனா" உயிரின் மதிப்பை அமெரிக்கர்க ளுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றதோ என்ற நிலை 1975க்கு பிறகு இன்று உலகம் அமெரிக்கர்களின் கண்ணீர், கதறலைப் பார்க்கிறார் கள்.ஒவ்வொரு முறையும் பிற நாடுகளில் கொத்து கொத்தாக கொலை செய்து விட்டு, அன்றைய தினம் மகிழ்ச்சியோடு உறங்கிய மக்களுக்கு, தன்னால் அழிக்கப் படும் இடங்கள் என்னவெல்லாம் வேதனைப்படும் என்பதை அமெரிக்கா மக்கள் முதல் முறையாக தங்கள் சொந்த நாட்டிலே பார்க்கிறார்கள்.
கொரானாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட மரணத்தை விட, அமெரிக்கர்களால் இந்த உலகத்தில் இறந்து போன பொதுமக்கள்  அதிகம் தானே 
வியட்நாம்,கொரியா,கியூபா,பாலஸ்தீனம்,ஈராக்,ஈரான்,மியான்மர்,மெக்சிக்கோ,வெனிசுலா, எத்தியோப்பியா,சோமாலியா, பிலிப்பைன்ஸ், லெபனான், காங்கோ,கிரேனடா,பனாமா,சிலி
இந்தோனேஷியா,செசன்யா,ஸ்லோவேக்கியா, ஆப்கானிஸ்தான், சிரியா என இன்னும் பட்டிய லிட்டுக் கொண்டே போகலாம். 
இந்த நாடுகளில் எல்லாம் நேரடியாக மற்றும் மறைமுகமாக நடத்திய செயல் என்ன மனிதாபி மானம். இந்த நாடுகளுக்குப் பொருளாதார தடை என்ற பெயரில் மருத்துவத் தடையை இன்று வரை  விதித்துள்ள நாடு அமெரிக்கா.அதாவது மருத்துவத்தடை என்றால், எந்த நாட்டு மருத்துவர்களும் இந்த நாட்டு மக்களுக்கு மருத் துவம் செய்யக் கூடாது. மேலும் இந்த நாடுகளுக் கெல்லாம் மருந்து பொருட்கள் கொடுக்கக் கூடாது. மருத்துவம் சம்பந்தமான எந்த சிறு உபகரணங்கள் கூட கொடுக்கக் கூடாது என்றே தடை.எத்தனை பெரிய கொடூரமான தடை என உணருங்கள்.அதன் கொடூரத்தை இன்று அமெரிக்காவே உணர்ந்துள்ளது. மருந்துப் பொருட்கள் பற்றாக் குறையால் சீனாவிடம் கையேந்தி விட்டது.
இந்தியாவிடம் உதவி கேட்பதில் கூட அமெரிக்காவின் முதலாளித்துவ ஆணவம் கொஞ்சமும் குறையாமல் மிரட்டல் பாணியில் ட்ரம்ப்  கையேந்தி விட்டார். மருந்துப் பொருட்கள் தடையால் பிற நாடுகள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை, அமெரிக்கர்கள் தங்கள் அரசாங்கம் மூலம் தங்களது பாதிப்பில் பாடம் கற்று வருகிறார்கள். சிரியாவில் இன்று அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் 2000 பேர் மரணம். ஆப்கானிஸ் தானில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் குறைந்தது 3000 பேர் கொல்லப் பட்டனர் என்ற செய்தியை நாம் பார்த்திருக்கிறோம்.அதை ரசித்து விட்டு அமெரிக்கர்களும் கடந்திருப்பார்கள்.ஆனால் இன்று உலக மக்கள் யாரும் அமெரிக்கா வின் மரணத்தை ரசிக்கவில்லை. மாறாக அனைத்துலக மக்களும் அமெரிக்காவிற்காக உதவவும், பிரார்த்தனையும் செய்கிறார்கள்
உலகம் இதற்கு முன், இதுபோன்ற ஒரு பாதிப்பைச் சந்தித்த பொழுது தான், அதை தனக்கு சாதகமாக்கி அமெரிக்கா வல்லரசானது.
பிறர் பாதிப்பில் தான் நாம் வல்லமை பெற முடியும் என்று நினைத்த அமெரிக்கா. வல்லமை அடைந்தது. வல்லரசும் ஆனது.
நம்மை போல் பிறர் நம் மீது வல்லமை செலுத்த நினைப்பார் களே என்று யோசிக்கவில்லை.
இன்று உலக பாதிப்பு என்பதை விட, அமெரிக்காவின் பாதிப்பில் தான் பல நாடுகள் தங்களது அமெரிக்கா ஆதரவு என்ற நிலையிலிருந்து மாறப்போகின் றன, குறிப்பாக வெகு விரைவில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக் கும் அமெரிக்காவுக்கும் இடையே முரண்பாடுகள் வெடிக்கும் நிலை, 
மறுபுறம் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள்ளாகவே முரண் பாடுகள் வெடிக்கும்.ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையே ஒரு புதிய புரிந்துணர்வும் ஏற்படும்.
ஏகாதிபத்திய நாடுகளுக்கிடை யேயான முரண்பாடு வெடிக்கும்.
தென் அமெரிக்காக் கண்ட நாடுகளில் அணிச்சேர்க்கை வேறுபடும்.ஒட்டு மொத்தத்தில் உலக காவல்காரர்  அமெரிக்கா பல பாடங்களை கற்க வேண்டிய தருணத்தில் உள்ளது. சீனா 89 நாடுகளுக்கு  கொரானாவையும், கொரோனா வைரஸ்சைத் தடுப்புக்கான மருந்தையம் தர வியாபார ஒப்பந்தம் செய்துள்ளது.
திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அமெரிக்கா சத்தமில்லா மல் பிணங்களைப் புதைத்து வருகிறது. மிக எளிதாக கொலை செய்து விட்டு சென்று விடும் அமெரிக்கர்களுக்கு, இறந்த பிணங்களை எவ்வளவு சிரமத் தோடு தான் அப்புறப்படுத்து வார்கள் என்பதை தற்போது தான் தெரிந்து கொண்டு வருகிறார்கள்.
மரண ஓலத்தில் மகிழ்ச்சி கண்ட, மக்களின் மரண ஒலத்தில் நிச்சயம் நாம் மகிழ்ச்சி காணும் மனம் அமெரிக்கர் போல் நமக்கில்லை.அனைத்து மக்களும் அமெரிக்க மக்களும் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வரவே விரும்புகிறோம்.      இதுவே அமெரிக்காவின் தற்போதைய நிலவரம். அரசு ஆதரவோடு நடைபெறும் உற்பத்திப் பொருட்கள் மட்டுமே அங்கு தாராளமாக கிடைக்கின்றன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...