தமிழகத்தின் முதலமைச்சரின் செயல்பாடு கொரானா தடுப்பு நடவடிக்கையில் அணைவரும் பாராட்டும்படி இருக்க அதில் மற்றொருவர் சுகாதாரம் என்பது தமிழகத்தில் விஜயபாஸ்கர் மட்டும் தான் என்பதை மக்கள் மறந்து அதிகம் பேசும் பெயர் இரண்டு வாரங்களாக தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர்.பீலா ராஜேஷ் தமிழ்நாட்டில் ஒரு குடும்பப் பெயர் போலாகி வருகிறது.
கோவிட்- 19 எனும் கொரானா வைரஸ் தமிழ்நாட்டுக்குள் வந்ததும், தமிழக முதலமைச்சரும், துறை அமைச்சரும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். துறை சார்ந்த செயலாளர்களும் உடன் களத்தில் இறங்கினர். தொற்று நோய் தொடர்பான பிரச்சனை என்பதால் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கண்காணிப்பில் அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.
தொடர்ந்து பேட்டிகள் மூலம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
இந்த பணிகள் அனைத்திலும் உடனிருந்து கவனித்து வரும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பேற்று தினசரி தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து வரத் தொடங்கியதும் யார் இவர் என்ற கேள்விகள் எல்லோருக்குள்ளும் எழுந்தது.
மிகவும் நேர்த்தியான தகவல்கள், அரசியல் சார்பற்ற தேவையான பதில்கள், இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் என வெகு சீக்கிரமாகவே வெகுஜன மக்களுக்கு நடை,உடை,பாவனை,செயல்பாடு என பிடித்தமானவராகிப் போனார். இன்னைக்கு என்ன சொன்னார், எத்தனை பேர் குணமடைந்தார்கள், வேறு எங்கு தொற்று பரவியுள்ளதென கொரோனா தொடர்பான அன்றாடத் தகவல்களை அவரிடம் எதிர்ப்பார்க்கும் போக்கு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் என்பவருக்கு ஒரு கட்சி சாயம் இருப்பதை தவிர்க்க முடியாது தான். ஆனால் ஒரு துறைச் செயலாளர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை உணர்ந்து, ஊடகங்களில் பேசும் போது தனி மரியாதை ஏற்படுவதும் இயல்பு தான், அதுவும் இன்று மிக முக்கியமானப் பிரச்சனையை முன்னின்று சமாளித்து வருபவர் என்பதால் அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
சிலர், பீலா ராஜேஷ் கேரளாவைச் சேர்ந்த அந்தணராக இருக்குமோ என்றும் நினைக்கின்றனர். ஆனால், அவர் ஒரு தமிழ்நாட்டுப் பெண்மணி என்பது பலரும் வியக்கும் காரணம் புதுக்கோட்டைக் காரரை விட இந்த தூத்துக்குடி க்காரர் நற்பெயரைத் தட்டிப் படிக்கத் காரணம் ஒரு ஜனத்திரள் யுத்தம் அவரது செயல்பாடு பரவலாகிப் போய் அணைவரின் எதிரபார்ப்பாகிப் போன டாக்டர் பீலா ராஜேஷின் தந்தை எல்.என்.வெங்கடேசன் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.ஓய்வு பெற்ற காவல்துறை டி ஜி பி தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே வாழையடி கிராமம் அவரது ஊர் அவர் தாயார் ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.
எல்.என்.வெங்கடேசன் – ராணி வெங்கடேசன் தம்பதியினரின் மகள் தான், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக பணியாற்றிவரும் டாக்டர்.பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். தமிழக அரசின் பல பிரிவுகளில் செயலாற்றி வந்தவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்