இரண்டாம் உலகப்போர் 1939 செப்டம்பர் முதல் நாசி ஜெர்மனி யின் போலந்து படையெடுப்புடன் துவங்கிய போர் ஒரு புறம் பிரிட்ட னுடன் சேர்ந்திருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியில் மறுபுறம் நாசி ஜெர்மனி ,இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணி 1939–41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றியதில் பிரிட்டன் மட்டும் தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்கா வைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930 ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த ஜப்பான் அச்சு அணியில் இணைந்தது.டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்கு ஆயுதம் உதவிய அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட ஜப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியா வின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமன போர் பாதகமானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட,. வடக்கு ஆப்பிரிக்கா விலும் அச்சுப் படைகள் முறியடிக் கப்பட பின்வாங்கியது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக் கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங் கின .1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுக்க ,இத்தாலி சரணடைய, 1944 ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க,பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி இரண்டு வருடத்தில் தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனி சரணடைந்தது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.1943-45 கால கட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் ஜப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945 ல் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்க ளில் அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாகச் ஜப்பானும் சரணடைய இரண்டாம் உலகப் போர் முடிந்தது போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட, காலனி ஆதிக்க ஐரோப்பியப் பேரரசுகள் வலிமையிழந்தன,ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனி மயம் அழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாக மாறிப் பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காக ஐக்கியநாடுகள் சபை அமைப்பு உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் எனும் Second World War 1939-45 காலத்தில் நடைபெற்ற தில் அனைத்து பெரும் அரசுகள் உலக நாடுகளுள் பெரும்பாலா னவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் கண்டிராதபடி மிகப்பெரும் போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்தப் பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார்வளங் களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.அப்படி நடந்த போரில் தமிழ்நாடு மாநிலமாக அப்போது இல்லை அது சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இடைப்பட்ட எல்கைப்பகுதி மக்கள் அணைவரும் அந்த 1942 கால கட்டத்தில் ஊரடங்கு கடைப்பிடித்த னர் அப்போது மின்விளக்குகள் ஒரு குறிப்பிட்ட சில குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்திய காலம் அது அப்போது ஒரு ஊரடங்கு அறிவிப்பு தான் இந்தப் புகைப்படம் இந்தக் காலத்தில் விளக்கு அணைத்து வைப்பது ஏதிரி நாடு நம் மக்கள் மீது இரவில் குண்டு போட்டுவிடக்கூடாது என்பதற்கா வே . இது ஒரு வரலாற்றுப் பதிவு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்