முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் அறிவித்த இரவு 9 மணி 9 நிமிடம் 5 ம் தேதி மின்வாரியம் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை இரவில் 9 மணிக்கு 9 நிமிடம்  விளக்கேற்றக் கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள சூழலில்  பிரதமர் நரேந்திர மோடி வீடியோ செய்தி வெளியிட்டார். அப்போது ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தரும் மக்களுக்கு பிரதமர் நன்றி கூறினார். இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதார ணமாக விளங்குகிற தெனக் கூறினார். வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்விளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை நடைமுறையில் கொண்டு வர மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் குறிப்பிட்ட  வரம்பில் மின் அதிர்வெண் வைத்திருக்கவும் அனைத்து மாநில மின்துறைக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கும் படி செய்யப்பட்டது அதன்படி மாநில மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதன் படி வரும் 5 ம் தேதி இரவில் 9 மணிக்கு மின் நிறுத்தம் ஒன்பது நிமிடம் நீடிக்கும் ஒரே நேரத்தில் எல்லோரும் மின் தடை செய்ய ஒரு ஏற்பாடு இதுவாகும்.நாளை 9 நிமிட லைட் ஆஃப் செய்வதில் மின் தொடரமைப்பிலுள்ள சிக்கலை எப்படிச் சமாளிப்பார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டபடி 9 நிமிடங்கள் அனைத்து விளக்குகளையும் அணைப்பதால் மின் தொடரமைப்பில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மின்வாரியத் துறை அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க
பவர் கிரிட்டில் எழும் சிக்கலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதன்மூலம் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அனைவரின் பங்களிப்பையும் உறுதிப்படுத்தும் வண்ணம் ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு டார்ச் லைட், அகல் விளக்கு அல்லது மொபைல் லைட் அடிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இது ஒட்டுமொத்த மின் தொடரமைப்பில் பிரச்சினை ஏற்படுத்துமா என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் மின்சாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். நம் நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும் போது குறிப்பிட்ட அதிர்வெண்களுக்குள் GRID எனப்படும் மின் தொடரமைப்பு பராமரிக்கப்படுகிறது.
அதாவது 49.95 ஹெர்ட்ஸில் இருந்து 50.05 ஹெர்ட்ஸ் வரை பராமரித்து வருகின்றனர். இதனை CERC எனப்படும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்பார்வை செய்து வருகிறது. இந்தியாவின் மின்சாரத் தேவை பெரிய அளவில் அதிகாரித்தாலோ அல்லது குறைந்தாலோ மேற்சொன்ன அதிர்வெண்களில் மாற்றம் ஏற்படும். இதன் விளைவாக மின் உற்பத்தி மற்றும் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
அனைத்து இந்தியர்களும் தங்கள் வீட்டின் மின் விளக்குகளை அணைத்தால் மின்சாரத் தேவை பெருமளவு குறையும். இதன்மூலம் அதிர்வெண்களில் மாற்றம் ஏற்பட்டு மின் தொடரமைப்பு முடங்கும் நிலை ஏற்படலாம். இதுதொடர்பாக பி.ஜி.சி.ஐ.எல்(PGCIL) மற்றும் லோட் டிஸ்பேச்சர் அதிகாரிகளுடன் மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் ஏப்ரல் 5ஆம் தேதி அன்று எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில மின்வாரியங்களுடன் ஆலோசனை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷனும்( POSOCO) உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது 5 மண்டல லோட் டிஸ்பேட்ச் சென்டர் மற்றும் என்.எல்.டி.சி (NLDC) ஆகியவற்றுடன் இணைந்து திட்டமிடுமாறு வலியுறுத்தப் பட்டுள்ளது.எனவே நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை திடீரென குறைந்தாலும் அதிர்வெண்களில் பாதிப்பு ஏற்படாமல் சரிசெய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த லைட் ஆஃப் சமயத்தில் நிலக்கரி மூலம் இயங்கும் மின் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் என்று மின்துறை பொறியாளர்கள் கூறுகின்றனர். அதேசமயம் எரிவாயு மூலம் இயங்கும் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள் சிறிது நேரத்திற்கு முன்பாக நிறுத்தப்படக்கூடும்.9 நிமிடங்கள் கழித்து மீண்டும் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ளலாம். கோவிட்-19 பாதிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை 20 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கேற்ப அதிர்வெண்களை நிலைப்படுத்தி மின் தொடரமைப்பு பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த சூழலில் ஏப்ரல் 5ஆம் தேதி ஏற்படப் போகும் மின்சாரத் தேவை சரிவு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அந்த சூழலை எளிதில் கையாண்டு விடலாம் என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 2, 2020 நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை 1,25,817 மில்லியன் யூனிட். கடந்த 2019ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் மின்சாரத் தேவை 1,68,326 மில்லியன் யூனிட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...