தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை டாக்டர் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று வந்ததுள்ளார். தொடர்ந்து 4 நாட்களாக மருத்துவமனையில் பணியில் இருந்தாராம். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காயல்பட்டினம் மருத்துவமனை மூடப்பட்டது. இதற்கான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில் டெல்லி சென்று வந்த செய்துங்கநல்லூர் பகுதியை சார்ந்த ஒருவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது இருப்பிடத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் தூர சுற்றுப்புற பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பு கொண்டவர்கள், அவர் சென்ற இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.டெல்லி சென்று வந்த செய்துங்கநல்லூர், காயல்பட்டினம், பேட்மாநகரம், கயத்தார் மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 7 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்