விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில். இயக்குநர் ஹலிதா ஷமீம் விருது வென்றார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா, சிம்ரன் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் ஜோதிகா பேசும்போது, "தமிழ் சினிமாவில் குறைவான பேருக்கே காதலை மையப்படுத்திக் கதை எழுதும் புத்தி இருக்கிறது. கண்டிப்பாக இதைச் சொல்லியே ஆகணும். ஆகையால்தான் 'சில்லுக் கருப்பட்டி' படத்தைப் பாராட்டினேன். அந்தப் படத்தை 2டி நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்பது எனது முடிவுதான். அந்தப் படத்திலிருந்த காதல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த ஒரு நல்ல காதல் படம் என்றால் அது 'சில்லுக் கருப்பட்டி'தான். இதை தைரியமாகச் சொல்வேன். மற்ற படங்கள் அனைத்திலுமே காமம்தான் இருந்தது. பெண்களின் பார்வையில் அது காதல் அல்ல, காமம்தான். என்னையும் சூர்யாவையும் பொறுத்தவரையில் காதல் படங்களை எழுத பெண் இயக்குநர்கள் முன்வர வேண்டும்” என்று பேசியுள்ளார்.
ஜோதிகாவின் பேச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹலிதா ஷமீம், "ஜோதிகா மேடம், இந்த மேடையில் என்ன சொன்னாரோ அதைத்தான் படம் பார்த்த பிறகும் என்னிடம் சொன்னார். அவர் இப்படிச் சொன்னார் என்று சொல்வதற்கே எனக்குக் கூச்சமாக இருக்கிறது. ஏனென்றால் அது அவ்வளவு பெரிய வார்த்தை. அது எனக்கு மட்டுமல்ல, நேர்த்தியாக கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கும் எல்லோருக்கும் ஊக்கமூட்டுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
வெறும் நன்றி என்று சொல்லிக் கடந்து போக முடியாத ஒரு பந்தம். எங்கள் மொத்தக் குழுவிடமும் சூர்யா இவ்வளவு கனிவாக, எளிமையாக இருப்பார் என்று நினைக்கவில்லை. இந்தப் படம் குறைந்த நேரத்தில் பலரிடம் சென்று சேரக் காரணம் படம் மீது அவர்களுக்கு இருந்த அன்பு தான்" என்று தெரிவித்துள்ளார்.இப்படத்தின் உரிமையை நடிகர் சூரியாவின் நிறுவனம் பெற்றுள்ளதால் இந்தப் பாராட்டா அல்லது விளம்பரயுத்தியா உண்மையில் படம் நன்றா என்பது வெளிவந்த பின்பே தெரியும்.நாமும் நடிகர் சிவக்குமார் நடித்த பாடல் தான் நினைவு வருகிறது ''வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல''.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்