மூன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்ட திருச்சி விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்களுக்கு, அவை கையாளும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தர நிலை (கிரேடு) அளிக்கப்படுகிறது.
முதல் நிலைக்கு நிர்வாக இயக்குநர், இரண்டாம் நிலைக்கு பொது மேலாளர், மூன்றாம் நிலைக்கு இணை பொது மேலாளர், நான்காம் நிலைக்கு முதுநிலை மேலாளர் அல்லது உதவி பொது மேலாளர் தகுதியுடையவர்கள் விமான நிலைய இயக்குநராக நியமிக்கப்படுவர்.
இந் நிலையில் மூன்றாம் தர நிலையில் இருந்த திருச்சி விமான நிலையத்தின் மூலம் கடந்த 2019-20 ஆண்டில் 8,895 சர்வதேச விமான சேவைகளும், 5,519 உள்நாட்டு விமான சேவைகளும், 69 பிற காரணங்களுக்கான விமான சேவைகளும் என மொத்தம் 14,483 விமான சேவைகள் இயக்கப்பட் டுள்ளன.இவற்றின் வழியாக 13 லட்சத்து 14 ஆயிரத்து 839 சர்வதேச பயணிகள், 2 லட்சத்து 97 ஆயிரத்து 020 உள்நாட்டு பயணிகள் என 16 லட்சத்து 11 ஆயிரத்து 859 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஒரே ஆண்டில் இங்கு வந்து சென்ற பயணிகளின் எண்ணிக் கை 15 லட்சத்தைத் தாண்டியதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தை மூன்றாம் நிலை யிலிருந்து, இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தி இந்திய விமான நிலைய ஆணையக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் குணசேகரன்''தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் விமானநிலைய நிர்வாக கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அதற்கேற்ப கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்''என்றார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்