மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை.கொரானா தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு அமலிலுள்ள போது மாவட்டங்களில் தற்போது நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.
கொரானா பரவலைத் தடுப்பது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொரானாவை தடுக்க ஒவ்வொரு மாவட்ட வாரியாக செய்து வரும் பணிகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குறித்தும் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.மேலும் மாவட்டத்திற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கே.பழனிசாமி கருத்து கேட்பும் நடந்தது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்